Latest Updates
-
1 கப் கோதுமை ரவை இருந்தா.. இப்படி கிச்சடி செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்... -
நவம்பர் 12, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணக்கஷ்டம் தீரும் நாளாக இருக்குமாம் -
சூரியன் அனுஷம் நட்சத்திரத்திற்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
செவ்வாய் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
கத்திரிக்காயை இந்த மாதிரி துவையல் செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமா இருக்கும் -
வரகரிசியில் இப்படி தக்காளி சாதம் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பர்ப்யூம் அடிக்கும் போது செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன தெரியுமா? அடுத்தமுறை இந்த தவறை செய்யாதீங்க -
இந்த 5 ராசிக்காரங்க பிரேக் அப் ஆனாலும் Ex-ஐ விடமாட்டாங்களாம்.. உங்க ராசி இதுல இருக்கா? -
திடீர் அதிர்ஷ்டத்தால் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டமுள்ள 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
குளிர்காலத்தில் சருமம் அதிகம் வறண்டு போகுதா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி போடுங்க..
மயில்கள் விஷப்பாம்புகளை சாப்பிட்டாலும் ஏன் உயிரிழப்பதில்லை? அதில் உள்ள ரகசியம் என்ன தெரியுமா?
இந்தியாவின் தேசியப் பறவை என்றால் அது அழகிய தோகைகளை கொண்ட மயில்தான். மயில் அதன் அழகான இறகுகளுக்கும், வசீகரமான நடனத்திற்கும் பெயர் பெற்றது. இந்தியாவின் தேசியப் பறவையான மயில், அதன் அழகிற்காக அனைவராலும் போற்றப்படுகிறது. ஆனால், நமது தேசிய பறவையைப் பற்றி நமக்கு தெரியாத ஒரு முக்கிய விஷயம் உள்ளது. அதுதான் மயில் விஷப்பாம்புகளை வேட்டையாடி உண்ணும் திறன் கொண்டது. மயில்கள் கொடிய விஷமுள்ள விஷப்பாம்புகளை வேட்டையாடுகின்றன. ஆனால் பாம்புகளின் விஷம் மயில்களைப் பாதிப்பதில்லை. விஷப்பாம்புகளை உண்டாலும், மயில்கள் எப்படி இறப்பதில்லை? அதை விஷத்திலிருந்து பாதுகாப்பது எது? இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பாம்புகளை வேட்டையாடும் பறவை
மயில்கள் அனைத்துண்ணி வகையை சேர்ந்த ஒரு பறவையாகும். அதாவது, அவை பல்வேறு வகையான தாவரங்களையும் விலங்குகளையும் உணவாகக் கொள்கின்றன. இவை பூச்சிகள், புழுக்கள், சிறிய விலங்குகள், தவளைகள், ஏன் பாம்புகளைக் கூட உணவாக உட்கொள்கின்றன. மயில்களின் வேகமான இயக்கங்கள், சுறுசுறுப்பு மற்றும் வலிமையான அலகு ஆகியவை வேட்டையாடும்போது அவற்றுக்கு பெரிதும் உதவுகின்றன. இவை பாம்பின் அசைவுகளைக் கவனித்து, சரியான தருணத்தில் அதன் மீது பாய்ந்து அதைப் பிடிக்கின்றன. பின்னர், தங்கள் அலகைப் பயன்படுத்தி அந்தப் பாம்பைக் கட்டுக்குள் கொண்டு வருகின்றன. இதன்மூலம் இயற்கையில் பாம்புகளை வேட்டையாடக்கூடிய சக்திவாய்ந்த பறவைகளில் மயில்களும் ஒன்றாக உள்ளது.
பாம்பு விஷத்தால் மயில் ஏன் பாதிக்கப்படுவதில்லை?
பாம்பின் விஷம் சில நிமிடங்களில் மனிதர்களையே சாகடித்துவிடும். இந்த நிலையில் மயில்கள் எப்படி பாம்புகளை உண்டாலும் மரணிப்பதில்லை. இதற்கான மிக முக்கியமான காரணம், பாம்பு விஷம் செயல்படும் விதத்தில் உள்ளது. பெரும்பாலான பாம்புகளின் விஷம் மிகவும் சிக்கலானது. இது பல்வேறு புரதங்கள் மற்றும் உயிர் மூலக்கூறுகளைக் கொண்ட கலவையாகும். ஒரு பாம்பு கடிக்கும்போது, அதன் விஷம் உடலின் திசுக்களுக்குள் நேரடியாகச் சென்றுவிடும். ஆனால், மயில் ஒரு நச்சுப் பாம்பை உண்ணும்போது, அந்த விஷம் இரத்தத்திற்குள் செல்வதற்குப் பதிலாக, மயிலின் செரிமான மண்டலத்திற்குள் செல்கிறது. இதனால், அந்த விஷத்திலுள்ள பல்வேறு புரதங்கள் சிதைக்கப்பட்டு செயலிழக்கின்றன.
செரிமானத்தன்மை விஷத்தின் வீரியம் குறைகிறது
மயிலின் செரிமான மண்டலத்திற்குள் இருக்கும் என்சைம்கள், உணவிலுள்ள புரதங்களைச் சிதைக்கின்றன. பாம்பின் விஷத்தில் உள்ள பல புரதங்களுக்கும் இதே நிலை ஏற்படுகிறது. இதனால் அவை செயலற்ற நிலையை அடையக்கூடும். அதாவது பாம்பு கடித்து ஒரு காயத்தின் வழியாக உடலில் நுழையும் விஷத்திற்கும், உட்கொள்ளப்படும் விஷத்திற்கும் வேறுபாடு உண்டு. உட்கொள்ளப்படும் நஞ்சு, என்சைம்களின் செயல்பாட்டினால் சிதைந்துபோக அதிக வாய்ப்புள்ளது.
காயங்கள் வழியாக விஷம் உடலுக்குள் நுழைவதால் ஏற்படும் ஆபத்து
மயில்கள் பாம்புகளை சாப்பிடுவதில் ஆபத்து இல்லையென்றாலும், அதில் வேறுசில ஆபத்துகளும் உள்ளது. மயிலின் வாயிலோ அல்லது அதன் செரிமான மண்டலத்திலோ ஏதேனும் காயங்கள் இருந்தால், நஞ்சு திசுக்களுக்குள் ஊடுருவக்கூடும். இது நச்சுத்தன்மையின் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். ஒரு விஷப்பாம்பு மயிலைக் கடித்தால், அதன் நஞ்சு நேரடியாக உடலுக்குள் சென்று மயிலுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும். மயில் பாம்பு நஞ்சிலிருந்து முழுமையாக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதென்றும், அதன் உடலில் மந்திர சக்தி உள்ளதென்றும் நினைப்பது தவறாகும்.



Click it and Unblock the Notifications

