30 வருடம் கழித்து மேஷம் செல்லும் சனி: 2027-ல் சனிபகவானின் பிடியில் இருந்து விடுபடும் 3 ராசிக்காரங்க இவங்கதான்!

Saturn Transit In Aries 2027: வேத ஜோதிடத்தில் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர் சனி பகவான். இதனால் இந்த சனி பகவான் நீதிமான் என்றும் அழைக்கப்படுகிறார். இப்படிப்பட்ட சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். கிரகங்களிலேயே ஒரு ராசியில் நீண்ட காலம் பயணிக்கக்கூடியவர் சனி பகவான். இதனால் சனி பகவானின் நிலையில் மாற்றம் ஏற்பட்டால், அது ஒருவரது வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் ஏழரை சனி, அஷ்டம, அர்த்தாஷ்டம சனி போன்றவை தொடங்கும் போது பலர் வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளையும், சவால்களையும் எதிர்கொள்ள நேரிடும்.

Saturn Transit In Aries 2027 These Zodiac Signs Get Relief From The Effects Of Saturn

தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2027 ஆம் ஆண்டில் சனி பகவான் ராசியை மாற்றவுள்ளார். அப்போது செவ்வாயின் மேஷ ராசிக்குள் நுழையவுள்ளார். முக்கியமாக 30 ஆண்டுகளுக்கு பின் சனி பகவான் மேஷ ராசிக்குள் நுழையவிருக்கிறார். மேஷ ராசியில் சனி பகவான் நுழைவதால், சில ராசிக்காரர்கள் சனி பகவானின் பிடியில் இருந்து விடுபடவுள்ளார்கள். அதுவும் இந்த ராசிக்கு சனி பகவான் நுழையும் போது 3 ராசிக்காரர்கள் சனியின் தாக்கத்தில் இருந்து விடுபட்டு, வாழ்வில் மகிழ்ச்சியையும், நல்ல செழிப்பையும் காணவுள்ளனர். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

2027-ல் சனி பகவானின் ராசி மாற்றம் எப்போது?

ஜோதிடத்தின் படி, சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். தற்போது சனி பகவான் மீன ராசியில் உள்ளார். இந்நிலையில் இவர் 2027 ஆம் ஆண்டு ஜூன் 03 ஆம் தேதி காலை 6.23 மணிக்கு மேஷ ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த மேஷ ராசியில் சனி பகவான் நீச்சமடைகிறார். மேஷ ராசிக்கு சனி பகவான் செல்வதால், சில ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்குவதோடு, அஷ்டம மற்றும் அர்த்தாஷ்டம சனியின் தாக்கத்தால் பாதிக்கப்படும் ராசிகளும் மாறும்.

2027-ல் சனியின் பிடியில் இருந்து விடுபடும் ராசிகள்

கும்பம்

2027-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்கள் ஏழரை சனியின் பிடியில் இருந்து விடுபடுவார்கள். இதுவரை பிரச்சனையால் சிரமப்பட்டு வந்தவர்களின் பிரச்சனைகள் குறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ள தடைகள் நீங்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். முக்கியமாக புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது.

சிம்மம்

2027-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்கள் அஷ்டம சனியின் தாக்கத்தில் இருந்து விடுபடுவார்கள். இதனால் இதுவரை சந்தித்த பிரச்சனைகள் குறையும். தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் உள்ள மந்த நிலை நீங்கி, நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்ப சூழல் முன்பை விட மகிழ்ச்சியாக இருக்கும். மொத்தத்தில் வாழ்க்கையில் இருந்த கஷ்டங்கள் குறைந்து, சந்தோஷம் பெருகும்.

தனுசு

2027-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். பல நாட்களாக கஷ்டப்பட்டு வந்த பிரச்சனைகள் குறையும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பண பிரச்சனைகளில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் ஒவ்வொன்றும் வெற்றிகரமாக முடிவடையும்.

2027-ல் ஏழரை சனியால் பாதிக்கப்படும் ராசிகள்

சனி பகவான் மேஷ ராசிக்குள் நுழைந்ததும் சனியின் தாக்கத்தில் இருந்து சில ராசிக்காரர்கள் விடுபட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் தாக்கம் தொடங்கும். அந்த ராசிகள் பின்வருமாறு:

மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் 2 ஆம் கட்டம் தொடங்கும்.

மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் மூன்றாவது மற்றும் கடைசி கட்டம் தொடங்கும்.

ரிஷபம் - ரிஷப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் முதல் கட்டம் தொடங்கும்.

எனவே மேலே கொடுக்கப்பட்டுள்ள மூன்று ராசிக்காரர்கள் பண விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தொழிலில் அவசரப்பட்டு எந்த ஒரு முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். புதியதாக எதையும் தொடங்குவதைத் தவிர்க்க வேண்டும். முதலீடுகளை அறவே செய்யக்கூடாது. மொத்தத்தில் எந்த விஷயத்திலும் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Saturday, November 14, 2026, 17:29 [IST]
Desktop Bottom Promotion