Latest Updates
-
25,000 எலிகள் கடவுளாக வழிபடப்படும் இந்தியாவின் அதிசய கோவில் - இந்த கோவில் எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
பீட்ரூட் கொண்டைக்கடலை சப்பாத்தியும், கார்லிக் டிப்பும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
நவம்பர் 15, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (15 November 2026-21 November 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும் -
கண்ணாடி போன்று பளபளப்பான முகம் வேண்டுமா? அப்ப கேரட்டை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
விருச்சிக ராசிக்கு செல்லும் சூரியன்: நவம்பர் 16 முதல் இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்! -
திருச்செந்தூர் திருப்பாகம் - சூரசம்ஹாரம் அன்று மறக்காமல் முருகனுக்கு செஞ்சு படைங்க.. -
30 வருடம் கழித்து மேஷம் செல்லும் சனி: 2027-ல் சனிபகவானின் பிடியில் இருந்து விடுபடும் 3 ராசிக்காரங்க இவங்கதான்! -
சுரைக்காய் இருந்தா இப்படி ஒரு பொடி அரைச்சு கூட்டு செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
வெந்தய நீர், பட்டை நீர், பாகற்காய் ஜூஸ் - இவை உண்மையில் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துமா? டாக்டர் பதில் இதோ!
சஷ்டி விரத ஸ்பெஷல் கடலைப்பருப்பு பாயாசம் ரெசிபி - இந்த மாதிரி பாயசம் வைச்சு பாருங்க - பிரமாதமா இருக்கும்
Kandha Shasti Special Kadalaiparuppu Payasam Recipe in Tamil: தமிழர்களின் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான சஷ்டி விரதம் இன்று கொண்டாடப்பட உள்ளது. சஷ்டி விரதத்தன்று அன்று தமிழ்க் கடவல் முருகனை வழிபட விஷேச உணவு தயாரிப்பது தமிழர்களின் பாரம்பரியமாகும். இந்த விக்ஷேச நாளில் பொதுவாக விரதமிருப்பவர்கள் ஏதாவது ஒரு சிறப்பு உணவைத் தயாரித்து முருகரை வழிபடுவார்கள். இந்த நாளில் வழக்கமான பிரசாதம் செய்யாமல் கொஞ்சம் வித்தியாசமாக ஏதாவது ஒன்றை செய்ய விரும்புகிறீர்களா?

இந்த சஷ்டி நாளில் உங்கள் வீட்டில் பாயாசம் செய்வதாக இருந்தால், வழக்கமாக செய்யும் சேமியா அல்லது பால் பாயாசம் செய்யாமல், கடலைப் பருப்பை வைத்து அருமையான பாயாசத்தை செய்யுங்கள். இந்த பாயாசம் வழக்கமான பாயாசம் போல அல்லாமல் வித்தியாசமான சுவையில் அதேசமயம் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
உங்களுக்கு இந்த சஷ்டி விரத ஸ்பெஷல் கடலைப் பருப்பு பாயாசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கடலைப் பருப்பு பாயாச ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 3 ஸ்பூன் கடலைப்பருப்பு
- 1 கப் துருவிய தேங்காய்
- ¼ ஸ்பூன் ஏலக்காய் தூள்
- 10 முந்திரி பருப்புகள்
- 1 ஸ்பூன் பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள்
- 1 ஸ்பூன் நெய்
- ½ கப் துருவிய வெல்லம்
செய்முறை:
- ஒரு தேங்காயை உடைத்து, சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். பின், அந்தத் தேங்காயைத் துருவி, அதனுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். அரைத்த தேங்காயைப் பிழிந்து பாலை எடுத்துத் தனியே வைத்துக்கொள்ளவும்.
- மீண்டும் 1 கப் தண்ணீர் சேர்த்து, தேங்காயை விழுதாக அரைத்துக்கொள்ளவும். இதைப் பிழிந்து பாலை எடுத்து, வேறொரு பாத்திரத்தில் தனியே வைத்துக்கொள்ளவும். பின் மீண்டும் 1 கப் தண்ணீர் சேர்த்து, தேங்காயை விழுதாக அரைத்துக்கொள்ளவும். இதைப் பிழிந்து பாலை எடுத்து, வேறொரு பாத்திரத்தில் தனியே வைத்துக்கொள்ளவும்.
- கடலைப்பருப்பை ஒரு வாணலியில் சேர்த்து எண்ணெய் சேர்க்காமல், பொன்னிறமாகும் வரை வறுத்துக்கொள்ளவும். பின்னர், கடலைப்பருப்பை குக்கரில் வேகவைத்து தனியே எடுத்து வைக்கவும்.
- வேகவைத்த கடலைப் பருப்பில் தண்ணீர் இருந்தால், அதை வடித்துவிட்டு, தண்ணீர் வடித்த கடலைப் பருப்பை மிக்சியில் சேர்த்து, மென்மையாக அரைத்துக்கொள்ளவும்.
- ஒரு அடி கனமான ஒரு பாத்திரத்தைச் சூடாக்கி, அதில் மசித்து வைத்துள்ள பருப்பையும் துருவிய வெல்லத்தையும் சேர்க்கவும்.
- வெல்லத்தின் பச்சை வாசனை நீங்கும் வரை, பருப்பும் வெல்லமும் கலந்த கலவையை 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- அதன் பிறகு, மூன்றாவதாக எடுத்த தேங்காய்ப்பாலைச் சேர்த்து நன்றாகக் கிளறி, மீண்டும் 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- பின்னர் இரண்டாவதாக எடுத்த தேங்காய்ப்பாலைச் சேர்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அடுப்பைச் சிறு தீயில் வைத்து, மேலும் சில நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- பாயாசம் கொதிக்கத் தொடங்கும்போது, அதனுடன் முதலில் எடுத்த தேங்காய்ப்பால் மற்றும் ஏலக்காய் பொடியைச் சேர்த்து நன்கு கலந்துவிட்டு, அடுப்பை அணைத்துவிடவும்.
- மற்றொரு பாத்திரத்தில் நெய் ஊற்றி, அது சூடானதும், உடைத்த முந்திரி மற்றும் சிறு துண்டுகளாக நறுக்கிய தேங்காயைச் சேர்த்து, பொன்னிறமாகும் வரை வறுக்கவும். வறுத்த முந்திரி மற்றும் தேங்காய்த் துண்டுகளைப் பாயாசத்தில் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- அவ்வளவுதான் சுவையான கடலைப்பருப்பு பாயாசம் ரெடி. இதை பிரசாதமாக படைத்து முருகரின் அருளைப் பெறுங்கள்.



Click it and Unblock the Notifications
