Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க உடம்பை இரும்பு மாதிரி வைச்சுக்க ஆசைப்படுவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
முடி கொட்டுதா? முடியின் வளர்ச்சியை அதிகரிக்க.. விளக்கெண்ணெயை வெச்சு இப்படி ஹேர் மாஸ்க் போடுங்க.. -
வாஸ்து படி உங்க குடும்ப போட்டோவை வீட்டின் எந்த திசையில் வைக்க வேண்டும்? எந்த திசையில் வைக்கக்கூடாது? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
ஒரு நாள் மட்டும் இந்தியாவின் தலைநகராக இருந்த இந்திய நகரம் எது தெரியுமா? அதற்குப்பின் என்ன நடந்தது தெரியுமா? -
குளிர்காலத்தில் கொள்ளு வெச்சு இப்படி சாம்பார் செய்யுங்க.. சளி, தலை பாரம் தொல்லையே இருக்காது! -
வீட்ல காய்கறி எதுவும் இல்லையா? இந்த கொங்கு ஸ்டைல் அப்பள கூட்டு செய்யுங்க - சாதத்தோட சாப்பிட பிரமாதமா இருக்கும் -
சளி Vs ஃப்ளூ காய்ச்சல் Vs நிமோனியா: அறிகுறிகளை வைத்து வித்தியாசத்தை எப்படி அறிவது? விளக்கும் டாக்டர்! -
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்.. சனியின் மீது விழும் செவ்வாயின் பார்வை..12 ராசிக்கும் எப்படி இருக்கும்? -
மயில்கள் விஷப்பாம்புகளை சாப்பிட்டாலும் ஏன் உயிரிழப்பதில்லை? அதில் உள்ள ரகசியம் என்ன தெரியுமா?
Hair Care: தலைக்கு எண்ணெய் வைக்கும் போது இந்த தவறுகளை தெரியமா கூட செஞ்சுராதீங்க - இல்லனா அவ்வளவுதான்
Hair Care Tips: ஆரோக்கியமான தலைமுடிக்கு தலைக்கு எண்ணெய வைக்க வேண்டியது அவசியமாகும். இந்தியவைப் பொறுத்தவரை தலைக்கு எண்ணெய் தேய்ப்பது ஒரு சடங்கு போலவே பின்பற்றப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக நம் தலைமுடியில் தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் அல்லது நெல்லிக்காய் எண்ணெய் தடவி, முடியை நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர்த்து வருகிறோம்.

இதற்குப் பின்னால் அறிவியல் பூர்வமான காரணங்கள் உள்ளன. எண்ணெய்கள் உச்சந்தலைக்கு ஊட்டமளித்து, முடியை வேரிலிருந்து பலப்படுத்துவதுடன், இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்துகின்றன. ஆனால், இதிலுள்ள சிக்கல் என்னவென்றால், நம்மில் பலர் இதைத் தவறான முறையில் செய்கிறோம். உங்கள் முடி ஒரு குறிப்பிட்ட நீளத்திற்கு மேல் வளரவில்லை என்றாலோ, அடிக்கடி உடைந்து போனாலோ அல்லது பொலிவிழந்து காணப்பட்டாலோ, அதற்கு மரபணுக்கள் மட்டுமே காரணமல்ல; நீங்கள் எண்ணெய் தேய்க்கும் முறையும் அதற்கொரு காரணமாக இருக்கும். நீங்கள் தலைக்கு எண்ணெய் வைக்கும் போது செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
அதிகப்படியான எண்ணெய் தேய்ப்பது
அதிகமாக எண்ணெய் வைப்பதால் அதிக ஊட்டச்சத்து கிடைக்கக்கூடும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் அப்படி அல்ல. தேங்காய் எண்ணெய் அல்லது பிற எண்ணெய்களை உச்சந்தலையில் அதிகமாகத் தேய்ப்பது, முடியின் எடையை அதிகரித்து, உரோமக்கால்களை அடைத்துவிடும். இது முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, வளர்ச்சியைக் குறைத்துவிடும். மேலும், அதிகப்படியான எண்ணெய் அழுக்கை ஈர்ப்பதுடன், பூஞ்சைத் தொற்று அல்லது பொடுகுத் தொல்லைக்கும் வழிவகுக்கும். முடியின் நீளத்தைப் பொறுத்து, ஒரு டீஸ்பூன் முதல் ஒரு டேபிள்ஸ்பூன் வரையிலான அளவு போதுமானது.
உச்சந்தலை மசாஜைத் தவிர்ப்பது
முடியின் தண்டுப் பகுதியில் மட்டும் எண்ணெய் தடவுவது மற்றொரு பொதுவான தவறாகும். முடியின் நடுப்பகுதியிலும் நுனியிலும் எண்ணெய் தடவினால் முடி வேகமாக வளரும் என்று நினைப்பது தவறு. உண்மையில் முடி அங்கிருந்து வளராது. உச்சந்தலையில் உள்ள உரோமக்கால்கள்தான் உண்மையான தொடக்கப் புள்ளியாகும். உச்சந்தலையில் முறையான தூண்டுதல் அளிக்கப்படாவிட்டால், எண்ணெயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் திறம்பட உறிஞ்சப்படாது, மேலும் உச்சந்தலையில் இரத்த ஓட்டமும் மேம்படாது. இதைத் தவிர்க்க குறைந்தது 5-10 நிமிடங்கள் உங்கள் உச்சந்தலையில் சிறிய வட்ட இயக்கங்களில் மசாஜ் செய்யுங்கள்.
எண்ணெயை அதிக நேரம் அல்லது குறைந்த நேரம் தலையில் வைத்திருப்பது
பெரும்பாலான மக்கள் எண்ணெய் எவ்வளவு நேரம் இருக்கிறதோ, அவ்வளவு நல்லது என்று நினைத்து, எண்ணெயை மணிக்கணக்கில், ஏன் இரவு முழுவதும் கூட வைத்திருக்கிறார்கள். இரவு முழுவதும் சிறிதளவு எண்ணெய் தடவுவது பரவாயில்லை என்றாலும், அதை அதிக நேரம், குறிப்பாக சரியாக சுத்தம் செய்யாமல் வைத்திருப்பது, உச்சந்தலையை எண்ணெய் பிசுபிசுப்பாக மாற்றி, தூசியை ஈர்த்து, பூஞ்சை வளர்ச்சியை ஏற்படுத்தும். அதேசமயம் எண்ணெய் தடவிய உடனேயே உடனடியாக தலையை அலசுவது, எண்ணெய் சருமத்தினுள் ஊடுருவப் போதுமான நேரத்தைக் கொடுப்பதில்லை. பெரும்பாலான எண்ணெய்களுக்கு, 1-2 மணி நேரம் வைத்திருப்பது சிறந்தது.
முடி வகைக்கு பொருந்தாத முடியைப் பயன்படுத்துவது
இந்தியாவில் தேங்காய், பாதாம், எள் அல்லது கடுகு எண்ணெய் என பலவிதமான எண்ணெய்களை தலையில் பயன்படுத்துகிறார்கள். ஆனால் எல்லா எண்ணெய்களும் எல்லா உச்சந்தலைக்கும் பொருந்தாது. உதாரணமாக, தேங்காய் எண்ணெய் வறண்ட முடிக்குச் சிறந்தது, ஆனால் எண்ணெய் பசையுள்ள உச்சந்தலைக்கு அது பொருந்தாது. தவறான எண்ணெயைத் தொடர்ந்து பயன்படுத்துவது உரோமக்கால்களை அடைத்து, அரிப்பை உண்டாக்கி, அல்லது முடி உதிர்வைக்கூட ஏற்படுத்தலாம்.
ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை புறக்கணிப்பது
நீங்கள் எவ்வளவுதான் தலைமுடியில் எண்ணெய் தடவினாலும், உங்கள் உணவுமுறை சரியாக இல்லையென்றால், முடி ஆரோக்கியமாக வளராது. பல இந்தியர்கள் வெளிப்புற பராமரிப்பில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள், ஆனால் மிக முக்கியமான ஊட்டச்சத்தைப் புறக்கணிக்கிறார்கள். புரதம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் பி12 மற்றும் பயோட்டின் மற்றும் போதிய நீர்ச்சத்து இல்லாமை ஆகியவை முடி வளர்ச்சியைத் தடுக்கும். அதேசமயம் மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை கூட முடி வேர்க்கால்களைப் பாதிக்கின்றன.



Click it and Unblock the Notifications

