Latest Updates
-
இரயில்களுக்கும் Retirement இருக்காம் - ஓய்வு பெற்ற பிறகு இரயில்களை என்ன செய்வார்கள் தெரியுமா? -
குளிப்பதற்கு சிறந்தது குளிர்ந்த நீரா? வெந்நீரா? உடலில் முதலில் எந்தப் பகுதியில் தண்ணீர் ஊற்ற வேண்டும்? -
முட்டையும், காளானும் இருந்தால் இந்த மாதிரி வித்தியாசமா ஆம்லெட் செஞ்சு பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
நவம்பர் 12-ல் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு புதிய வருமான வழிகள் உருவாகும்! -
இந்தியர்களே நுழைய முடியாத இந்தியாவிற்குள் இருக்கும் கிராமம் - இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 11, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கேட்ட வரம் கிடைக்கும் அதிர்ஷ்ட நாளாக இருக்குமாம் -
நவம்பர் 13-ல் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: இந்த 4 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது! -
18 மாதங்களுக்கு பின் ராகு மகர ராசிக்கு செல்வது இந்த 4 ராசிக்காரர்களை ஆபத்தில் தள்ளப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
1 கப் மீல் மேக்கர் இருந்தா இந்த மாதிரி வித்தியாசமான குருமா செஞ்சு பாருங்க - சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும்
ஆந்திரா ஸ்பெஷல் பாலக் பச்சடி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. ருசியானதும் சத்தானதும் கூட..
Andhra Palak Pachadi Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி கீரை வாங்கி சமைப்பீர்களா? அதுவும் எப்போதும் கீரையை வாங்கினால் ஒரே மாதிரி பொரியல், கூட்டு, கடையல் என்று தான் செய்து சாப்பிடுவீர்களா? சற்று வித்தியாசமான சுவையில் கீரையை சமைத்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் ஆந்திரா ஸ்டைல் பாலக் பச்சடியை செய்து சாப்பிடுங்கள்.
இந்த பச்சடிக்கு பாலக் கீரை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. எந்த கீரை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த பாலக் பச்சடி சற்று புளிப்பாகவும் காரமாகவும் இருப்பதால், சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு ஆந்திரா பாலக் பச்சடியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா பாலக் பச்சடி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மசாலாவிற்கு...
* பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
* பூண்டு - 10-15 பல்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1
* உளுத்தம் பருப்பு - 1
* கடுகு - 1
* சீரகம் - 1
* வரமிளகாய் - 2
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* அரைத்த மசாலா
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பாலக் கீரை - 1 கட்டு (பொடியாக நறுக்கியது)
* புளித்தண்ணீர் - 3 டேபிள் ஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் நறுக்கிய வெங்காயம், பூண்டு, காஷ்மீரி
மிளகாய் தூள், சீரகம் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு
மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம்,
வரமிளகாய் சேர்த்து நன்கு தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பெருங்காயத் தூள் சேர்த்து கிளறி, அரைத்து
வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு எண்ணெய் உறிஞ்சி பிரியும் வரை வேக
வேண்டும்.
* பின்பு அதில் கறிவேப்பிலை சேர்த்து கிளறி, நறுக்கிய பாலக்கீரையை
சேர்த்து கிளறி, 5 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும்.
* பிறகு அதில் புளி நீரை ஊற்றி கிளறி, 2 நிமிடம் கொதிக்க வைத்து, பின்
சீரகத் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்து கிளறி, 5 நிமிடம் வேக
வைத்து இறக்கினால், ஆந்திரா ஸ்பெஷல் பாலக் பச்சடி தயார்.



Click it and Unblock the Notifications
