விருச்சிக ராசிக்கு செல்லும் சூரியன்: நவம்பர் 16 முதல் இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்!

Sun Transit In Scorpio 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதந்தோறும் ராசியை மாற்றுவார். அப்படி சூரியன் ராசியை மாற்றும் போதெல்லாம், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். தற்போது சூரியன் துலாம் ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த சூரியன் நவம்பர் 16 ஆம் தேதி விருச்சிக ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய் ஆவார். சூரியன் இந்த விருச்சிக ராசியில் டிசம்பர் 16 ஆம் தேதி வரை இருப்பார்.

Sun Transit In Scorpio 2026 These Zodiac Signs Should Be Careful

சூரியனின் இந்த பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்படலாம். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த சூரிய பெயர்ச்சியால் ஆரோக்கிய பிரச்சனைகளோடு, நிதி நெருக்கடியையும், குடும்ப வாழ்க்கையில் சவால்களையும் சந்திக்க நேரிடும். எனவே இந்த ராசிக்காரர்கள் அடுத்த ஒரு மாதம் ஒவ்வொரு முடிவையும் கவனமாக எடுக்க வேண்டும். இப்போது விருச்சிக ராசிக்கு செல்லும் சூரியனால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

மிதுனம்

மிதுன ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலையில் தடைகளை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். மற்றவர்கள் சொல்வதை உடனே நம்புவதைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக வயிறு தொடர்பான பிரச்சனைகளை புறக்கணிக்காதீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். பொறுமையாக இருக்க வேண்டும். பேச்சால் உறவுகளில் விரிசல் ஏற்படலாம்.

துலாம்

துலாம் ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்திலும், குடும்ப வாழ்க்கையிலும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பேச்சில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். கோபமான பேச்சு உறவுகளில் விரிசலை ஏற்படுத்தலாம். நிதி விஷயங்களில் அவசரமாக எந்த ஒரு முடிவையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக முதலீடுகளை அவசரப்பட்டு செய்வதைத் தவிர்க்க வேண்டும். வியாபாரிகள் பண பரிவர்த்தனைகளை செய்யும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன் நிபந்தனைகளை நன்கு படித்து பார்த்து பின் முடிவெடுக்க வேண்டும்.

தனுசு

தனுசு ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அடுத்த ஒரு மாதம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும். ஒவ்வொரு முடிவையும் எடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். வேலை, வியாபாரத்தில் அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நிதி கொடுக்கல் வாங்கல்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். சிந்திக்காமல் எந்த ஒரு பெரிய முதலீடுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Saturday, November 14, 2026, 22:03 [IST]
Desktop Bottom Promotion