Latest Updates
-
இந்தியர்களே நுழைய முடியாத இந்தியாவிற்குள் இருக்கும் கிராமம் - இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 11, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கேட்ட வரம் கிடைக்கும் அதிர்ஷ்ட நாளாக இருக்குமாம் -
நவம்பர் 13-ல் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: இந்த 4 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது! -
18 மாதங்களுக்கு பின் ராகு மகர ராசிக்கு செல்வது இந்த 4 ராசிக்காரர்களை ஆபத்தில் தள்ளப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
1 கப் மீல் மேக்கர் இருந்தா இந்த மாதிரி வித்தியாசமான குருமா செஞ்சு பாருங்க - சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
உங்கள் முழங்கால் ரொம்ப கருப்பா இருக்கா? அப்ப இந்த பொருட்களில் ஒன்றை வைச்சே வெண்மையாக்கிரலாம் -
பார்லர் போகாமலே பளபளப்பான முகம் வேண்டுமா? இதோ 5 சூப்பரான சந்தன ஃபேஸ் பேக்குகள்! -
நியூமராலஜி படி இந்த 5 எண்கள் கோடீஸ்வரராக்கும் ஆற்றலும், சக்தியும் கொண்டவையாம் - எந்தெந்த எண்கள் தெரியுமா? -
டீக்கடை மெது பக்கோடா - எப்படி செய்றதுன்னு பாத்து ஈவ்னிங் டைம்-ல ட்ரை பண்ணுங்க..
நவம்பர் 12-ல் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு புதிய வருமான வழிகள் உருவாகும்!
Jupiter Mars Conjunction In Leo 2026: ஜோதிட ரீதியாக நவம்பர் மாதமானது மிகவும் முக்கியமானதாக இருக்கும். ஏனெனில் இந்த மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தவுள்ளன.
அதுவும் இந்த மாத தொடக்கத்தில் இருந்து தேவர்களின் குருவான குரு பகவான் சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் நவம்பர் 12 ஆம் தேதி கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் சிம்ம ராசியில் குரு மற்றும் செவ்வாயின் சேர்க்கை நிகழவுள்ளது.

ஜோதிடத்தின் படி குரு பகவான் அறிவு, அதிர்ஷ்டம், செல்வம், கல்வி, செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். அதே வேளையில் செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல், தன்னம்பிக்கை ஆகியவற்றின் காரணியாவார். இவ்விரு கிரகங்கங்களின் சேர்க்கை ஜோதிடத்தின் படி முக்கியமானதாக கருதப்படுகிறது.
இந்த கிரக சேர்க்கையின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களை, அதுவும் நிதி நிலையில் பெரிய முன்னேற்றத்தைக் காணவுள்ளனர். இப்போது சிம்ம ராசியில் நிகழும் குரு செவ்வாய் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 5 ஆவது வீட்டில் குரு செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் காணக்கூடும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு தங்களின் திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் நீண்ட காலமாக காத்துக் கொண்டிருந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கலாம். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. இதனால் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
சிம்மம்
சிம்ம ராசியின் முதல் வீட்டில் குரு செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நவம்பர் 12 முதல் முக்கியமான காலகட்டமாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணியிடத்தில் தங்களின் அடையாளத்தை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு, புதிய பொறுப்புகள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. இன்னும் சிலருக்கு மிகவும் முக்கியமான திட்டத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கலாம். புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், இக்காலம் உகந்ததாக இருக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
கும்பம்
கும்ப ராசியின் 7 ஆவது வீட்டில் குரு-செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பு கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் சிறப்பான செயல்திறன் உயர் அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு, அதற்கு நல்ல அங்கீகாரமும் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
