வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது!

Mercury Direct In Libra On 13 November 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். இந்த புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். கிரகங்களிலேயே குறுகிய காலத்தில் தனது நிலையை மாற்றக்கூடியவர் தான் புதன்.

இப்படிப்பட்ட புதன் அக்டோபர் 24 ஆம் தேதி முதல் துலாம் ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். வக்ர நிலையில் புதன் வலுவிழந்து இருப்பதால், அவரால் கிடைக்கவிருந்த நற்பலன்கள் கிடைக்காமல் இருக்கலாம். இந்நிலையில் இந்த புதன் நவம்பர் 13 ஆம் தேதி துலாம் ராசியில் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார்.

Mercury Direct In Libra On 13 November 2026 These Zodiac Signs Will See Career Growth And Money Gains

புதன் வக்ர நிவர்த்தி அடைவதால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக தொழில் வாழ்க்கையிலும், பேச்சிலும், முடிவெடுக்கும் திறனிலும் இதன் தாக்கம் நன்கு தெரியும். இப்போது துலாம் ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதனால் எந்த ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக அட்டகாசமாக இருக்கும் என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசியின் 7 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இருந்தாலும் அவசரப்பட்டு எந்த ஒரு நிதி முடிவுகளையும் எடுக்கும் முன் நன்கு சிந்தித்து எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய நிதி இழப்பை சந்திக்க நேரிடும்.

கும்பம்

கும்ப ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்வில் முன்னேற்றத்திற்கான பாதை திறக்கும். புதிய திட்டங்களை தொடங்குவதற்கு இக்காலம் உகந்ததாக இருக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். இக்காலத்தில் எந்த ஒரு முதலீடுகளையும் நன்கு சிந்தித்து எடுத்தால், நல்ல லாபத்தைப் பெறலாம்.

கன்னி

கன்னி ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் செயல்திறன் மேம்படும். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரக்கூடிய புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. பட்ஜெட் போட்டு செலவழித்தும், பணத்தை சேமித்தும் வந்தால், நன்மை பயக்கும்.

துலாம்

துலாம் ராசியின் முதல் வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தகவல் தொடர்பு திறன் சிறப்பாக இருக்கும். பேச்சால் பல வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கலாம். தொழிலதிபர்களுக்கு இக்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். இதன் மூலம் தொழிலில் நல்ல உச்சத்தை தொடுவீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Thursday, November 12, 2026, 17:13 [IST]
Desktop Bottom Promotion