2027-ல் இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் அசுர வளர்ச்சியை காண்பார்களாம்.. உங்க ராசி இதுல இருக்கா?

New Year Horoscope 2027: 2026 ஆம் ஆண்டின் இறுதியை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். இன்னும் ஒரு மாதத்தில் 2027 ஆம் ஆண்டில் நுழையவுள்ளோம். பொதுவாக ஒரு புதிய ஆண்டு பிறக்கும் போது, இந்த ஆண்டு மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும், நல்ல முன்னேற்றத்தையும் தரக்கூடிய சிறந்த ஆண்டாக இருக்க விரும்புவோம். இப்படிப்பட்ட 2027 ஆம் ஆண்டு கிரக நிலைகளின் படி சில ராசிக்காரர்களுக்கு புதிய நம்பிக்கைகளையும், புதிய வாய்ப்புக்களையும் கொண்டு வரப் போகிறது.

New Year Horoscope 2027 People Of These Zodiac Signs Will See Growth In Career Business Finance

அதுவும் சில ராசியைச் சேர்ந்தவர்கள் இந்த புதிய ஆண்டில் தங்கள் வேலையில் அசுர வளர்ச்சியை காணவுள்ளார்கள். எந்த வேலையை தொடங்கினாலும், அதில் வெற்றி, வணிகத்தில் நல்ல முன்னேற்றம், தொழிலில் இரட்டிப்பு லாபம் என சில ராசிக்காரர்கள் நல்ல உயரத்தை அடையவுள்ளனர். இப்போது 2027 ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறப்போகிறார்கள் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மீனம்

2027 ஆம் ஆண்டின் மீன ராசியைச் சேர்ந்தவர்கள் நேர்மறையான மாற்றங்களைக் காண்பார்கள். கடந்த 1 1/2 ஆண்டுகளாக நிறைய சவால்களை சந்தித்ததோடு, கடின உழைப்புக்கான பலன் கிடைக்காமல் சிரமப்பட்டனர். இதற்கு காரணம் சனி பகவானின் நிலை தான். ஆனால் இந்த புத்தாண்டில் சனி பகவான் மேஷ ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பெரிய நிம்மதியைப் பெறுவார்கள். இதுவரை எதிலும் தோல்வியையும், ஏமாற்றத்தையும் சந்தித்து வந்தவர்கள், இந்த புத்தாண்டில் புதிய தொடக்கத்தையும், நல்ல முன்னேற்றத்தையும் காணவுள்ளனர். மொத்தத்தில் இந்த புத்தாண்டில் மீன ராசிக்கார்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள்.

துலாம்

2027 ஆம் ஆண்டு துலாம் ராசிக்காரர்களுக்கு சமநிலையான ஆண்டாக இருக்கும். இந்த ஆண்டில் அதிக ஏற்ற இறக்கங்களை சந்திக்கமாட்டார்கள். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். முக்கியமாக தொழில், வணிகம், வியாபாரம் ஆகியவற்றிறல் சிறப்பான வளர்ச்சியைக் காண்பார்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்கள் வேலையில் முழு கவனம் செலுத்துவதோடு, கிடைக்கும் புதிய வாய்ப்புக்களை முமையாக பயன்படுத்தி, நல்ல வளர்ச்சியை அடைவார்கள்.

கும்பம்

2027 ஆம் ஆண்டு கும்ப ராசிக்காரர்களுக்கு மிசச்சிறப்பான ஆண்டாக இருக்கும். அதுவும் இந்த ராசிக்காரர்கள் ஜூன் 2027 வரை சில பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். இருந்தாலும் ஜூன் மாதத்திற்கு பின் டிசம்பர் வரையிலான காலக்கட்டம் மிகவும் அற்புதமாக இருக்கும். இக்காலத்தில் இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் தொழில் மற்றும் நிதி நிலையில் பெரிய அளவில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். முக்கியமாக நீண்ட காலமாக தடைபட்டு வந்த வேலைகள் இந்த ஆண்டில் வெற்றிரகரமாக நடப்பதோடு, அதன் மூலம் நல்ல நிதி ஆதாயங்களும் கிடைக்கும்.

விருச்சிகம்

2027 ஆம் ஆண்டு விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் ஆண்டாக இருக்கும். அதுவும் குரு பகவானின் நிலை சாதகமாக இருக்கும். இதன் மூலம் தொழில் மற்றும் பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான புதிய பாதைகள் திறக்கும். பெரிய அளவில் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலதிபர்களும் நல்ல லாபத்தைக் காண்பார்கள். மொத்தத்தில் இந்த 2027 ஆம் ஆண்டு விருச்சிக ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமான ஆண்டாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Monday, November 16, 2026, 15:16 [IST]
Desktop Bottom Promotion