செவ்வாய் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..

Mars Transit In Leo 2026: ஜோதிடத்தில் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல், தன்னம்பிக்கை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் செவ்வாய். கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் ஒரு ராசியின் 45 நாட்கள் வரை இருப்பார். மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியான செவ்வாய், தற்போது கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த செவ்வாய் நவம்பர் 12 ஆம் தேதி கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார்.

Mars Transit In Leo 2026 These Zodiac Signs Will Face Many Problems In Life

செவ்வாயின் இந்த பெயர்ச்சியின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சில ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி சிறப்பானதாக இருந்தாலும், சில ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இப்போது செவ்வாய் சிம்ம ராசிக்கு செல்வதால் எந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம். உங்கள் ராசி இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கன்னி

கன்னி ராசியின் 12 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பண விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். மறைமுறை எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆரோக்கிய பிரச்சனைகளால் அதிகம் சிரமப்படக்கூடும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. தன்னம்பிக்கையும், தைரியமும் குறையும்.

மகரம்

மகர ராசியின் 8 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும். பணியிடம் பரபரப்பாக இருக்கும். பண விஷயங்களில் அல்லது பண பரிவர்த்தனைகளில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முக்கியமாக இக்காலத்தில் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

மீனம்

மீன ராசியின் 6 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலையில் நிறைய தடைகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கிய விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய அளவில் மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும். இருப்பினும், நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளில் நல்ல வெற்றி பெறலாம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Wednesday, November 11, 2026, 23:38 [IST]
Desktop Bottom Promotion