1 கப் மீல் மேக்கர் இருந்தா இந்த மாதிரி வித்தியாசமான குருமா செஞ்சு பாருங்க - சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும்

Posted By:

Soya Veg Kurma Recipe in Tamil: இட்லி தோசைக்கு அடுத்தபடியாக பெரும்பாலான வீடுகளில் செய்யப்படும் டிபன் வகைகள் என்றால் அது சப்பாத்தி, பூரிதான். சப்பாத்தி மற்றும் பூரிக்கு பெரும்பாலும் குருமாதான் பிரதான சைடிஷாக இருக்கும், ஆனால் எவ்வளவு நாள்தான் குருமா வைத்தே சப்பாத்தி சாப்பிடுவது. சப்பாத்தி மற்றும் பூரிக்கு வழக்கமான குருமா செய்யாமல் புதிதாக ஏதாவது கிரேவி செய்து கொடுத்தால் வீட்டில் அனைவரும் அதை விரும்பி சாப்பிடுவார்கள்.

Soya Veg Kurma Recipe How to Make at Home in Tamil

புதிய சைடிஷ் என்று வரும்போது அதை மீல்மேக்கரை வைத்து முயற்சிக்கலாம். சரியான பக்குவத்தில் செய்தால் மீல் மேக்கரையே அசைவ உணவுகளை விட அட்டகாசமான சுவையில் செய்யலாம். மேலும் மீல் மேக்கரில் புரதச்சத்து நிறைந்துள்ளதால் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கும், உடலை வலிமையாக்க விரும்புபவர்களுக்கும் இது சிறந்த உணவாக இருக்கும். அதிலும் இந்த குருமாவில் பல காய்கறிகள் மற்றும் பட்டாணி சேர்த்து செய்யப்படுவதால் இதன் சுவை மேலும் தனித்துவமானதாக இருக்கும்.

உங்களுக்கு மீல் மேக்கரை வைத்து அட்டகாசமான சுவையில் சப்பாத்தி, பூரிக்கு சைடிஷ் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீல் மேக்கர் வெஜ் மசாலா கிரேவியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- ஊற வைத்த மீல் மேக்கர் - 2 கப்
- நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
- இஞ்சி-பூண்டு விழுது - 1 ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 2
- நறுக்கிய தக்காளி - 3
- நறுக்கிய பீன்ஸ் - 10
- நறுக்கிய குடைமிளகாய் (Capsicum) - ½ (நறுக்கியது)
- பட்டாணி - 1 கப்
- துருவிய தேங்காய் - 1 கப்(அரைக்க)
- பால் - ½ கப்
- சோள மாவு - 1 ஸ்பூன்
- சர்க்கரை - 1 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- கொத்தமல்லி இலைகள் - அலங்கரிக்க
- எண்ணெய் - 3 ஸ்பூன்

மசாலாப் பொடிகள்:

- மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
- கரம் மசாலா தூள் - 2 டீஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
- மல்லி தூள் - 1 டீஸ்பூன்
- மிளகு தூள் - 1 டீஸ்பூன்
- சீரகத் தூள் - 1 டீஸ்பூன்

தாளிக்க:

- கடுகு - 1 டீஸ்பூன்
- சீரகம் - 1 டீஸ்பூன்
- இலவங்கப்பட்டை - 1 இன்ச்
- சோம்பு - 1 டீஸ்பூன்
- ஏலக்காய் - 4
- கிராம்பு - 4

செய்முறை:

- ஒரு பாத்திரத்தில் சிறிது பால் சேர்த்து, அதனுடன் நீரையும் ஊற்றிச் சூடுபடுத்தவும். இதில் மீல் மேக்கரைச் சேர்த்து, அடுப்பை அணைத்துவிடவும். பாத்திரத்தை மூடி, 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.

- பின்னர் நீரை வடித்துவிட்டு, குளிர்ந்த நீரில் அலசவும். மீல் மேக்கரில் உள்ள அதிகப்படியான நீரை பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.

- ½ கப் பாலில் சோள மாவை (cornstarch) கலந்து தனியே எடுத்து வையுங்கள்.

- ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பின்னர் முழு மசாலா பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்கவும்.

- பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, சர்க்கரை மற்றும் இஞ்சி-பூண்டு விழுது ஆகியவற்றைச் சேர்க்கவும். வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

- அதன்பின் அனைத்து மசாலாப் பொடிகளையும் ஒவ்வொன்றாக சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

- பின் தக்காளி சேர்த்து, அவை நன்கு குழைந்து வரும் வரை மேலும் 5 நிமிடங்கள் சமைக்கவும்.

- இப்போது பட்டாணி, குடைமிளகாய் மற்றும் பீன்ஸ் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கிளறவும். அதனுடன் வேகவைத்த சோயா துண்டுகளையும் சேர்த்து நன்கு கிளறவும்.

- அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்க விடவும்.

- மூடி வைத்து, பட்டாணி மற்றும் பீன்ஸ் வேகும் வரை 15 நிமிடங்கள் மிதமான தீயில் வேகவைக்கவும்.

- இப்போது, ​​சோள மாவு கலந்த பாலை குழம்பில் ஊற்றி நன்றாகக் கலக்கவும்.

- குழம்பு நன்கு கெட்டியானதும் கொத்தமல்லி இலைகளைத் தூவி அடுப்பை அணைக்கவும்.

- இது சாதம், சப்பாத்தி, பூரி என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, November 10, 2026, 22:42 [IST]
Desktop Bottom Promotion