Latest Updates
-
கத்திரிக்காயை இந்த மாதிரி துவையல் செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமா இருக்கும் -
பர்ப்யூம் அடிக்கும் போது செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன தெரியுமா? அடுத்தமுறை இந்த தவறை செய்யாதீங்க -
இந்த 5 ராசிக்காரங்க பிரேக் அப் ஆனாலும் Ex-ஐ விடமாட்டாங்களாம்.. உங்க ராசி இதுல இருக்கா? -
திடீர் அதிர்ஷ்டத்தால் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டமுள்ள 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
குளிர்காலத்தில் சருமம் அதிகம் வறண்டு போகுதா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி போடுங்க.. -
வாஸ்து படி மாலை நேரத்தில் இந்த செயல்களை செய்வது உங்கள் வீட்டின் அதிர்ஷ்டத்தை வெளியே தள்ளுமாம் - ஜாக்கிரதை -
18 ஆண்டுகள் கழித்து நிகழும் கேது-செவ்வாய் சேர்க்கை: நாளை முதல் இந்த 5 ராசிக்காரங்க உஷார்.. -
இரயில்களுக்கும் Retirement இருக்காம் - ஓய்வு பெற்ற பிறகு இரயில்களை என்ன செய்வார்கள் தெரியுமா? -
ஆந்திரா ஸ்பெஷல் பாலக் பச்சடி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. ருசியானதும் சத்தானதும் கூட.. -
குளிப்பதற்கு சிறந்தது குளிர்ந்த நீரா? வெந்நீரா? உடலில் முதலில் எந்தப் பகுதியில் தண்ணீர் ஊற்ற வேண்டும்?
வரகரிசியில் இப்படி தக்காளி சாதம் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
Varagu Arisi Thakkali Sadam Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோருக்கு வெரைட்டி ரைஸ் என்றால் ரொம்ப பிடிக்குமா? அதுவும் தக்காளி சாதம் என்றால் விரும்பி சாப்பிடுவார்களா? இதுவரை தக்காளி சாதத்தை சாதாரண அரிசி அல்லது பாசுமதி அரிசியை கொண்டு செய்திருப்பீர்கள். ஆனால் நீங்கள் சிறுதானிய வகைகளை அதிகம் சாப்பிட நினைப்பவராயின், சிறு தானியங்களில் ஒன்றான வரகரிசியைக் கொண்டு தக்காளி சாதம் செய்யுங்கள். இந்த வரகரிசி தக்காளி சாதம் சுவையாக இருப்பதோடு, சத்தானதும் கூட.

உங்களுக்கு வரகரிசி தக்காளி சாதத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வரகரிசி தக்காளி சாதம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வரகரிசி - 200 கிராம் அல்லது 1 டம்ளர் (10 நிமிடம் ஊற
வைத்தது)
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கிராம்பு - 2
* பிரியாணி இலை - 1
* அன்னாசிப்பூ - 1
* பட்டை - 1 துண்டு
* பெரிய வெங்காயம் - 2 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
* தக்காளி - 3 (அரைத்தது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 2 டம்ளர்
செய்முறை:
* முதலில் வரகரிசியை நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின் நீரை ஊற்றி
10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் தக்காளியை மிக்சர் ஜாரில் சேர்த்து நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, பிரியாணி இலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை
வதக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லித்
தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பின் அதில் 2 டம்ளர் நீரை ஊற்றி, நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும்,
அதில் ஊற வைத்துள்ள வரகரிசியை நீரை வடிகட்டிவிட்டு சேர்த்து கிளறி,
உப்பு சுவை பார்த்து, வேண்டுமானால் உப்பு சேர்த்து கலந்து, குக்கரை
மூடி 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து கிளறினால், சுவையான வரகரிசி
தக்காளி சாதம் தயார்.



Click it and Unblock the Notifications
