18 ஆண்டுகள் கழித்து நிகழும் கேது-செவ்வாய் சேர்க்கை: நாளை முதல் இந்த 5 ராசிக்காரங்க உஷார்..

Ketu Mars Conjunction In Leo 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் நிழல் கிரகமாக கருதப்படுபவர் கேது. இந்த கேது ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருப்பார். அந்த வகையில் தற்போது கேது சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் மற்றும் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல், தன்னம்பிக்கை ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் செவ்வாய் நவம்பர் 12 ஆம் தேதி சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் சிம்ம ராசியில் கேது மற்றும் செவ்வாயின் சேர்க்கை நிகழவுள்ளது.

Ketu Mars Conjunction In Leo 2026 These Zodiac Signs Should Be Cautious

ஜோதிடத்தின் படி, இந்த சேர்க்கை அவசர முடிவுகளையும், தவறான முடிவுகளையும் எடுக்க வைக்கும். கோபம் அதிகரிக்கும், பேச்சு கடுமையாக இருக்கும். இந்த கேது-செவ்வாய் சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சிலருக்கு சிறப்பாக இருந்தாலும், 5 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதுவும் இந்த சேர்க்கை டிசம்பர் 05 ஆம் தேதி வரை நீடித்திருப்பதால், 5 ராசிக்காரர்கள் எந்த வேலையையும் கவனமாக செய்ய வேண்டும். இப்போது கேது செவ்வாய் சேர்க்கையால் டிசம்பர் 05 வரை எந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசியின் 5 ஆவது வீட்டில் கேது செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் காதல் மற்றும் குடும்ப வாழ்க்கை மோசமாக பாதிக்கப்படலாம். இக்காலத்தில் எந்த ஒரு முடிவையும் அவசப்பட்டு எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். மேலும் பணத்தை முதலீடு செய்யும் போது கவனமாக சிந்தித்து செய்ய வேண்டும்.

கடகம்

கடக ராசியின் 2 ஆவது வீட்டில் கேது செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் பேச்சு மற்றவர்களை காயப்படுத்தும் வகையில் கடுமையாக இருக்கும். எதையும் பேசும் முன் கவனமாக சிந்தித்து பேச வேண்டும். இல்லாவிட்டால், உங்கள் பேச்சே பல வேலைகள் பாழாக்கிவிடும். அதோடு உங்களின் பேச்சு உறவுகளில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

சிம்மம்

சிம்ம ராசியின் முதல் வீட்டில் கேது செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படும். கோபம் அதிகமாக வரக்கூடும். இது வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டில் கேது செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் அவசரப்பட்டு முடிவெடுப்பதைத் தவிர்க்க வேண்டும். எந்த ஒரு செயலையும் செய்த பின்னர் யோசிக்காமல், எதையும் செய்யும் முன் ஒன்றுக்கு பல முறை யோசித்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பெரிய அளவில் பிரச்சனையில் சிக்கி தவிப்பீர்கள். முக்கியமாக இக்காலத்தில் கோபத்தையும், அவசரத்தையும் தவிர்க்க வேண்டும்.

கும்பம்

கும்ப ராசியின் 7 ஆவது வீட்டில் கேது செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதைத் தவிர்க்க மனம் விட்டு பேச வேண்டும். தகவல் தொடர்பு இல்லாவிட்டால், அது நிலைமையை மேலும் மோசமாக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் பண பரிவர்த்தனைகளில் சற்று கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய சிக்கலில் சிக்கிவிடுவீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Wednesday, November 11, 2026, 16:52 [IST]
Desktop Bottom Promotion