Latest Updates
-
முடி கொட்டுதா? முடியின் வளர்ச்சியை அதிகரிக்க.. விளக்கெண்ணெயை வெச்சு இப்படி ஹேர் மாஸ்க் போடுங்க.. -
வாஸ்து படி உங்க குடும்ப போட்டோவை வீட்டின் எந்த திசையில் வைக்க வேண்டும்? எந்த திசையில் வைக்கக்கூடாது? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
ஒரு நாள் மட்டும் இந்தியாவின் தலைநகராக இருந்த இந்திய நகரம் எது தெரியுமா? அதற்குப்பின் என்ன நடந்தது தெரியுமா? -
குளிர்காலத்தில் கொள்ளு வெச்சு இப்படி சாம்பார் செய்யுங்க.. சளி, தலை பாரம் தொல்லையே இருக்காது! -
வீட்ல காய்கறி எதுவும் இல்லையா? இந்த கொங்கு ஸ்டைல் அப்பள கூட்டு செய்யுங்க - சாதத்தோட சாப்பிட பிரமாதமா இருக்கும் -
சளி Vs ஃப்ளூ காய்ச்சல் Vs நிமோனியா: அறிகுறிகளை வைத்து வித்தியாசத்தை எப்படி அறிவது? விளக்கும் டாக்டர்! -
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்.. சனியின் மீது விழும் செவ்வாயின் பார்வை..12 ராசிக்கும் எப்படி இருக்கும்? -
மயில்கள் விஷப்பாம்புகளை சாப்பிட்டாலும் ஏன் உயிரிழப்பதில்லை? அதில் உள்ள ரகசியம் என்ன தெரியுமா? -
1 கப் கோதுமை ரவை இருந்தா.. இப்படி கிச்சடி செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்...
இந்த 4 ராசிக்காரங்க உடம்பை இரும்பு மாதிரி வைச்சுக்க ஆசைப்படுவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
ஆரோக்கியமாக வாழ்வதே வாழ்க்கையின் உண்மையான செல்வமாகும். உடலை ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்திருப்பது என்பது சிலருக்கு வெறும் வழக்கமாக இல்லாமல் வாழ்க்கை முறையாகவே உள்ளது. அவர்கள் எப்போதும் தங்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரை உடற்பயிற்சி என்பது மூச்சு விடுவது போன்றது.

ஜோதிடத்தின் படி சில ராசிகளில் பிறந்தவர்கள் வலுவான மன உறுதி, ஒழுக்கம் மற்றும் ஆற்றலுடன் பிறக்கிறார்கள். முயற்சியால் யார் வேண்டுமானாலும் உடற்தகுதி பெற முடியும் என்றாலும், இந்த குறிப்பிட்ட ராசிக்காரர்கள் அவர்களின் ஆளும் கிரகங்களால் தீவிர உடற்பயிற்சி வெறியர்களாக இருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. இந்த பதிவில் எந்தெந்த ராசிகளில் பிறந்தவர்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் வெறிபிடித்தவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசியானது செயல், ஆற்றல் மற்றும் வலிமையின் கிரகமான செவ்வாயால் ஆளப்படுகிறது. மேஷ ராசியில் பிறந்தவர்கள், தளர்வாத ஊக்கத்திற்கும் உடல் வலிமைக்கும் பெயர் பெற்றவர்கள். உடற்பயிற்சி அவர்களுக்கு ஒரு எரிபொருள் போன்றது. இதுவே அவர்களை உற்சாகமாகவும், இலக்கில் கவனத்துடனும் செயல்பட வைக்கிறது. அவர்கள் தீவிரமான உடற்பயிற்சிகள், போட்டித்தன்மை கொண்ட விளையாட்டுகள் மற்றும் சவால்களை விரும்புகிறார்கள். அவர்கள் ஒவ்வொரு விஷயத்தை சாதிக்கும் போது அவர்களின் எல்லைகள் தொடர்ந்து விரிவடைந்து கொண்டே இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் அளவில்லாத ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். சூரியனால் ஆளப்படுவதால், அவர்கள் அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க விரும்புகிறார்கள். தன்னம்பிக்கையுடனும், வசீகரமாகவும், சுயக் கட்டுப்பாட்டுடனும் இருக்க உடற்பயிற்சி அவர்களுக்கு உதவுகிறது. அவர்கள் வெறும் உடற்பயிற்சி மட்டுமின்றி தங்களின் தோற்றத்தை மேம்படுத்த அனைத்து வழிகளிலும் முயற்சிப்பார்கள். சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் உடற்பயிற்சிகளில் மிகவும் சீராக இருப்பார்கள் மற்றும் வலுவான உடலமைப்பை விரும்புவார்கள். அவர்களின் இயல்பான வசீகரம், அவர்களை சிறந்த உடலமைப்பில் இருக்கத் தூண்டுகிறது.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் ஒழுக்கமும், உடல் நலனில் அக்கறையும் கொண்டிருப்பார்கள். கிரகங்களின் இளவரசரான புதனால் ஆளப்படும் இவர்கள், தங்கள் உடலுக்குள் என்ன செல்கிறது என்பதில் மிகவும் கவனமாக இருப்பார்கள். தங்களின் உணவுப்பழக்கம் முதல் உடற்பயிற்சி வழக்கம் வரை, இவர்கள் தூய்மையான உணவு மற்றும் உடற்பயிற்சி நடைமுறைகளில் மிகவும் தீவிரமாக இருப்பார்கள். கன்னி ராசிக்காரர்கள் நீண்ட கால உடற்பயிற்சித் திட்டங்களை உருவாக்குவதிலும், அவற்றை உறுதியாகப் பின்பற்றுவதிலும் சிறந்தவர்கள். அவர்கள் அனைத்தும் பர்பெக்ட்டாக இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள் அதில் அவர்களின் உடலமைப்பும் ஒன்றாகும்.
மகரம்
மகர ராசியின் அதிபதி சனி, ஒழுக்கம், கட்டமைப்பு மற்றும் கடின உழைப்பின் கிரகமாகும். மகர ராசியில் பிறந்தவர்கள், உடற்பயிற்சி விஷயத்தில் கூட, கவனம், இலக்கு நோக்கு மற்றும் மிகுந்த பொறுப்புணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் ஆரோக்கியத்தை ஒரு குறுகிய கால பொழுதுபோக்காகக் கருதாமல், ஒரு நீண்ட கால முதலீடாகப் பார்ப்பார்கள். உடற்பயிற்சித் திட்டங்கள், கடுமையான உணவு முறைகள் மற்றும் உடற்பயிற்சி இலக்குகளுடன் அவர்கள் தங்களை வளர்த்துக் கொள்கிறார்கள். மகர ராசிக்காரர்கள் குறுக்கு வழிகளை நம்புவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை, உடற்பயிற்சி என்பது வலிமை, சமநிலை மற்றும் கட்டுப்பாட்டை வழங்குவதாகும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

