Latest Updates
-
நவம்பர் 11, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கேட்ட வரம் கிடைக்கும் அதிர்ஷ்ட நாளாக இருக்குமாம் -
நவம்பர் 13-ல் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: இந்த 4 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது! -
18 மாதங்களுக்கு பின் ராகு மகர ராசிக்கு செல்வது இந்த 4 ராசிக்காரர்களை ஆபத்தில் தள்ளப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
1 கப் மீல் மேக்கர் இருந்தா இந்த மாதிரி வித்தியாசமான குருமா செஞ்சு பாருங்க - சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
உங்கள் முழங்கால் ரொம்ப கருப்பா இருக்கா? அப்ப இந்த பொருட்களில் ஒன்றை வைச்சே வெண்மையாக்கிரலாம் -
பார்லர் போகாமலே பளபளப்பான முகம் வேண்டுமா? இதோ 5 சூப்பரான சந்தன ஃபேஸ் பேக்குகள்! -
நியூமராலஜி படி இந்த 5 எண்கள் கோடீஸ்வரராக்கும் ஆற்றலும், சக்தியும் கொண்டவையாம் - எந்தெந்த எண்கள் தெரியுமா? -
டீக்கடை மெது பக்கோடா - எப்படி செய்றதுன்னு பாத்து ஈவ்னிங் டைம்-ல ட்ரை பண்ணுங்க.. -
இந்த படத்தில் உங்க கண்ணுக்கு முதலில் என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவர்ன்னு சொல்றோம்.. -
Vastu Tips: வாஸ்து படி வீட்டின் இந்த இடத்தில் அல்லது திசையில் செருப்பை வைத்தால் துரதிர்ஷ்டம் விடாம துரத்துமாம
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
Pachai Payaru Dosa With Inji Chutney Recipe In Tamil: காலையில் டிபனுக்கு தோசை மாவு இல்லையா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு நல்ல சுவையான, அதே சமயம் சத்தான ஒரு டிபனை செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் புரோட்டீன் அதிகம் நிறைந்த பச்சை பயறு தோசையை செய்து கொடுங்கள். இந்த தோசைக்கு மாவு அரைத்த உடனேயே சுட்டு சாப்பிடலாம். அதுவும் இந்த தோசைக்கு இஞ்சி சட்னி மிகவும் சுவையாக இருக்கும்.

உங்களுக்கு இந்த பச்சை பயறு தோசையையும், இஞ்சி சட்னியையும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சை பயறு தோசை மற்றும் இஞ்சி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
தோசைக்கு...
* பச்சை பயறு - 1 கப்
* இட்லி அரிசி - 1/4 கப்
* வெந்தயம் - 1 டீஸ்பூன்
அரைப்பதற்கு..
* பச்சை மிளகாய் - 4
* வரமிளகாய் - 2
* இஞ்சி - 1 இன்ச்
* கறிவேப்பிலை - 2 கொத்து
* சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* ஊற வைத்த அரிசி பருப்பு
* தண்ணீர் - தேவையான அளவு
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
இஞ்சி சட்னிக்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன் + 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி - 4 இன்ச் (மெல்லியதாக நறுக்கியது)
* புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* பொடித்த வெல்லம் - 2 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
சட்னி தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சை பயறு, இட்லி அரிசி மற்றும்
வெந்தயத்தை எடுத்துக் கொண்டு நீரில் 8 மணிநேரம் ஊற வைத்து எடுத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் பச்சை மிளகாய், வரமிளகாய், இஞ்சி,
கறிவேப்பிலை, சீரகம், உப்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் ஊறு வைத்த அரிசி பருப்பை சேர்த்து, சிறிது நுரை ஊற்றி
நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை எடுத்துக் கொண்டு, அத்துடன்
மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு
தேவையான அளவு நீரை ஊற்றி கலந்து, 10 நிமிடம் மூடி வைக்க வேண்டும்.
* பின்பு சட்னிக்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, மல்லி, சீரகம்
சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வறுத்து, அனைத்து
பொருட்களையும் ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய இஞ்சியை சேர்த்து நன்கு
மொறுமொறுவென்று வரும் வரை வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் புளியை சேர்த்து நன்கு வதக்கி இறக்கிக் கொள்ள
வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்கள் அனைத்தையும் எடுத்துக்
கொண்டு, அதில் சுவைக்கேற்ப உப்பு, பொடித்த வெல்லம் சேர்த்து, சிறிது
நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து
தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், இஞ்சி சட்னி தயார்.
* இறுதியாக ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும்,
அரைத்து வைத்துள்ள மாவைக் கொண்டு தோசை சுட்டு எடுத்தால், பச்சை பயறு
தோசை தயார்.



Click it and Unblock the Notifications
