Latest Updates
-
பீட்ரூட் கொண்டைக்கடலை சப்பாத்தியும், கார்லிக் டிப்பும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
நவம்பர் 15, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (15 November 2026-21 November 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும் -
கண்ணாடி போன்று பளபளப்பான முகம் வேண்டுமா? அப்ப கேரட்டை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
விருச்சிக ராசிக்கு செல்லும் சூரியன்: நவம்பர் 16 முதல் இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்! -
திருச்செந்தூர் திருப்பாகம் - சூரசம்ஹாரம் அன்று மறக்காமல் முருகனுக்கு செஞ்சு படைங்க.. -
30 வருடம் கழித்து மேஷம் செல்லும் சனி: 2027-ல் சனிபகவானின் பிடியில் இருந்து விடுபடும் 3 ராசிக்காரங்க இவங்கதான்! -
சுரைக்காய் இருந்தா இப்படி ஒரு பொடி அரைச்சு கூட்டு செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
வெந்தய நீர், பட்டை நீர், பாகற்காய் ஜூஸ் - இவை உண்மையில் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துமா? டாக்டர் பதில் இதோ! -
சந்திர-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண வரவு அதிகரிக்கும்!
25,000 எலிகள் கடவுளாக வழிபடப்படும் இந்தியாவின் அதிசய கோவில் - இந்த கோவில் எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா?
இந்தியாவில் இலட்சக்கணக்கான கோவில்கள் உள்ளன. அதில் ஆயிரக்கணக்கான கோவில்கள் மிகவும் விநோதமானவையாக உள்ளன. அதிலொரு முக்கியமான கோவிலைப் பற்றித்தான் நாம் பார்க்கப்போகிறறோம். இந்தியாவில் உள்ள பெரும்பாலான கோவில்கள் அவற்றின் முதன்மைக் கடவுள்கள், பிரம்மாண்டமான கட்டடக்கலை மற்றும் நூற்றாண்டு கால வரலாறு போன்றவற்றுக்காக அறியப்படுகின்றன. ஆனால், ராஜஸ்தானில் உள்ள ஒரு கோவில், மிகவும் வித்தியாசமான ஒரு காரணத்திற்காக உலகளாவிய கவனத்தைப் பெற்றுள்ளது.

இந்தக் கோவிலில் 25,000-க்கும் மேற்பட்ட எலிகள் கோவில் வளாகம் முழுவதும் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன. 'கர்ணி மாதா கோவில்' என்று அழைக்கப்படும் இந்த பழங்கால தலம், ஒரு முக்கியமான புனித யாத்திரைத் தலமாகத் திகழ்வதுடன், ராஜஸ்தானின் தனித்துவமான கலாச்சார மரபுகளைப் பிரதிபலிக்கிறது.
இந்த கோவில் எங்கு உள்ளது?
பிகானேரிலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ள தேஷ்னோக் பகுதியில் அமைந்துள்ள இந்தகோவில், 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பெண் ஞானியான கர்னி மாதாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அந்த வட்டாரத்தில் அவர் துர்கா தேவியின் அவதாரமாகக் கருதப்பட்டு வணங்கப்படுகிறார். இந்தக் கோவிலின் வினோதமான அம்சம் என்னவென்றால், இங்குள்ள வளாகத்தில் ஆயிரக்கணக்கான எலிகள் வசிக்கின்றன. பொதுவாக எலிகளைப் பார்த்தால் பயந்து ஓடும் மக்கள் இந்த கோவிலில் உள்ள எலிகளை மிகுந்த மரியாதையுடனும், பக்தியுடனும் வழிபடுகிறார்கள்.
எவ்வளவு எலிகள் உள்ளன?
ராஜஸ்தான் சுற்றுலாத் துறையின் தகவல்படி, இந்த கோவிலில் 25,000-க்கும் மேற்பட்ட எலிகள் வசிக்கின்றன. இந்த எலிகள் உள்ளூர் மக்களால் 'கபா' என்று அழைக்கப்படுகின்றன. இந்த எலிகள் பார்வையாளர்களைக் கண்டு எந்தவித அச்சமும் இன்றி ஆலயத்திற்குள் சுதந்திரமாக உலவுகின்றன. பொதுவாக எலிகள் தொல்லை தரும் உயிரினங்களாகக் கருதப்பட்டாலும், இங்குள்ள எலிகள் புனிதமானவையாகக் கருதப்படுகின்றன. இவை இந்த ஆலயத்தின் அடையாளமாகவே மாறியுள்ளன.
கோவிலின் வரலாறு
இந்த அசாதாரணமான மரபு, கர்னி மாதா மற்றும் அவரது வளர்ப்பு மகனான லக்ஷ்மன் ஆகியோருடன் தொடர்புடைய ஒரு பிரபலமானபழங்கால கதையை அடிப்படையாகக் கொண்டது. இங்குள்ள நாட்டுப்புறக்கதைகளின் படி, ஒருமுறை லக்ஷ்மன் தண்ணீர் குடிக்க முயன்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவரது மரணத்தால் மிகுந்த துயருற்ற கர்னி மாதா, மரணத்தின் கடவுளான எமனிடம் சென்று, தனது மகனை மீண்டும் உயிர் பெற்றுத் தருமாறு வேண்டினார். அவரது வேண்டுகோளை ஏற்று, கர்னி மாதாவின் ஆண் வழித்தோன்றல்கள் எலிகளாக மறுபிறவி எடுப்பார்கள் என்ற வரத்தை எமன் வழங்கியதாக நம்பப்படுகிறது. இந்த நம்பிக்கையே இக்கோயிலின் தனித்துவமான மரபுக்கு அடிப்படையாக உள்ளது. பக்தர்கள் இந்த எலிகளை கர்னி மாதாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவே கருதி வழிபடுகின்றனர்.
வினோத பழக்கம்
இங்குள்ள எலிகள் பக்தர்களால் பாதுகாக்கப்படுவது மட்டுமின்றி, மக்களால் நன்கு பராமரிக்கப்படுகின்றன. அவர்கள் தொடர்ந்து எலிகளுக்கு பால், இனிப்புகள் மற்றும் பிற உணவுப் பொருட்களை வழங்குகிறார்கள். இக்கோவிலின் மிகவும் விசித்திரமான வழக்கங்களில் ஒன்று, எலிகள் கடித்த உணவை உண்பது அதிர்ஷ்டத்தையும், ஆசிகளையும் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையாகும். இங்குள்ள ஆயிரக்கணக்கான கருப்பு நிற எலிகளுக்கு இடையே, அரிதான வெள்ளை எலியைக் காண்பது மிகவும் மங்களகரமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த வெள்ளை எலிகள் கர்னி மாதா மற்றும் அவரது புதல்வர்களைக் குறிப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். எனவே, அவற்றைக் காண்பது ஒரு சிறப்பான விஷயமாகக் கருதப்படுகிறது.
கோவிலின் மரபு
இந்தக் கோவிலில் விலங்குகளைப் பாதுகாப்பதற்காக ஒரு தனித்துவமான நடைமுறை பின்பற்றப்படுகிறது. ஒரு பக்தர் தவறுதலாக ஒரு எலியைக் கொன்றுவிட்டால், அதற்குப் பிராயச்சித்தமாக, இறந்த அந்த எலியின் உருவத்தைப் போன்ற தங்கத்தாலான ஒரு மாதிரியைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பது மரபு.
கோவிலின் கட்டிடக்கலை
இந்த கோவிலின் விசித்திரமான மரபுகளைத் தாண்டி, அதன் நுணுக்கமான கட்டடக்கலைக்கும் பெயர் பெற்றது. பிகானேரின் மகாராஜா கங்கா சிங்கின் ஆதரவுடன், 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தக் கோவில் கட்டி முடிக்கப்பட்டது. இதன் கட்டமைப்பில் நேர்த்தியான பளிங்கு வேலைப்பாடுகளும் வெள்ளி அலங்காரங்களும் இடம்பெற்றுள்ளன. இந்தக் கோவில் தினமும் பக்தர்களுக்காகத் திறந்திருக்கும். பார்வையாளர்கள் எவ்வித நுழைவுக் கட்டணமும் இன்றி உள்ளே செல்லலாம். இது ஒரு முக்கியமான புனிதத் தலமாக இருப்பது மட்டுமின்றி, முக்கிய சுற்றுலாத்தலமாகவும் இருந்து வருகிறது.



Click it and Unblock the Notifications

