Latest Updates
-
18 ஆண்டுகள் கழித்து ராகுவால் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிக்காரர்கள் இவங்க தான்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
இட்லிக்கு இப்படி ஒருடைம் தண்ணி சட்னி செய்யுங்க.. எல்லாரும் ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
நவம்பர் 13, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சுக்கிர பெயர்ச்சியால் அடுத்த 40 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சனிபகவானின் ஆசியால் டிசம்பர் மாதம் முதல் 2027 வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
முட்டைக்கோஸ் இருந்தா இப்படி குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
புடலங்காய் வாங்குனா அதனுடன் பால் சேர்த்து நெல்லை ஸ்டைலில் பால் கூட்டு செய்யுங்க - அட்டகாசமா இருக்கும் -
Hair Care: தலைக்கு எண்ணெய் வைக்கும் போது இந்த தவறுகளை தெரியமா கூட செஞ்சுராதீங்க - இல்லனா அவ்வளவுதான் -
இந்த 4 ராசிக்காரங்க உடம்பை இரும்பு மாதிரி வைச்சுக்க ஆசைப்படுவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
முடி கொட்டுதா? முடியின் வளர்ச்சியை அதிகரிக்க.. விளக்கெண்ணெயை வெச்சு இப்படி ஹேர் மாஸ்க் போடுங்க..
முகலாய பேரரசர் அக்பரின் ஒரேயொரு இந்து மருமகன் யார் தெரியுமா? அவர்கள் திருமணம் ஏன் நடந்தது தெரியுமா?
இந்திய வரலாற்றை முகலாயர்களின் பெயர்களைத் தவிர்த்து எழுத முடியாது. ஏனெனில் கிட்டதட்ட 3 நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்தியா முகலாயர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. முகாலய அரசர்களில் அக்பருக்கு தனியிடம் உண்டும். அக்பர் 1556 முதல் 1605 வரை முகலாயப் பேரரசை ஆட்சி செய்தார்; அவர் ஒரு வலிமையான மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட ஆட்சியாளராக நினைவுகூரப்படுகிறார்.

அவரது ஆட்சிக்காலத்தில்தான் முகலாய அரசு மிகப்பெரிய பேரரசாக மாறியது. அவர் தனது பேரரசை விரிவுபடுத்தவும், வலிமையாக வைத்திருக்கவும் திருமண உறவுகளை ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்தினார். ராஜபுதன அரச குடும்பங்களுடன் உறவுகளை ஏற்படுத்திக்கொண்டதன் மூலம், வட இந்தியாவில் முகலாயர்களின் கட்டுப்பாட்டை அக்பர் பலப்படுத்தினார். ஆம்பர் நாட்டு ராஜா பார்மாலின் மகளான ஹர்கா பாயை அவர் திருமணம் செய்துகொண்டது, அவரது இராஜதந்திர கொள்கையின் ஒரு பகுதியாகும், இவர் பிற்காலத்தில் மரியம்-உஸ்-ஜமானி என்று அழைக்கப்பட்டார். இத்தகைய திருமண உறவுகள் முகலாயர்களுக்கும், ராஜபுத்திரர்களுக்கும் இடையே நம்பிக்கையை வளர்க்க உதவின.
முகலாயர்களுக்கும் மேவாருக்கும் இடையிலான மோதல்
முகலாயர்களுக்கும், மேவாருக்கும் தொடர்ச்சியாக மோதல் ஏற்படும் சூழல் நிலவி வந்தது. மகாராணா பிரதாப்பின் தலைமையில், மேவார் இராஜ்ஜியம் முகலாயர்களுக்கு அடிபணிய மறுத்தது. ஹல்திகாட்டிப் போரும், அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த பிற மோதல்களும் பல ஆண்டுகள் நீடித்தன. 1597-ல் மகாராணா பிரதாப் காலமான பிறகு, அவரது மகன் மகாராணா அமர் சிங் ஆட்சியாளராகி, முகலாயர்களுடனான எதிர்ப்பைத் தொடர்ந்தார். மேவார் ஒருபோதும் முழுமையாக முகலாயர்களின் கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை. இது அக்பருக்கு பெரும் கவலையாகவும், சவாலாகவும் நீடித்தது.
அக்பரின் இந்து மருமகன்
மகாராணா பிரதாப்பின் மறைவுக்குப் பிறகு, அமர் சிங் முகலாயர்களின் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தினார். அவரது தொடர்ச்சியான தாக்குதல்கள் முகலாயப் படைகளைப் பலமுறை பின்வாங்கச் செய்தன. அதனால் மேவாரைக் கட்டுக்குள் வைத்திருப்பது அவர்களுக்குக் கடினமான காரியமாகவே இருந்தது. பல ஆண்டுகால மோதல்கள் மற்றும் அரசியல் அழுத்தங்களுக்குப் பிறகு, ஒரு அமைதி ஒப்பந்தம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இரு தரப்பு உறவுகளைச் சுமூகமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, அக்பர் தனது மகள் கானுமை அமர் சிங்கிற்கு மணம் முடித்துக் கொடுத்ததாகக் குறிப்புகள் உள்ளன. இது இரு இராஜ்ஜியங்களுக்கு இடையிலான பதற்றத்தைத் தணிப்பதற்கான ஒரு அரசியல் உத்தியாகவே பார்க்கப்படுகிறது.
பிற திருமண உறவுகள்
முகலாய அரசவையில், மத நல்லிணக்கத்தையும், அரசியல் சமநிலையையும் பேணுவதற்குத் திருமண உறவுகள் பெரும்பாலும் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டன. அக்பர் தனது வளர்ப்பு மருமகளான பிபி முபாரக்கை, ஒரு இந்து அரச குடும்பத்திற்கு மணம் முடித்துக் கொடுத்தார். ஆதம் கானின் மகளான பிபி முபாரக், அக்பரின் மிகவும் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவரான ஆமீரின் ராஜா மான் சிங்கை மணந்துகொண்டார்.
பிற்காலத்தில் மான் சிங், குஜராத், காபூல், வங்காளம், பீகார், ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசா போன்ற பல முக்கியமான பகுதிகளை நிர்வகித்தார். இந்தத் திருமண உறவுகள் வெறும் தனிப்பட்ட உறவு மட்டுமல்ல, விசுவாசத்தையும், நம்பிக்கையையும் வலுப்படுத்துவதற்கான ஒரு அரசியல் நகர்வு என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.



Click it and Unblock the Notifications

