1 கப் தயிரும், 10 வர மிளகாயும் இருந்தா இந்த ராஜஸ்தானி பூண்டு சட்னியை செய்யுங்க - சுருக்குனு சூப்பரா இருக்கும்

Posted By:

Rajasthani Curd Garlic Chutney Recipe in Tamil: இட்லி, தோசைக்கு எப்பவுமே பெஸ்ட் சைடிஷ் அப்படினா சட்னி இல்லனா சாம்பார் தான். எப்போதும் இட்லி தோசைக்கு தேங்காய் சட்னி, கார சட்னி, தக்காளி சட்னி என்று செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் ஏதாவது சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் வர மிளகாயும், பூண்டும் தயிரும் உள்ளதா?

Rajasthani Curd Garlic Chutney Recipe How to Make at Home in Tamil

அப்படியானால் அதை வைத்து இந்த ராஜஸ்தானி தயிர் பூண்டு மிளகாய் சட்னியை முயற்சி செய்து பாருங்கள். இந்த சட்னி பார்ப்பதற்கு மிளகாய் சட்னி போல இருந்தாலும் இதில் சேர்க்கப்படும் பொருட்கள் கொஞ்சம் வித்தியாசமானவை. இந்த தயிர் மிளகாய் ராஜஸ்தானில் மிகவும் பிரபலமானது. இந்த தயிர் பூண்டு மிளகாய் சட்னி இட்லி, தோசை மற்றும் சப்பாத்தி போன்றவற்றுக்கு சூப்பர் சைடிஷா இருக்கும். இந்த சட்னி சுவையானதாக இருப்பதோடு இதை செய்வதும் மிகவும் எளிதானது.

உங்களுக்கு ராஜஸ்தானி தயிர் பூண்டு சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராஜஸ்தானி தயிர் பூண்டு சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- 10 வர மிளகாய்
- ஊறவைப்பதற்கு சுடு தண்ணீர்
- 1 ஸ்பூன் எண்ணெய்
- ½ கப் பூண்டு
- 2 அங்குல இஞ்சி, நறுக்கியது
- 2 ஸ்பூன் மல்லி விதைகள்
- 1 ஸ்பூன் சீரகம்
- ½ ஸ்பூன் மிளகு

தாளிக்க:

- 3 ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் சீரகம்
- ஒரு சிட்டிகை பெருங்காயம்
- சிறிது கறிவேப்பிலை
- 3 பல் பூண்டு, நசுக்கியது
- 1 கப் தயிர்
- தேவையான அளவு உப்பு

செய்முறை:

- முதலில், 10 வர மிளகாய்களைச் சுடுநீரில் 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். இதைத் தனியே எடுத்து வைக்கவும்.

- ஒரு வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, ½ கப் பூண்டு சேர்க்கவும்.

- பூண்டு பொன்னிறமாகும் வரை மிதமான தீயில் வதக்கவும்.

- பின்னர் 2 அங்குல அளவுள்ள இஞ்சியைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.

- இதனுடன் ஊறவைத்த வர மிளகாயைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

- பின்னர் 2 ஸ்பூன் மல்லி விதைகள், 1 ஸ்பூன் சீரகம் மற்றும் ½ ஸ்பூன் மிளகு ஆகியவற்றைச் சேர்க்கவும்.

- மசாலாப் பொருட்கள் நறுமணம் வரும் வரை வதக்கவும். பின்னர் அடுப்பை அணைத்து ஆற விடவும்.

- நன்றாக ஆறவிட்ட பிறகு, ஒரு மிக்ஸி ஜாடியில் மாற்றவும்.

- தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, மென்மையான விழுதாக அரைத்துக்கொள்ளவும். இதைத் தனியே எடுத்து வைக்கவும்.

- ஒரு பெரிய வாணலியில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, 1 ஸ்பூன் கடுகு, 1 ஸ்பூன் சீரகம், ஒரு சிட்டிகை பெருங்காயம் மற்றும் சில கறிவேப்பிலைகளைச் சேர்த்துத் தாளிக்கவும்.

- அதனுடன் 3 பல் பூண்டு சேர்த்து, பூண்டின் நிறம் மாறும் வரை வதக்கவும்.

- பிறகு, அரைத்த பூண்டு-மிளகாய் விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.

- பின்னர் 1 கப் தயிர் சேர்த்து, தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்கவும்.

- தயிர், பூண்டு-மிளகாய் விழுதோடு நன்கு கலக்கும் வரை கிளறவும். நன்கு கலந்த பிறகு, 1 தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.

- இதை மூடி வைத்து 10 நிமிடங்கள் அல்லது எண்ணெய் பிரிந்து வரும் வரை வேகவைக்கவும்.

- அவ்வளவுதான் தயிர்-பூண்டு சட்னி தயார். இது இட்லி, தோசை அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

[ of 5 - Users]
Story first published: Monday, November 16, 2026, 12:25 [IST]
Desktop Bottom Promotion