Latest Updates
-
ஏசி ஜிம்மில் உடற்பயிற்சி செய்தால் கொழுப்பு கரையாதா? டாக்டர் சொல்லும் உண்மை! -
ஒவ்வொரு மனிதருக்கும் ஏன் தனித்துவமான கைரேகை உள்ளது? அது கருவில் எப்படி உருவாகிறது தெரியுமா? -
Karthigai Matha Rasi Palan 2026: கார்த்திகை மாதம் யாருக்கு சூப்பராவும், யாருக்கு மோசமாவும் இருக்கும் தெரியுமா? -
உடுப்பி தேங்காய் சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. வேற லெவல்-ல இருக்கும்.. -
நவம்பர் 17, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
சனி-சூரிய கூட்டணி: இன்று முதல் இந்த 3 ராசிகளுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - எந்தெந்த ராசிகள் தெரியுமா? -
குளிர்காலத்தில் சரும வறட்சியை அதிகம் சந்திக்குறீங்களா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி போடுங்க.. -
சேமியாவை வைச்சு உப்புமா செய்யாம இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
Hair Care: உங்க முடியை பளபளப்பாக, ஆரோக்கியமாக மாற்றும் வெந்தய மாஸ்க்கை எப்படி வீட்டிலேயே செய்யலாம் தெரியுமா?
1/4 கிலோ கத்திரிக்காய் இருந்தா இந்த ஆந்திரா கத்திரிக்காய் வறுவலை செஞ்சு பாருங்க - செம டேஸ்ட்டா இருக்கும்
Andhra Kathirikkai Varuval Recipe in Tamil: மதியம் சாம்பார் வைச்சுட்டு என்ன பொரியல் செய்யலாமனு யோசிக்கிறீர்களா? சிம்பிளா அதே சமயம் ஒரு சுவையான சைடிஷ் செய்யணுமா? உங்கள் வீட்டில் கத்திரிக்காய் உள்ளதா? ஆனால் உங்கள் வீட்டில் உள்ளோர் கத்திரிக்காயை விரும்பி சாப்பிடமாட்டார்களா? அப்படிப்பட்டவர்களுக்கு கத்திரிக்காயை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்து கொடுங்கள்.

இந்த ஆந்திரா ஸ்டைல் கத்திரிக்காய் வறுவல் ரசம் சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். முக்கியமாக இந்த வறுவலில் வேர்க்கடலை சேர்த்து செய்யப்படுவதால் இதன் சுவை அட்டகாசமாக இருக்கும். ஒருமுறை இப்படி வறுவலை செய்தால், பின் அடிக்கடி செய்து கொடுக்க கேட்பார்கள். கத்திரிக்காய் பிடிக்காதவர்கள் கூட இந்த கத்திரிக்காய் வறுவலை விரும்பி சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் கத்திரிக்காய் வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா கத்திரிக்காய் வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- கால் கிலோ கத்தரிக்காய்
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 3 பச்சை மிளகாய்கள்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது
- தேவையான அளவு உப்பு
- 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு
- 3 ஸ்பூன் நிலக்கடலை
மசாலாப் பொருட்கள்:
- ½ ஸ்பூன் கடுகு
- ½ ஸ்பூன் சீரகம்
- ⅛ ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 ஸ்பூன் மிளகாய் தூள்
- ½ ஸ்பூன் கரம் மசாலா
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி, அதில் ¼ தேக்கரண்டி உப்பு சேர்த்து கலக்கி வைக்கவும்.
- கத்தரிக்காய்களைக் கழுவி, உங்களுக்குத் தேவையான அளவில் நறுக்கிக்கொள்ளவும். இவற்றை உப்பு கலந்த தண்ணீரில் போட்டு வைக்கவும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பின்னர் கடுகு மற்றும் சீரகம் சேர்த்துத் தாளிக்கவும்.
- இஞ்சி-பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாயைச் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- இப்போது நறுக்கி வைத்த கத்தரிக்காய், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, மிதமான-அதிக தீயில் 3 நிமிடங்கள் வதக்கவும்.
- பிறகு, வாணலியை மூடி வைத்து, மிதமான தீயில் கத்தரிக்காய் மென்மையாகும் வரை வேகவைக்கவும்; அவ்வப்போது கிளறி விடவும்.
- கடலையை எண்ணெய் சேர்க்காமல் வறுத்து மிக்சி ஜாரில் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
- கத்தரிக்காய் நன்கு வெந்து மென்மையாக மாறியதும், கறிவேப்பிலை, இடித்து வைத்த நிலக்கடலை மற்றும் கரம் மசாலா ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- மிதமான தீயில் 2 முதல் 3 நிமிடங்கள் வரை, வாசனை வரும் வரை கிளறி வதக்கவும். சுவையை சரிபார்த்து, தேவைப்பட்டால் மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்துக்கொள்ளவும்.
- அடுப்பை அணைத்துவிட்டு, கத்தரிக்காய் வறுவல் சற்று ஆறியதும், எலுமிச்சை சாறு பிழிந்துக் கொள்ளவும்.
- இந்தக் கத்தரிக்காய் வறுவலை சூடான சாதம், சப்பாத்தி அல்லது சாம்பார்-சாதத்துடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications
