Latest Updates
-
முகலாய பேரரசர் அக்பரின் ஒரேயொரு இந்து மருமகன் யார் தெரியுமா? அவர்கள் திருமணம் ஏன் நடந்தது தெரியுமா? -
18 ஆண்டுகள் கழித்து ராகுவால் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிக்காரர்கள் இவங்க தான்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
இட்லிக்கு இப்படி ஒருடைம் தண்ணி சட்னி செய்யுங்க.. எல்லாரும் ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
நவம்பர் 13, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சுக்கிர பெயர்ச்சியால் அடுத்த 40 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சனிபகவானின் ஆசியால் டிசம்பர் மாதம் முதல் 2027 வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
முட்டைக்கோஸ் இருந்தா இப்படி குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
புடலங்காய் வாங்குனா அதனுடன் பால் சேர்த்து நெல்லை ஸ்டைலில் பால் கூட்டு செய்யுங்க - அட்டகாசமா இருக்கும் -
Hair Care: தலைக்கு எண்ணெய் வைக்கும் போது இந்த தவறுகளை தெரியமா கூட செஞ்சுராதீங்க - இல்லனா அவ்வளவுதான் -
இந்த 4 ராசிக்காரங்க உடம்பை இரும்பு மாதிரி வைச்சுக்க ஆசைப்படுவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
புரோஸ்டேட் வீக்கமும்.. புற்றுநோயும்.. ஆண்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!
Prostate Cancer Awareness Month 2026: புரோஸ்டேட் என்பது ஆண்களின் சிறுநீர்ப்பைக்கு கீழே அமைந்துள்ள ஒரு சிறிய, வால்நட் அளவிலான சுரப்பியாகும். தமிழில் இதை முன்னீர்ப்பை சுரப்பி என்று அழைப்பார்கள். சுமார் 20-25 கிராம் எடையுள்ள இந்த சுரப்பியின் பணி விந்தணுக்களுக்கு ஊட்டமளித்து அவற்றை எடுத்துச் செல்ல உதவும் விந்து திரவத்தை உற்பத்தி செய்வது ஆகும்.
சில ஆண்களுக்கு வயது ஆக ஆக புரோஸ்டேட் சுரப்பி அளவில் பெரிதாக தொடங்குகிறது. இதனால் அவர்களுக்கு சிறுநீர் கழிப்பதில் சிரமங்கள் ஏற்படுகிறது. இச்சுரப்பி விரிவாக்கத்தை ஆபத்தற்ற புரோஸ்டேட் வீக்கம் - சுருக்கமாக பிபிஎச் (BPH) என்று சொல்வார்கள். ஆனால், புரோஸ்டேட் சுரப்பியில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகளும் உண்டு.

இவ்விரண்டிற்கும் சில வேறுபாடுகள் உள்ளன. பிபிஎச் சாதாரண புரோஸ்டேட் செல்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் தோன்றுகிறது. இது புற்றுநோய் அல்லாத வீக்கம். இது புற்றுநோயாக மாறாது. புரோஸ்டேட் புற்றுநோய் கட்டுப்பாடற்ற முறையில் அசாதாரண செல்கள் வளர்வதைக் குறிக்கிறது. இவை சுற்றியுள்ள திசுக்களை ஆக்கிரமித்து மற்ற உறுப்புகளுக்கும் பரவக்கூடும்.
இந்த இரண்டு நிலைகளும் புரோஸ்டேட்டின் வெவ்வேறு பகுதிகளில் உருவாகின்றன. பிபிஎச் வழக்கமாக சிறுநீர்க்குழாயைச் சுற்றியுள்ள பகுதியில் தொடங்குகிறது; ஆனால் சுமார் 70-75% புரோஸ்டேட் புற்றுநோய்கள் சுரப்பியின் வெளிப்புறப் பகுதியில் உருவாகின்றன.
இந்த புரோஸ்டேட் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஆண்களிடையே ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் புரோஸ்டேட் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த மாதத்தை முன்னிட்டு புரோஸ்டேட் வீக்கம் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் குறித்து அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள் குறித்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையின் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் அனு ரமேஷ் அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார்.
முக்கிய அறிகுறிகள்
பிபிஎச் அறிகுறிகள்: சிறுநீர் கழிக்கத் தொடங்குவதில் சிரமம், பலவீனமான அல்லது விட்டு விட்டு வரும் சிறுநீர் ஓட்டம், அடிக்கடி சிறுநீர் கழித்தல் (குறிப்பாக இரவில்), அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு மற்றும் சிறுநீர்ப்பை முழுமையாகக் காலியாகாத உணர்வு. தீவிரமான நிலையில் சிறுநீர் அடைப்பு, தொற்றுகள் மற்றும் சிறுநீர்ப்பை கற்கள் உருவாகலாம்.
புரோஸ்டேட் புற்றுநோய் அறிகுறிகள்: ஆரம்ப கட்ட புரோஸ்டேட் புற்றுநோய் பெரும்பாலும் எந்தவித வெளிப்படையான அறிகுறிகளையும் ஏற்படுத்துவதில்லை. அறிகுறிகள் இருக்கும்போது, அவை பிபிஎச்-ன் அறிகுறிகளைப் போலவே இருக்கலாம்; அதனால் அவை புற்றுநோயை மட்டுமே குறிக்க வேண்டும் என்பதில்லை. நோய் முற்றிய நிலையில் சிறுநீரில் ரத்தம், தொடர்ச்சியான எலும்பு அல்லது முதுகு வலி, விவரிக்க முடியாத எடைக் குறைவு மற்றும் கால் வீக்கம் ஆகியவை ஏற்படலாம்.
நோய்க் காரணிகள்
"பிபிஎச் என்பது ஏதேனும் ஒரு தனிப்பட்ட காரணத்தால் ஏற்படுவதில்லை; மாறாக, வயது முதிர்வு மற்றும் முன்னீர்ப்பைச் சுரப்பிக்குள் நீண்ட காலமாக ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களே இதற்கு முக்கிய காரணங்களாகும். இவற்றுடன், மரபணு மற்றும் குடும்ப வரலாறும் முக்கிய காரணிகள்.
புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதற்கும் வயது மற்றும் குடும்ப வரலாறு காரணமாக இருக்கலாம். தந்தை அல்லது சகோதரருக்கு இந்நோய் இருந்திருந்தால், அந்த ஆண்களுக்கு நோய் வருவதற்கான ஆபத்து அதிகம். BRCA1 மற்றும் BRCA2 போன்ற மரபணுக்களில் ஏற்படும் பிறழ்வுகளும் புற்றுநோய் ஏற்படுவதை அதிகரிக்கும்." என்று டாக்டர் கூறினார்.
பரிசோதனை மற்றும் கண்டறிதல்
"ஆண்களுக்கு ஏற்பட்டுள்ள அறிகுறிகள் பொறுத்து மருத்துவ ஆய்வுகள் தொடங்குகின்றன. டிஆர்இ என்னும் டிஜிட்டல் ரெக்டல் பரிசோதனை ஒரு முக்கிய பரிசோதனையாகும். பிஎஸ்ஏ என்னும் இரத்தப் பரிசோதனையும் தேவைப்படலாம்.
அல்ட்ராசவுண்ட் மற்றும் யூரோஃப்ளோமெட்ரி பரிசோதனைகள் புரோஸ்டேட் அளவு மற்றும் சிறுநீர் ஓட்டத்தை மதிப்பிட உதவுகின்றன. புற்றுநோய் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டால், சில சிறப்பு எம்ஆர்ஐ ஸ்கேன்கள் பரிந்துரைக்கப்படலாம். புற்றுநோயை உறுதிப்படுத்த வழக்கமாக புரோஸ்டேட் பயாப்ஸி தேவைப்படுகிறது. நோய் பரவியுள்ளதா என்பதை மதிப்பிட தேவைப்படும்போது சில சிடி ஸ்கேன்கள் பயன்படுத்தப்படலாம்." என்று டாக்டர் கூறினார்.
சிகிச்சை முறைகள்
பிபிஎச் வீக்கத்திற்கு சிகிச்சை: அறிகுறிகளின் தீவிரம் மற்றும் புரோஸ்டேட்டின் அளவைப் பொறுத்து சிகிச்சை அமையும். மிதமான பாதிப்புகளை வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் சில மருந்துகள் மூலம் குணப்படுத்தலாம். தொடர்ச்சியான அல்லது தீவிரமான பாதிப்புகளுக்கு குறைந்தபட்ச ஊடுருவல் சிகிச்சை முறைகள் தேவைப்படலாம்.
புரோஸ்டேட் புற்றுநோய் சிகிச்சை: இதன் சிகிச்சை முறையானது நோயின் நிலை, தீவிரம் மற்றும் நோயாளியின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பொறுத்தது. குறைந்த ஆபத்துள்ள சில பாதிப்புகளுக்கு ரோபோடிக் அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் ஹார்மோன் சிகிச்சை ஆகியவை பரிந்துரைக்கப்படலாம். முற்றிய நிலைக்கு கூடுதல் ஹார்மோன் இலக்கு மருந்துகள், ஹீமோதெரபி தேவைப்படலாம்.
பரிசோதனை அவசியம்
"நவம்பர் மாதம் 'புரோஸ்டேட் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம்' ஆகும். ஆண்கள், குறிப்பாக ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் குடும்பத்தில் புற்றுநோய் வரலாறு உள்ளவர்கள், சிறுநீரக சிறப்பு மருத்துவரை அணுகி புரோஸ்டேட் சுரப்பியின் ஆரோக்கியம் குறித்து கலந்தாலோசிக்கலாம். ஆரம்பகால புரோஸ்டேட் புற்றுநோய்க்கு பெரும்பாலும் அறிகுறிகள் இருக்காது என்பதால், பரிசோதனைகள் செய்து கொள்வது அவசியம். ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால், புரோஸ்டேட் புற்றுநோயை முழுமையாகக் குணப்படுத்தும் வாய்ப்புகள் அதிகம்." என்று டாக்டர் கூறினார்.



Click it and Unblock the Notifications


