கத்திரிக்காயை இந்த மாதிரி துவையல் செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமா இருக்கும்

Posted By:

Kathirikkai Thuvayal Recipe in Tamil: இட்லி, தோசைக்கு ஈஸியான சைடிஷ் என்றால் எப்போதும் முதலில் நினைவிற்கு வருவது சட்னிதான். சட்னியிலும் பெரும்பாலும் ஒரே மாதிரியான சட்னிகளைத்தான் நாம் அரைப்போம். இது காலப்போக்கில் சலிப்பை ஏற்படுத்தும். வழக்கமான தேங்காய், தக்காளி மற்றும் மிளகாய் சட்னிக்குப் பதிலாக புதிய சட்னிகளை முயற்சிக்க விரும்புபவர்கள் காய்கறிகளில் சட்னி அரைக்க முயற்சிக்கலாம்.

Kathirikkai Thuvayal Recipe How to Make at Home in Tamil

காய்கறி சட்னி என்று வரும்போது பெரும்பாலும் கேரட், பீட்ரூட், வெள்ளரிக்காய் போன்றவற்றை வைத்துதான் சட்னி அரைப்போம். ஆனால் பலரும் விரும்பாத கத்தரிக்காயை வைத்தும் சுவையான சட்னி செய்யலாம் என்பது நம்மில் பலரும் அறியாதது. அதிலும் கத்திரிக்காயுடன் எள் சேர்த்து அரைக்கப்படும் இந்த சட்னி இட்லி, தோசை மட்டுமின்றி சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு சுவையான கத்திரிக்காய் எள் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கத்திரிக்காய் எள் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- அரை கிலோ கத்தரிக்காய்
- 1/4 கப் தண்ணீர்
- 1/4 கப் வெள்ளை எள்
- 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- 4 பல் பூண்டு, பொடியாக நறுக்கியது
- 1 கப் வெங்காயம், பொடியாக நறுக்கியது
- 4 நன்கு பழுத்த தக்காளி, பொடியாக நறுக்கியது
- 1 ஸ்பூன் நெய்
- 4 வர மிளகாய்
- 1 எலுமிச்சை பழத்தின் சாறு

தாளிக்க:

- 1 ஸ்பூன் நெய்
- 1/2 ஸ்பூன் கடுகு
- 2 வர மிளகாய்

செய்முறை:

- அரை கிலோ கத்தரிக்காயை கால் கப் தண்ணீருடன் சேர்த்து, பிரஷர் குக்கரில் ஐந்து நிமிடங்கள் வேகவைக்கவும். அடுப்பிலிருந்து இறக்கி, பிரஷர் அடங்கும் வரை காத்திருக்கவும்.

- கத்தரிக்காயின் தோலை உரித்து தனியே எடுத்து வைக்கவும். வேகவைத்து தோல் உரித்த கத்தரிக்காயை விழுதாக அரைத்துக்கொள்ளவும். அரைக்கும்போது தண்ணீர் சேர்க்கக்கூடாது. இதைத் தனியே எடுத்து வைக்கவும்.

- எள் விதைகளை மிதமான தீயில் வைத்து, பொன்னிறமாகும் வரை வறுக்கவும். அடுப்பிலிருந்து இறக்கி, ஆறவிடவும். வறுத்து ஆறவைத்த எள் விதைகளை அரைத்துப் பொடியாக்கி, தனியே எடுத்து வைக்கவும்.

- ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெயைச் சூடாக்கி, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டைச் சேர்க்கவும். அதனுடன் உப்பு சேர்த்து வதக்கவும்.

- வெங்காயம் லேசாக பழுப்பு நிறமாகும் வரை வதக்கவும். தக்காளியைப் பொடியாக நறுக்கி வாணலியில் சேர்க்கவும். அதனுடன் இரண்டு வர மிளகாயை சேர்த்து கிளறவும்.

- கடாயை மூடி வைத்து தக்காளி நன்கு வெந்து குழையும் வரை வேகவைக்கவும். இந்த நிலையில், கத்தரிக்காய் விழுதைச் சேர்த்து,சில நிமிடங்கள் வேகவைக்கவும்.

- பின்னர் வறுத்த எள் பொடியைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதனுடன் நெய் சேர்த்து நன்கு கிளறவும். அடுப்பை அணைத்துவிட்டு, எலுமிச்சை சாற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்துவிடவும்.

- ஒரு வாணலியில் நெய் ஊற்றி, கடுகு மற்றும் வர மிளகாயைச் சேர்க்கவும். கடுகு பொரியத் தொடங்கியதும், அதை மசித்து வைத்துள்ள கலவையில் சேர்க்கவும். அதன் மேல் எள்ளைத் தூவவும்.

- இதை சூடான இட்லி, தோசை அல்லது சாதத்துடன் பரிமாறவும்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, November 11, 2026, 22:53 [IST]
Desktop Bottom Promotion