அதிக பனியால் சருமம் சொரசொரன்னு இருக்குதா? அப்ப இந்த ஸ்க்ரப்பை வாரம் 1 முறை யூஸ் பண்ணுங்க..

Homemade Scrub For Winter Skin: தற்போது பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. மிகவும் குளிர்ச்சியான காற்றினால், சருமம் அதிகமாக வறண்டு போவதோடு, சருமத்தில் தோல்களும் உரியத் தொடங்கி சருமத்தின் அழகையே கெடுக்கும் வகையில் இருக்கும். இப்படி ஏற்படும் சரும வறட்சியையும், தோல் உரிந்து வெளிவரும் இறந்த செல்களையும் அகற்ற பலர் கடைகளில் விற்கப்படும் விலை அதிகமான ஸ்க்ரப்களை வாங்கி பயன்படுத்துவார்கள். ஆனால் விலையுயர்ந்த பொருட்களால் தான் சரும வறட்சியைப் போக்கி, சருமத்தை அழகாக வைத்துக் கொள்ள முடியும் என்பதில்லை.

Homemade Scrub For Winter Skin 5 Best DIY Scrubs For Glowing Soft amp amp Hydrated Skin

வீட்டில் எளிதில் கிடைக்கும் இயற்கை பொருட்களைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்பு கொடுத்து வந்தாலே, சருமத்தை மென்மையாகவும், இறந்த செல்களின்றியும் பொலிவோடும் வைத்துக் கொள்ளலாம். இப்போது குளிர்காலத்தில் சரும பொலிவை மேம்படுத்த உதவி புரியும் 5 நேச்சுரல் ஃபேஸ் ஸ்க்ரப்கள் குறித்து காண்போம்.

1. காபி மற்றும் தேங்காய் எண்ணெய் ஸ்க்ரப்

* இந்த ஸ்க்ரப்பிற்கு ஒரு பௌலில் 1 ஸ்பூன் காபித் தூள் மற்றும் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 ஸ்பூன் சர்க்கரையை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு முகத்தை நீரில் கழுவி, தயாரித்து வைத்துள்ள கலவையை முகத்தில் தடவி மென்மையாக 2-3 நிமிடம் ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஸ்க்ரப்பை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தலாம்.

2. தேன் மற்றும் உப்பு ஸ்க்ரப்

* இந்த ஸ்க்ரப்பிற்கு ஒரு பௌலில் 1 ஸ்பூன் உப்பு, 1 ஸ்பூன் தேன் மற்றும் 1 ஸ்பூன் ஆலிவ் ஆயிலை எடுத்துக் கொண்டு கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு முகத்தை நீரில் கழுவி விட்டு, தயாரித்து வைத்துள்ளதை முகத்தில் தடவி மென்மையாக 2-3 நிமிடம் ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஸ்க்ரப்பை குளிர்காலத்தில் வாரத்திற்கு 1-2 முறை பயன்படுத்தலாம்.

3. ஓட்ஸ் மற்றும் சர்க்கரை ஸ்க்ரப்

* இந்த ஸ்க்ரப்பிற்கு ஒரு பௌலில் 1/2 ஸ்பூன் ஓட்ஸ் பவுடரை எடுத்துக் கொண்டு, அத்துடன் 1/2 ஸ்பூன் நாட்டுச்சர்க்கரை மற்றும் 1/2 ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் சில துளிகள் ஜொஜோபா ஆயிலை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை ஈரப்பதமான சருமத்தில் தடவி, மென்மையாக சிறிது நேரம் ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஸ்க்ரப்பை வாரத்திற்கு 1-2 முறை பயன்படுத்தலாம்.

4. பாதாம் மற்றும் தேன் ஸ்க்ரப்

* இந்த ஸ்க்ரப்பிற்கு ஒரு பௌலில் சிறிது பாதாமை அரைத்து பொடி செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சிறிது தேன் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை ஈரப்பதமான முகத்தில் தடவி சிறிது நேரம் ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் ஸ்க்ரப்பை வாரத்திற்கு 1 முறை பயன்படுத்தலாம்.

5. நாட்டுச்சர்க்கரை மற்றும் வென்னிலா எசன்ஸ் ஸ்க்ரப்

* இந்த ஸ்க்ரப்பிற்கு ஒரு பௌலில் 1/2 ஸ்பூன் நாட்டுச்சர்க்கரை, சில துளிகள் வென்னிலா எசன்ஸ் மற்றும் 1/2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு முகத்தை கழுவிவிட்டு, அந்த ஈரப்பதமான சருமத்தில் இந்த கலவையை தடவி மென்மையாக 2-3 நிமிடம் ஸ்க்ரப் செய்து மசாஜ் செய்ய வேண்டும்.
* அடுத்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஸ்க்ரப்பை வாரத்திற்கு 1-2 முறை பயன்படுத்தலாம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Friday, November 13, 2026, 17:02 [IST]
Desktop Bottom Promotion