Latest Updates
-
பார்லர் போகாமலே பளபளப்பான முகம் வேண்டுமா? இதோ 5 சூப்பரான சந்தன ஃபேஸ் பேக்குகள்! -
நியூமராலஜி படி இந்த 5 எண்கள் கோடீஸ்வரராக்கும் ஆற்றலும், சக்தியும் கொண்டவையாம் - எந்தெந்த எண்கள் தெரியுமா? -
டீக்கடை மெது பக்கோடா - எப்படி செய்றதுன்னு பாத்து ஈவ்னிங் டைம்-ல ட்ரை பண்ணுங்க.. -
இந்த படத்தில் உங்க கண்ணுக்கு முதலில் என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவர்ன்னு சொல்றோம்.. -
Vastu Tips: வாஸ்து படி வீட்டின் இந்த இடத்தில் அல்லது திசையில் செருப்பை வைத்தால் துரதிர்ஷ்டம் விடாம துரத்துமாம -
2027-க்கு முன் சுக்கிரன் இந்த 3 ராசிக்காரர்களை செல்வந்தராக்க போறாரு.. உங்க ராசி இதுல இருக்கா? -
இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பிரைவேட் சேனல் எது? அந்த சேனல் யாருடையது தெரியுமா? -
கல்யாண வீட்டு புடலங்காய் பொரியல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
தீபாவளிக்கு சுட்ட முறுக்கு இருந்தா அதை வைச்சு இப்படி கார குழம்பு செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சமையலுக்கு எந்த எண்ணெய் பெஸ்ட்? எந்த எண்ணெயைத் தவிர்க்க வேண்டும்? மருத்துவர் தரும் விளக்கம்!
உங்கள் முழங்கால் ரொம்ப கருப்பா இருக்கா? அப்ப இந்த பொருட்களில் ஒன்றை வைச்சே வெண்மையாக்கிரலாம்
முழங்கால் மற்றும் முழங்கைகள் கருமையாக இருப்பது என்பது பல்வேறு அசௌகரியங்களை ஏற்படுத்தும். முழங்கால்கள் மற்றும் முழங்கைகளில் உள்ள தோல் மற்ற இடங்களை விட மெல்லியதாக இருக்கும். எனவே, இவை எளிதில் பாதிப்புக்குள்ளாகின்றன. சூரிய ஒளியால் இந்த இடங்களில் உள்ள தோல் கருமையாகி, 'ஹைப்பர் பிக்மென்டேஷன்' எனும் நிலை ஏற்படுகிறது. மேலும், சருமத்திற்கு நிறத்தைத் தரும் மெலனின் அதிகமாகச் சுரப்பதாலோ அல்லது இறந்த செல்கள் இந்த இடங்களில் படிவதாலோ கூட முழங்கால்கள் மற்றும் முழங்கைகள் எளிதில் கருமையாக மாறலாம். ஆனால் கவலைப்பட வேண்டாம், இயற்கையான சில பொருட்களைக் கொண்டு, முழங்கால்கள் மற்றும் முழங்கைகளில் உள்ள கருமையை நீக்குவதற்கான எளிய வீட்டு வைத்திய முறைகளை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

எலுமிச்சைச்சாறு
கருமையான முழங்கை மற்றும் முழங்காலுக்கு எலுமிச்சை ஒரு நம்பகமான வீட்டு வைத்தியமாகும். இதில் வைட்டமின் சி உள்ளது, இது சருமத்தை வெண்மையாக்கும் பண்புகளைக் கொண்ட ஒரு இயற்கையான ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகும். இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, சரும நிறத்தை வெண்மையாக்குகிறது, இதன் மூலம் உங்கள் கருமையான முழங்கால்களை வெண்மையாக்க உதவுகிறது. ஒரு எலுமிச்சையின் சாற்றை முழங்கை மற்றும் முழங்காலில் பிழிந்து சிறிது நேரம் மசாஜ் செய்யவும். 10 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். விரைவில் நிறம் மாற இதை அடிக்கடி செய்யவும்.
உருளைக்கிழங்கு
கருமையான சருமத்தைப் போக்க உருளைக்கிழங்கு ஒரு சிறந்த வீட்டு வைத்தியமாக இருக்கிறது. சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும் பண்புகள் உருளைக்கிழங்கில் அதிக அளவில் இருக்கின்றன. இவை சருமத்தில் சூரிய கதிர்களால் ஏற்படும் கருமையை நீக்கவும், தழும்புகளைக் குறைக்கவும் பெரிதும் உதவுகிறது. இதனால் முழங்கால், முழங்கை, மற்றும் கணுக்காலில் ஏற்படும் கருமை நிறத்தை போக்க, தோல் சீவிய உருளைக்கிழங்கு துண்டுகளை கொண்டோ அல்லது உருளைக்கிழங்கை அரைத்து சாறு பிழிந்து எடுத்தோ நன்கு தடவி மசாஜ் செய்யவும். இதனுடன் எலுமிச்சை பழச்சாற்றை சேர்த்தால் இன்னும் சிறந்த பலன்களை கொடுக்கும். இந்த சாற்றை தடவி மசாஜ் செய்த பின் 15 அல்லது 20 நிமிடங்கள் வைத்திருந்து குளிர்ந்த தண்ணீரால் கழுவவும்.
மஞ்சள், பால் மற்றும் தேன்
மஞ்சள், தேன் மற்றும் பால் கலவை முழங்கால், முழங்கை மற்றும் கணுக்காலில் ஏற்படும் கருமையை போக்கும் ஆற்றலை கொண்டிருக்கின்றன. சருமத்தை வெண்மையாக்க கூடிய பொருளான குர்குமின் மஞ்சளில் நிறைந்து இருக்கிறது. இதனால் இயற்கையாகவே இது சருமத்தின் நிறத்தை தக்க வைக்கவும், கருமை நிறத்தை போக்கவும் உதவுகிறது. இதனால் தான் பெண்கள் மஞ்சள் பூசி குளிக்கும் பழக்கம் வழக்கத்தில் இருந்தது. தேன் மற்றும் பால் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை அளிப்பதோடு, பொலிவையும் கொடுக்கிறது. இதனால் மஞ்சள், பால், மற்றும் தேனை நன்கு கலந்து கருமையை நீக்க வேண்டிய இடங்களில் தடவி, 25 முதல் 30 நிமிடங்கள் அப்படியே விட்டு, பின் குளிர்ந்த நீரால் கழுவி வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.
கிரீன் டீ
கிரீன் டீ உடல் எடை குறைப்பதில் முக்கிய இடத்தை பிடித்திருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் அது உங்கள் முழங்கால் மற்றும் முழங்கையில் இருக்கும் கருமையை போக்கும் பண்புகளை கொண்டிருக்கிறது. கிரீன் டீயில் 'எபிகல்லோகேடெசின் கேலேட்' எனும் உட்பொருள் இருக்கிறது. இது சருமத்தின் நிறத்தை மேம்படுத்த, சருமத்தில் அடுக்கில் மெலனின் படிவதைத் தடுக்கிறது. அதற்கு ஒரு கப் கிரீன் டீயை தயார் செய்து கொள்ளுங்கள். பஞ்சை அதில் நனைத்து கருமையை போக்க நினைக்கும் முழங்கால், முழங்கை மற்றும் கணுக்காலில் தினமும் தடவி வந்தால் சிறந்த பலனை பெறலாம்.
பேக்கிங் சோடா மற்றும் பால்
பேக்கிங் சோடாவில் இயற்கையாகவே ப்ளீச்சிங் பண்புகளை கொண்டிருப்பதால், சருமத்தின் கருமை நிறத்தை போக்குவதில் முக்கிய பங்கு வகிப்பதோடு, இது ஒரு நம்பகமான எக்ஸ்ஃபோலியேட்டிங் ஸ்க்ரப்பாகவும் செயல்படுகிறது. சருமத்தை பிரகாசமாக்கவும், பொலிவடைய செய்யவும் பாலில் இருக்கும் லாக்டிக் அமிலம் உதவுகிறது. ஒரு டீ ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் ஒரு ஸ்பூன் பாலை சேர்த்துபசை போல கலந்து கொள்ளவும்.பின் அதை கருமை நிறம் மாற வேண்டிய இடங்களில் தடவி, 15 நிமிடங்களுக்கு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.



Click it and Unblock the Notifications

