Latest Updates
-
வாஸ்து படி மாலை நேரத்தில் இந்த செயல்களை செய்வது உங்கள் வீட்டின் அதிர்ஷ்டத்தை வெளியே தள்ளுமாம் - ஜாக்கிரதை -
18 ஆண்டுகள் கழித்து நிகழும் கேது-செவ்வாய் சேர்க்கை: நாளை முதல் இந்த 5 ராசிக்காரங்க உஷார்.. -
இரயில்களுக்கும் Retirement இருக்காம் - ஓய்வு பெற்ற பிறகு இரயில்களை என்ன செய்வார்கள் தெரியுமா? -
ஆந்திரா ஸ்பெஷல் பாலக் பச்சடி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. ருசியானதும் சத்தானதும் கூட.. -
குளிப்பதற்கு சிறந்தது குளிர்ந்த நீரா? வெந்நீரா? உடலில் முதலில் எந்தப் பகுதியில் தண்ணீர் ஊற்ற வேண்டும்? -
முட்டையும், காளானும் இருந்தால் இந்த மாதிரி வித்தியாசமா ஆம்லெட் செஞ்சு பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
நவம்பர் 12-ல் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு புதிய வருமான வழிகள் உருவாகும்! -
இந்தியர்களே நுழைய முடியாத இந்தியாவிற்குள் இருக்கும் கிராமம் - இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 11, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கேட்ட வரம் கிடைக்கும் அதிர்ஷ்ட நாளாக இருக்குமாம்
குளிர்காலத்தில் சருமம் அதிகம் வறண்டு போகுதா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி போடுங்க..
Winter Face Packs In Tamil: குளிர்காலம் தொடங்கிவிட்டாலே பலருக்கும் சரும வறட்சி, அரிப்பு, தோல் உரிதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம். குறிப்பாக, குளிர்ந்த காற்று மற்றும் குறைவான ஈரப்பதம் காரணமாக சருமத்தில் உள்ள இயற்கையான ஈரப்பதம் குறைந்து, சரும வறட்சியை அதிகம் சந்திக்க நேரிடலாம். இதனால் சருமம் சோர்வாகவும், பொலிவின்றியும் தோன்றும். இந்நிலையில் வழக்கமாகப் பயன்படுத்தும் மாய்ஸ்சரைசர் மட்டும் போதுமானதாக இருக்காது.

இத்தகைய குளிர்கால சருமப் பிரச்சனைகளைச் சமாளிக்க விலையுயர்ந்த அழகுசாதனப் பொருட்களை வாங்கி தான் சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்க வேண்டுமென்ற அவசியமில்லை. நம் வீட்டிலேயே எளிதில் கிடைக்கும் தயிர், பால், தேன், கற்றாழை, வாழைப்பழம் போன்ற இயற்கையான பொருட்களைக் கொண்டு சருமத்திற்கு ஈரப்பதம் அளிக்கும் ஃபேஸ் பேக்குகளைத் தயாரிக்கலாம். இவை சருமத்தை மென்மையாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவும்.
குறிப்பாக, குளிர்காலத்தில் சரும வகைக்கு ஏற்ப சரியான ஃபேஸ் பேக்குகளைத் தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம். அதேசமயம், இயற்கையான பொருட்கள் என்றாலும் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம் என்பதால் முகத்தில் பயன்படுத்துவதற்கு முன்பு சிறிய பகுதியில் பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது. இப்போது குளிர்காலத்தில் வறண்ட சருமத்திற்கு ஈரப்பதத்தையும் இயற்கையான பொலிவையும் அளிக்க உதவும் டாப் 5 எளிய நேச்சுரல் ஃபேஸ் பேக்குகள் குறித்து காண்போம்.
1. அரிசி மாவு ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவை எடுத்துக் கொண்டு, அத்துடன் குளிர்ந்த மற்றும் காய்ச்சாத பாலை சிறிது ஊற்றி, அத்துடன் தேன் சிறிது சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
2. காபி ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் காபித் தூளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தை மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.
3. வாழைப்பழ ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் நன்கு கனிந்த ஒரு வாழைப்பழத்தை எடுத்து மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
4. தேன் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தேன், 3 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
5. பப்பாளி ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் நன்கு கனிந்த பப்பாளி துண்டுகளை எடுத்துக் கொண்டு மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 2 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டேபிள் ஸ்ழுன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10 நிமிடம் காய வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
