சந்திர-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண வரவு அதிகரிக்கும்!

Navpancham Yog On 14 November 2026: ஜோதிடத்தில் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அசுரர்களின் குருவாகவும் கருதப்படுகிறார். இப்படிப்பட்ட சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். அதே சமயம், மனதின் காரணியாக கருதப்படுபவர் சந்திரன். இந்த சந்திரன் கடக ராசியின் அதிபதியாவார்.

இந்த சந்திரன் நவம்பர் 14 ஆம் தேதி மகர ராசிக்குள் நுழைகிறார். அதே வேளையில் இதே நாளில் தான் வக்ர நிலையில் கன்னி ராசியில் பயணித்து வந்த சுக்கிரன் வக்ர நிவர்த்தி அடைந்து தனது பயணத்தை தொடங்குகிறார். இவ்விரு கிரகங்களின் நிலையால் நவபஞ்சம யோகம் உருவாகிறது.

Navpancham Yog On 14 November 2026 These Zodiac Signs Get More Financial Benefits

இந்த யோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் நல்ல பொருள் இன்பத்தையும், நிதி ஆதாயங்களையும் பெறவுள்ளனர். இப்போது சுக்கிரன் மற்றும் சந்திரனால் உருவாகும் நவபஞ்சம யோகத்தால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம யோகமானது நல்ல நிதி நன்மைகளை வழங்கும். முக்கியமாக நீண்ட காலமாக சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். பங்கு சந்தையில் செய்துள்ள முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்களுக்கு தங்களின் தொழிலை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டப்படும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். சொத்து தொடர்பான பழைய பிரச்சனைகள் தீரும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம யோகம் சிறப்பான பலன்களைத் தரும். அதுவும் நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். எல்லா விதமான பொருள் வசதிகளும் கிடைக்கும். சிலருக்கு கூடுதல் வருமான ஆதாரம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்பவர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பரம்பரை சொத்துக்கள் மூலமாகவும் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம யோகம் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்களை கொண்டு வரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம். நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. சிலருக்கு ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Saturday, November 14, 2026, 10:46 [IST]
Desktop Bottom Promotion