18 மாதங்களுக்கு பின் ராகு மகர ராசிக்கு செல்வது இந்த 4 ராசிக்காரர்களை ஆபத்தில் தள்ளப்போகுதாம் - உங்க ராசி என்ன?

நவகிரகங்களில் ராகு மற்றும் கேது எதிர்மறையான பலன்களை அளிக்கும் நிழல் கிரகங்களாகக் கருதப்படுகின்றன. ராகு ஒவ்வொரு ராசியில் 18 மாதங்கள் நிலைபெற்றிருந்து அதன்பின் ராசியை மாற்றுகிறார். அப்படி ராசியை மாற்றும் போது அது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பலவிதமான மாற்றங்களை ஏற்படுத்தும்.

Rahu Transit in Capricorn Bring Financial Troubles To These Zodiac Signs

நவம்பர் 25 ஆம் தேதி ராகு பகவான் கும்ப ராசியிலிருந்து நகர்ந்து மகர ராசிக்குள் வக்ர நிலையில் நுழையப் போகிறார். ராகுவின் இந்த ராசி மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு நேர்மறையான பலன்களை அளிக்கப்போகிறது. ஆனால் சில ராசிக்காரர்களுக்கு இந்த ராகுவின் ராசி மாற்றம் மோசமான காலகட்டமாக இருக்கப்போகிறது. அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் மிகவும் சோதனையான காலகட்டத்தை அனுபவிக்கப்போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த ராகு பெயர்ச்சி கலவையான பலன்களை அளிக்கப்போகிறது. இந்த ராகு பெயர்ச்சியின் விளைவாக அவர்களின் நண்பர்களுடனான உறவுகளில் சிக்கல்கள் ஏற்படலாம். நண்பர்களின் நம்பிக்கையைப் பெற அவர்கள் கடுமையாக போராட வேண்டியிருக்கும். அவர்களின் தொழில் வாழ்க்கையைப் பொறுத்தவரை, வேலையில் அதிக தடைகளைச் சந்திக்க நேரிடும், அதில் வெற்றிபெற கடுமையான முயற்சிகளை செய்ய வேண்டியிருக்கலாம்.

வியாபாரத்தைப் பொறுத்தவரை, அவர்களின் போட்டியாளர்களிடமிருந்து அதிக போட்டியை எதிர்பார்க்கலாம் மற்றும் கடுமையான அழுத்தத்தை எதிர்கொள்ளலாம், எனவே இந்த காலகட்டத்தில் அவர்கள் கடுமையான நிதி நெருக்கடியை சந்திக்கலாம்.அவர்களின் சேமிப்புகள் இப்போது அவர்களின் கையை விட்டு கரையும்.

கன்னி

ராகு பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்கள் எதிர்மறையான பலன்களை அனுபவிக்கப்போகிறார்கள். இந்த காலகட்டத்தில் நிதிப் பிரச்சினைகளை ஓரளவு சமாளிக்க முடியும். இருப்பினும், பணத்தை செலவழிப்பதில் கவனமாக இருப்பது அவசியம். மனரீதியான பிரச்சனைகள் அவற்றிலிருந்து வெகு தொலைவில் உள்ளன. அவர்கள் தங்கள் குடும்பத்தினரிடமிருந்து மோசமான அனுபவங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

தொழிலில் சிறு சிறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உறவினர்களிடையே பல விஷயங்களில் அதிருப்தி ஏற்படலாம். நீங்கள் செய்ய விரும்பிய பல விஷயங்களைச் செய்ய முடியாமல் போனதால் ஏற்படும் சோகம் உங்களைத் தொடர்ந்து வேதனையடையச் செய்யலாம். வருமானத்தை விட செலவுகள் அதிகமாக இருக்கும் வாய்ப்பு அதிகம். எனவே கவனமாக செலவழிக்கவும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இது சோதனையான காலமாக இருக்கப்போகிறது. இந்த நேரத்தில் அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், குறிப்பாக மாணவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். படிப்பில் அலட்சியமாக இருப்பது உங்கள் எதிர்காலத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். படிப்பிலிருந்து கவனச்சிதறல்களை அனுமதிக்காதீர்கள்.

உங்கள் பெற்றோரின் பேச்சைக் கேட்பது நல்லது. நண்பர்களை மிகவும் கவனமாக தேர்ந்தெடுங்கள். வேலை தேடுபவர்கள் இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். வணிகர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். செலவுகளை கட்டுப்படுத்தாவிட்டால் உங்களின் சேமிப்பு பாதியாகக் குறையும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு ராகுவின் ராசி மாற்றம் ஆபத்துக்களை அளிக்கும் மாதமாக இருக்கப்போகிறது. இந்த கிரக மாற்றத்தால் நிதி சிக்கல்கள் தனிப்பட்ட உறவுகளில் பதற்றத்தை ஏற்படுத்தும். உடல்நலத்தைப் பொறுத்தவரை, எதிர்பாராத சிக்கல்கள் ஏற்படலாம், குறிப்பாக தற்போது நோய்களால் போராடுபவர்களுக்கு, அவர்களின் ஆரோக்கியம் மேலும் மோசமடையலாம். வீட்டில் எதிர்மறையான சூழல் நிலவலாம், இதனால் நீங்கள் விரக்தியடையலாம்.

தொழில் மற்றும் வணிகத்தைப் பொறுத்தவரை, அவர்களின் முயற்சிகள் எதிர்பார்த்த பலனைத் தராமல் போகலாம், இதன் விளைவாக பின்னடைவு ஏற்படலாம். பணியிடத்தில் மேலாதிக்கரிகளுடன் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் பிரச்சினைகளை அதிகரிக்கக்கூடும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Tuesday, November 10, 2026, 23:25 [IST]
Desktop Bottom Promotion