உங்க பிறந்த தேதி என்னனு சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்

Weekly Numerology: ஜோதிடம் போலவே எண் கணிதமும் பல நூற்றாண்டுகளாக ஒருவரின் ஆளுமை மற்றும் எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து உதவி வருகிறது. எண் கணிதம் என்பது எண்களின் அடிப்படையில் ஒருவரின் ஆளுமையை மற்றும் அவர்கள் அனுபவிக்கும் பலன்களைக் கணிக்கிறது. எண் கணிதத்தின் படி ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு அதிபதி இருக்கிறார்.

Weekly Numerology Predictions For November 15 - November 21 2026

சூரியன் எண் 1-க்கும், சந்திரன் எண் 2-க்கும், குரு (வியாழன்) எண் 3-க்கும், ராகு எண் 4-க்கும், புதன் எண் 5-க்கும், சுக்கிரன் எண் 6-க்கும், கேது எண் 7-க்கும், சனி எண் 8-க்கும், செவ்வாய் எண் 9-க்கும் அதிபதிகளாக உள்ளனர். இதன் அடிப்படையில் ஒருவருக்கான பலன்கள் கணிக்கப்படுகிறது. கீழே 2026 நவம்பர் 15 ஆம் தேதி முதல் 2026 நவம்பர் 21 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்கான அனைத்து தேதிகளில் பிறந்தவர்களுக்குமான கணிப்புகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

எண் 1 (அனைத்து மாதத்திலும் 1, 10, 19 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த வாரம் ஆரோக்கியம், உறவுகள் மற்றும் வேலை விஷயங்களில் கவனக்குறைவைத் தவிர்க்க வேண்டும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் எச்சரிக்கையுடன் வேலை செய்ய வேண்டும். இல்லையெனில் நீங்கள் தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தூக்கமின்மை அல்லது வயிறு தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்படலாம். தொழிலதிபர்கள் வார தொடக்கத்தில் மந்தநிலையை சந்திக்க நேரிடும். வருமானத்தில் தடங்கல்கள் ஏற்படக்கூடும். சில திடீர் பெரிய செலவுகள் உங்களை கவலையடையச் செய்யலாம். யாருடனும் தேவையற்ற தகராறுகளில் ஈடுபடாதீர்கள்.

எண் 2 (அனைத்து மாதத்திலும் 2, 11, 20 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

இந்த வாரம் தொழில் ரீதியாக நன்றாக இருக்கும். ஆனால் உறவுகளைப் பொறுத்தவரை நன்றாக இருக்காது. வேலை தொடர்பாக மேற்கொள்ளப்படும் பயணம் மிகவும் மங்களகரமானதாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் நல்ல செய்திகளைப் பெறலாம். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். திடீரென்று எங்கிருந்தோ நிதி ஆதாயங்களைப் பெறுவதற்கான வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.

எண் 3 (அனைத்து மாதத்திலும் 3, 12, 21 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். வேலையை முடிக்க மற்றவர்களை எதிர்பார்ப்பதை விட உங்கள் வேலையை நீங்களே செய்ய முயற்சி செய்யுங்கள்; இல்லையெனில், சரியான நேரத்தில் ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு கிடைக்காததால் நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். இந்த வாரம் தங்கள் கோபத்தையும் பேச்சையும் கட்டுப்படுத்த வேண்டியிருக்கும். பருவகால நோய்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். வாரத்தின் முதல் பாதியை விட பிற்பகுதியில் நீங்கள் கொஞ்சம் அதிகமாக அலைய வேண்டியிருக்கும். இந்த வாரம் பணம் சம்பாதிக்க நீங்கள் கடினமாக உழைத்து முயற்சி செய்ய வேண்டியிருக்கும்.

எண் 4 (அனைத்து மாதத்திலும் 4, 13, 22 மற்றும் 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

இந்த வாரம் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட காலமாக வேலை தேடிக் கொண்டிருந்தால், இந்த வாரம் விரும்பிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் திட்டமிட்டு வேலை செய்தால், நல்ல வெற்றி கிடைக்கும். இந்த வாரம் சோம்பல் மற்றும் பெருமையைத் தவிர்க்க வேண்டும். வியாபாரிகளுக்கு வாரத்தின் முதல் பாதி இரண்டாம் பாதியை விட மிகவும் நல்லதாகவும் லாபகரமாகவும் இருக்கும். செல்வம் பெருகும். மற்றவர்களை அதிகம் நம்புவதைத் தவிர்க்க வேண்டும். உறவுகளைப் பொறுத்தவரை இந்த வாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். காதல் உறவுகள் ஆழமாகும்.

எண் 5 (அனைத்துமாதத்திலும் 5, 14 மற்றும் 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் சாதாரணமாக இருக்கும். இந்த வாரத்தின் முதல் பாதியை விட இரண்டாம் பாதி மிகவும் மங்களகரமானதாகவும் நன்மை பயக்கும் விதமாகவும் இருக்கும். எனவே முக்கியமான வேலைகளை வாரத்தின் இரண்டாம் பாதியில் செய்வது நல்லது. மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். வாரத்தின் பிற்பகுதியில், வணிகர்கள் தங்கள் வணிகம் தொடர்பான சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். நண்பர்களின் உதவியும் ஆதரவும் கிடைக்கும். பணத்தை தேவையற்ற விஷயங்களுக்குச் செலவிடுவதைத் தவிர்ப்பது நல்லது. சிறந்த உறவுகளைப் பராமரிக்க, யாருடைய உணர்வுகளையும் புறக்கணிக்காதீர்கள். காதல் விவகாரங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

எண் 6 (அனைத்து மாதத்திலும் 6, 15 மற்றும் 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு வாரத்தின் தொடக்கத்தில் இருந்து தொழில் மற்றும் வணிகத்தில் சாதகமான சூழ்நிலை இருக்கும். வேலை தேடுபவர்கள் மற்றும் வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். நிலம், கட்டிடம் அல்லது பரம்பரை சொத்து வாங்குவதில் இருந்த தடைகள் நீங்கும். பொருள் மகிழ்ச்சியும் வளங்களும் அதிகரிக்கும். இந்த வாரம் பெரும்பாலும் லாபமும் முன்னேற்றமும் நிறைந்ததாக இருக்கும். இந்த வாரம் மேற்கொள்ளும் பயணம் இனிமையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.

எண் 7 (அனைத்து மாதத்திலும் 7, 16 மற்றும் 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த வாரம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உணர்ச்சிகள் காரணமாகவோ, புரிதல் இல்லாமலோ எந்த வேலையையும் செய்யக்கூடாது. இந்த வாரத்தில் எதிரிகள் மட்டுமின்றி, உங்கள் ஆரோக்கியத்தாலும் வேலைகள் கெட்டுப்போகும். பணத்தை மிகவும் கவனமாக கையாள வேண்டும் மற்றும் கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். வணிகத்துடன் தொடர்புடையவர்களுக்கு சாதகமாக இருக்கும். ஆனால் எந்தவொரு திட்டத்திலும் அல்லது வணிகத்திலும் பணத்தை முதலீடு செய்யும் போது அனுபவசாலிகளின் கருத்தைப் பெற வேண்டும்.

எண் 8 (அனைத்து மாதத்திலும் 8, 17 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வாரத்தில் எதிரிகளிடமிருந்து அச்சுறுத்தல்கள் வரலாம் எனவே ஜாக்கிரதையாக இருங்கள். இந்த வார குழப்பங்கள் உங்கள் மனநலத்தைப் பாதித்து, தேவையற்ற சச்சரவுகள் மற்றும் அலைச்சலுக்கு வழிவகுக்கும். உங்களுக்கு அன்புக்குரியவர்கள் ஒரு சர்ச்சையில் சிக்கலாம். பணியிட மற்றும் தனிப்பட்ட சிக்கல்களைத் தடுக்க உங்கள் தனிப்பட்ட தகவலைப் பாதுகாக்கவும். வணிகம் நிலையானதாக இருக்கும், ஆனால் சிக்கல்களைத் தடுக்க வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும். உடல்நலக் கவலைகள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதிக்கும், இதனால் வேலை தடைகள் மற்றும் நிதி இழப்புகள் உருவாகும்.

எண் 9 (அனைத்து மாதத்திலும் 9, 18 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

வேலையில் கவனமாக இருக்க வேண்டிய வாரமிது, சிக்கலைத் தவிர்க்க கடமைகளை விடாமுயற்சியுடன் நிறைவேற்றுங்கள். வேலையில் இருப்பவர்கள் அலுவலகத்தில் சச்சரவுகளைத் தூண்டும் எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள். குடும்ப சூழலில் சிக்கல்கள் ஏற்படுவதால், உங்கள் துணை மற்றும் குழந்தைகளுடனான உறவுகளை பாதிக்கும். குறிப்பிடத்தக்க முதலீடுகளைச் செய்வதற்கு முன், தேவையற்ற சிக்கல்களைத் தவிர்க்க அனைத்து கோணங்களையும் கருத்தில் கொண்டு எச்சரிக்கையாக இருங்கள். நிதிநிலை சவாலாக இருக்கும், ஆனால் வாரத்தின் பிற்பகுதியில் பலனளிக்கும் செய்திகள் வரலாம்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Sunday, November 15, 2026, 20:38 [IST]
Desktop Bottom Promotion