Latest Updates
-
இந்த 5 ராசிக்காரங்க பிரேக் அப் ஆனாலும் Ex-ஐ விடமாட்டாங்களாம்.. உங்க ராசி இதுல இருக்கா? -
திடீர் அதிர்ஷ்டத்தால் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டமுள்ள 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
குளிர்காலத்தில் சருமம் அதிகம் வறண்டு போகுதா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி போடுங்க.. -
வாஸ்து படி மாலை நேரத்தில் இந்த செயல்களை செய்வது உங்கள் வீட்டின் அதிர்ஷ்டத்தை வெளியே தள்ளுமாம் - ஜாக்கிரதை -
18 ஆண்டுகள் கழித்து நிகழும் கேது-செவ்வாய் சேர்க்கை: நாளை முதல் இந்த 5 ராசிக்காரங்க உஷார்.. -
இரயில்களுக்கும் Retirement இருக்காம் - ஓய்வு பெற்ற பிறகு இரயில்களை என்ன செய்வார்கள் தெரியுமா? -
ஆந்திரா ஸ்பெஷல் பாலக் பச்சடி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. ருசியானதும் சத்தானதும் கூட.. -
குளிப்பதற்கு சிறந்தது குளிர்ந்த நீரா? வெந்நீரா? உடலில் முதலில் எந்தப் பகுதியில் தண்ணீர் ஊற்ற வேண்டும்? -
முட்டையும், காளானும் இருந்தால் இந்த மாதிரி வித்தியாசமா ஆம்லெட் செஞ்சு பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
நவம்பர் 12-ல் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு புதிய வருமான வழிகள் உருவாகும்!
பர்ப்யூம் அடிக்கும் போது செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன தெரியுமா? அடுத்தமுறை இந்த தவறை செய்யாதீங்க
நாள் முழுவதும் வாசனையாக உணர்வதற்கு பர்ப்யூம் பயன்படுத்துவது என்பது பெருமபாலான மக்களின் அன்றாட வழக்கமாக மாறிவிட்டது. நாம் நினைப்பதை விட நீண்ட காலமாகவே வாசனைத் திரவியங்கள் பூமியில் இருந்து வருகின்றன. சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு, தூபம் உருவாக்கப்பட்டபோது இந்த வழக்கம் தொடங்கியது. அதன்பின் மக்கள் மேலும் பல நறுமணங்களைச் சோதித்துப் பார்த்தனர், மேலும் நீண்ட நேரம் நீடிக்கும் நறுமணத்திற்காக தண்ணீரில் அதைக் கலந்தனர். இப்போது, இது மக்களின் தவிர்க்க முடியாத பழக்கமாக மாறிவிட்டது.

தற்போது வாசனைத் திரவியத்தைத் தெளிக்காமல் பெரும்பாலான மக்களால் வீட்டை விட்டு வெளியேற முடிவதில்லை. ஆனால், இந்த இனிமையான நறுமணங்களைப் பயன்படுத்தும்போது பலர் இன்னும் தவறுகளைச் செய்கிறார்கள். வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்தும்போது ஒருவர் செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
வாசனைத் திரவியத்தைத் தேய்த்தோ அல்லது தட்டிப் பரப்பவோக் கூடாது
வாசனைத் திரவியத்தைப் பயன்படுத்தும்போது, நம் மணிக்கட்டுகளை ஒன்றோடொன்று தேய்ப்பது அல்லது கழுத்தில் தட்டிப் பரப்புவது போன்ற பழக்கம் பலருக்கு இருக்கும் ஒரு பழக்கமாகும். ஆனால், இது சரியான முறை அல்ல. இவ்வாறு தேய்க்கும்போது ஏற்படும் உராய்வு தோலை வெப்பமடையச் செய்கிறது. இது இயற்கையான என்சைம்களை உருவாக்கி, வாசனைத் திரவியத்தின் தன்மையையே மாற்றிவிடுகிறது. இது அந்த வாசனைத் திரவியத்தின் நறுமணக் கூறுகளைப் பாதித்து, அதன் சிறப்பை இழக்கச் செய்கிறது.
நாடி துடிப்புள்ள இடங்களை கவனிக்க வேண்டும்
மணிக்கட்டுகள், கழுத்து மற்றும் மார்புப் பகுதி போன்ற நாடித் துடிப்புள்ள இடங்களில் உடல் வெப்பம் அதிகமாக வெளிப்படும். சருமத்திலிருந்து சுமார் ஐந்து அங்குல இடைவெளி விட்டு வாசனைத் திரவியத்தைப் பூசுவது சிறந்தது. மிக அருகில் ஸ்ப்ரே செய்தால், திரவம் சருமத்தின் மீது பட்டு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். மேலும், இரண்டு முதல் மூன்று முறை மட்டும் தெளித்தால் போதுமானது. அதே சமயம் காலர் எலும்புகள், தலைமுடி மற்றும் முழங்கால்களிலும் ஸ்ப்ரே செய்யலாம்.
சிறிய பாட்டில் வாசனைத் திரவியங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்
பர்ப்யூம்களை விரைவாகப் பயன்படுத்தி முடித்துவிடுவது நல்லது. பாதியளவு பயன்படுத்தப்பட்ட பாட்டிலை அப்படியே வைத்துவிடும் போது, அதிலுள்ள வாசனை மூலக்கூறுகள் ஆக்சிஜனுடன் வினைபுரிந்து சிதையத் தொடங்கும். இது அந்த வாசனைத் திரவியத்தின் தன்மையையே மாற்றிவிடும். எனவே சிறிய அளவிலான வாசனைத் திரவியங்களைத் தேர்ந்தெடுங்கள். 3 முதல் 4 மாதங்கள் வரை நீடிக்கும் பெரிய பாட்டில்களுக்குப் பதிலாக, ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் தீர்ந்துவிடக்கூடிய சிறிய பாட்டில்களை வாங்குவது சிறந்தது.
சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க வேண்டும்
உலர்ந்த தோலில் வாசனை திரவியங்கள் நீண்ட நேரம் நீடிக்காது. வாசனை திரவியத்தின் நறுமணத்தில் மற்ற வாசனைகள் கலக்காமல் இருக்க, உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க வேண்டியது அவசியம். மேலும், வாசனை திரவியம் அடித்த இடத்தை ஆடைகளால் மறைக்காதீர்கள். காற்று படும் இடங்களில் மட்டும் பூசுவதற்குப் பதிலாக, கழுத்து, மணிக்கட்டுகள் அல்லது முழங்கையின் உட்பகுதி போன்ற நாடித்துடிப்பு உணரக்கூடிய இடங்களில் பயன்படுத்தவும். இருப்பினும், அதிக வெப்பமான காலநிலையில், வாசனை திரவியத்தை நேரடியாகத் சருமத்தில் பூசுவதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், அதிகப்படியான வியர்வையினால் தோலில் உள்ள இயற்கையான எண்ணெய்கள் வாசனை திரவியத்தின் நறுமணத்தைச் சிதைத்துவிடக்கூடும்.



Click it and Unblock the Notifications

