சேமியாவை வைச்சு உப்புமா செய்யாம இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்

Posted By:

Semiya Pulao Recipe in Tamil: காலை அல்லது மதிய வேளையில் சிம்பிளாக சமையலை முடிக்க நினைக்கிறீர்களா? அதே சமயம் வீட்டில் உள்ளவர்களின் பாராட்டைப் பெறும் வகையில் சுவையான ஒரு உணவை சமைக்க விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் சேமியாவும், கொஞ்சம் காய்கறியும் உள்ளதா? அப்படியானால் அதை வைத்து வீடே மணக்கும் படி சேமியா புலாவை செய்து பாருங்கள்.

Semiya Pulao Recipe How to Make at Home in Tamil

பொதுவாக சேமியாவை வைத்து உப்புமாதான் செய்வார்கள், ஆனால் அதை வைத்து ஒரு அட்டகாசமான புலாவையும் செய்யலாம். இந்த சேமியா புலாவ் ஒரு ஒன்பாட் ரெசிபி என்பதால், காலையில் குழந்தைகளுக்கு லன்ச் பாக்ஸிற்கும் செய்து கொடுக்கலாம். இந்த ஒரு சிம்பிளான சேமியா புலாவ் பிரியாணியே தோற்கும் அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். உங்கள் குழந்தைகள் காய்கறி சாப்பிடாதவர்கள் என்றால் இந்த ஸ்டைலில் செய்யும் போது அவர்கள் கூட காய்கறிகளை சாப்பிடுவார்கள். அதோடு இது செய்வதற்கு மிகவும் ஈஸியாகவும் இருக்கும் என்பதால் சமையலே தெரியாதவர்கள் கூட இதை தாராளமாக முயற்சி செய்து பார்க்கலாம்.

உங்களுக்கு அட்டகாசமான சேமியா புலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சேமியா புலாவ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- 1 ஸ்பூன் நெய்
- 1 கப் சேமியா

மசாலா விழுதுக்கு:

- ஒரு கைப்பிடி கொத்தமல்லி
- ஒரு கைப்பிடி புதினா
- 1 பச்சை மிளகாய்

பிற பொருட்கள்:

- 2 ஸ்பூன் நெய்
- 2 பிரியாணி இலை
- 3 ஏலக்காய்
- 1 அங்குல இலவங்கப்பட்டை
- 4 கிராம்பு
-1 அன்னாசிப்பூ
-1 ஸ்பூன் சீரகம்
- 15 முந்திரி பருப்புகள்
- 1 பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கியது
- 1 ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது
- ½ குடைமிளகாய், பொடியாக நறுக்கியது
- ½ கேரட், பொடியாக நறுக்கியது
- 2 ஸ்பூன் பட்டாணி
- 5 பீன்ஸ், பொடியாக நறுக்கியது
- ¾ ஸ்பூன் கரம் மசாலா
- தேவையான அளவு உப்பு
- 1½ கப் தண்ணீர்
- 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு

செய்முறை:

- முதலில், ஒரு வாணலியில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, 1 கப் சேமியாவை வறுக்கவும்.

- அடுப்பை மிதமான தீயில் வைத்து, சேமியா பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

- ஒரு மிக்சி ஜாரில் ஒரு கைப்பிடி கொத்தமல்லி, புதினா மற்றும் 1 பச்சை மிளகாயை எடுத்துக் கொள்ளவும்.

- தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து, மென்மையான விழுதாக அரைத்து தனியாக வைக்கவும்.

- ஒரு பெரிய கடாயில், 2 ஸ்பூன் நெய்யை சூடாக்கி, அதில் 2 பிரியாணி இலை, 3 ஏலக்காய், 1 அங்குல பட்டை, 4 கிராம்பு, 1 அன்னாசி பூ, 1 ஸ்பூன் சீரகம் மற்றும் 15 முந்திரி ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.

- மசாலாப் பொருட்கள் வாசனை வரும் வரையிலும், முந்திரி மொறுமொறுப்பாகும் வரையிலும் மிதமான தீயில் வறுக்கவும்.

- பின்னர் 1 பெரிய வெங்காயம், 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.

- இதனுடன் ½ குடைமிளகாய், ½ கேரட், 2 ஸ்பூன் பட்டாணி மற்றும் 5 பீன்ஸ் ஆகியவற்றைச் சேர்க்கவும்.

- காய்கறிகள் அதிகமாக வெந்துவிடாதவாறு, 2 நிமிடங்களுக்கு வதக்கவும்.

- பின்னர் தயார் செய்து வைத்துள்ள மசாலா விழுது, ¾ ஸ்பூன் கரம் மசாலா மற்றும் தேவையான அளவு ஆகியவற்றைச் சேர்க்கவும்.

- 1½ கப் தண்ணீர் ஊற்றி, தண்ணீர் நன்கு கொதிக்கும் வரை சூடாக்கவும். தண்ணீர் கொதித்ததும் வறுத்த சேமியாவைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

- மூடி வைத்து, தண்ணீர் முழுவதுமாக உறிஞ்சப்படும் வரை மிதமான தீயில் வேக வைக்கவும்.

- இப்போது மெதுவாகக் கிளறி, சேமியா நன்கு வெந்துள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

- சேமியா ஒன்றோடொன்று ஒட்டாத அளவிற்கு இருக்க வேண்டும்.

- இறுதியாக, சேமியா புலாவைப் பரிமாறுவதற்கு முன் 2 ஸ்பூன் எலுமிச்சை சாற்றைப் பிழிந்து சேர்த்து கிளறவும்.

- அவ்வளவுதான் சுவையான சேமியா புலாவ் ரெடி!

[ of 5 - Users]
Story first published: Monday, November 16, 2026, 22:23 [IST]
Desktop Bottom Promotion