நவம்பர் 13-ல் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: இந்த 4 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது!

Mercury Direct In Libra 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியான புதன் தற்போது துலாம் ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த புதன் நவம்பர் 13 ஆம் தேதி துலாம் ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்து பயணிக்கவுள்ளார். புதன் வக்ர நிவர்த்தி அடைவதால், இதுவரை புதனால் கிடைக்கவிருந்த நல்ல பலன்களில் இருந்த தடைகள் நீங்கும்.

Mercury Direct In Libra 2026 List Of Lucky Zodiac Signs

துலாம் ராசியில் நேர்கதியில் பயணத்தை தொடங்கும் புதனின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்த ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதுவும் பேசும் விதம், முடிவெடுக்கும் திறன் மற்றும் தொழில் போன்றவற்றில் நன்கு தெரியும். இப்போது புதன் துலாம் ராசியில் வக்ர நிவர்த்தி அடைவதால் நல்ல பலன்களைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசியின் 7 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அலுவலகத்தில் உடன் வேலை செய்வோருடன் இருந்த பிரச்சனைகள் குறையும். வேலையில் முழு கவனத்தையும் செலுத்தினால் இலக்கை அடைய முடியும். பணியிடத்தில் உங்களின் தலைமைத்துவ குணங்கள் பாராட்டப்படும். சிலருக்கு சிறப்பான செயல்திறன் காரணமாக புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். வியாபாரத்தில் எதிர்பாராத அளவில் நல்ல லாபத்தைப் பெறக்கூடும்.

கன்னி

கன்னி ராசியின் அதிபதி புதன். இந்த புதன் இரண்டாவது வீட்டில் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இதுவரை இந்த ராசிக்காரர்கள் வேலையில் தடைகளை சந்தித்து வந்தால், அது நீங்கும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வணிகர்களுக்கு பழைய வாடிக்கையாளர்களால் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கலாம்.

துலாம்

துலாம் ராசியின் முதல் வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் மன அழுத்தம் குறையும். பேச்சால் பல முக்கியமான வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். எந்த ஒரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறக்கூடும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

கும்பம்

கும்ப ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் தொடர்பாக மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். புதிய நட்புகள் கிடைக்கும். இந்த நட்புகளால் எதிர்காலத்தில் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கக்கூடும். வணிகர்களுக்கு இக்காலம் மிகவும் பொற்காலமாக இருக்கும். பணிபுரிபவர்களின் செயல்திறன் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Tuesday, November 10, 2026, 23:40 [IST]
Desktop Bottom Promotion