Latest Updates
-
ஒவ்வொரு மனிதருக்கும் ஏன் தனித்துவமான கைரேகை உள்ளது? அது கருவில் எப்படி உருவாகிறது தெரியுமா? -
Karthigai Matha Rasi Palan 2026: கார்த்திகை மாதம் யாருக்கு சூப்பராவும், யாருக்கு மோசமாவும் இருக்கும் தெரியுமா? -
உடுப்பி தேங்காய் சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. வேற லெவல்-ல இருக்கும்.. -
நவம்பர் 17, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
சனி-சூரிய கூட்டணி: இன்று முதல் இந்த 3 ராசிகளுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - எந்தெந்த ராசிகள் தெரியுமா? -
குளிர்காலத்தில் சரும வறட்சியை அதிகம் சந்திக்குறீங்களா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி போடுங்க.. -
சேமியாவை வைச்சு உப்புமா செய்யாம இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
Hair Care: உங்க முடியை பளபளப்பாக, ஆரோக்கியமாக மாற்றும் வெந்தய மாஸ்க்கை எப்படி வீட்டிலேயே செய்யலாம் தெரியுமா? -
இந்த 4 ராசி குழந்தைகள் ரொம்ப பிடிவாதக்காரர்களாக இருப்பார்களாம் - உங்க குழந்தை ராசி இதுல இருக்கா?
ஏசி ஜிம்மில் உடற்பயிற்சி செய்தால் கொழுப்பு கரையாதா? டாக்டர் சொல்லும் உண்மை!
Sweating And Fat Loss In Tamil: உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றால் நன்றாக வியர்க்கும் அளவுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று பலரும் நினைக்கிறார்கள். இதனால் சிலர் ஜிம்மில் ஏசி இருந்தாலும் அதை அணைத்துவிட்டு உடற்பயிற்சி செய்கிறார்கள். அப்போது தான் அதிகமாக வியர்த்து, உடலில் உள்ள கொழுப்புகள் கரையும் என்று நம்புகிறார்கள்.
ஆனால், உண்மையில் வியர்வைக்கும் கொழுப்பு கரைவதற்கும் தொடர்பு இருக்கிறதா? வியர்வை வரவில்லை என்றால் உடலில் கொழுப்பு கரையவில்லை என்று அர்த்தமா? இதற்குப் பின்னால் இருக்கும் அறிவியல் காரணங்கள் குறித்து ஈரோட்டைச் சேர்ந்த குழந்தை நல மருத்துவரும், உணவு ஆலோசகருமான டாக்டர் அருண்குமார் அவர்கள் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது, "முதலில் உடல் எடை அதிகரிப்பதற்கான காரணத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். நமது உடலில் தோலுக்கு அடியிலும், உட்புற உறுப்புகளைச் சுற்றியும் உள்ள கொழுப்புத் திசுக்களில் (Adipose Tissue) கொழுப்பு சேமிக்கப்படுகிறது. இவற்றில் பெரும்பாலும் ட்ரைகிளிசரைடுகள் (Triglycerides) என்ற மூலக்கூறுகளாக கொழுப்பு இருக்கும்.
நாம் சாப்பிடும் உணவின் மூலம் கிடைக்கும் கலோரிகளைவிட உடலுக்குத் தேவையான ஆற்றல் அதிகமாக இருக்கும் போது, உடல் இந்தச் சேமிக்கப்பட்ட கொழுப்பை ஆற்றலுக்காகப் பயன்படுத்தத் தொடங்குகிறது. அப்போது இன்சுலின் அளவு குறைவதும், அட்ரினலின் போன்ற ஹார்மோன்களின் செயல்பாடும் கொழுப்பை உடைத்து பயன்படுத்த உதவுகின்றன.
இதன் மூலம் கொழுப்புத் திசுக்களில் சேமிக்கப்பட்டிருக்கும் ட்ரைகிளிசரைடுகள் கொழுப்பு அமிலங்களாகவும், கிளிசராலாகவும் பிரிக்கப்படுகின்றன. பின்னர் இவை செல்களுக்குச் சென்று ஆற்றலாகப் பயன்படுத்தப்படுகின்றன." என்று கூறினார்.
கொழுப்பு கரையும் போது வியர்வையாக வெளியேறுகிறதா?
"இதுதான் பலருக்கும் இருக்கும் மிகப்பெரிய சந்தேகம். உண்மையில் கொழுப்பு வியர்வையாக வெளியேறுவதில்லை. உடலில் சேமிக்கப்பட்ட கொழுப்பு ஆற்றலாகப் பயன்படுத்தப்படும்போது பெரும்பகுதி கார்பன் டை ஆக்சைடாகவும், மீதமுள்ள பகுதி தண்ணீராகவும் மாறுகிறது.
இந்த கார்பன் டை ஆக்சைடு நாம் சுவாசிக்கும் போது நுரையீரல் வழியாக வெளியேறுகிறது. உருவாகும் தண்ணீர் சிறுநீர், வியர்வை மற்றும் பிற உடல் திரவங்கள் வழியாக வெளியேற்றப்படுகிறது. எனவே, கொழுப்பு குறைவதில் சுவாசத்தின் பங்கு முக்கியமானது. வியர்வை மூலம் மட்டுமே கொழுப்பு வெளியேறுகிறது என்பது அறிவியல் ரீதியாகத் தவறான கருத்தாகும்." என்று கூறியுள்ளார்.
உடற்பயிற்சி செய்யும் போது ஏன் வியர்க்கிறது?
"உடற்பயிற்சி செய்யும் போது நமது தசைகள் தொடர்ந்து சுருங்கி விரிகின்றன. இதனால் உடலில் வெப்பம் அதிகரிக்கிறது. உடலின் வெப்பநிலையைச் சீராக வைத்திருக்க மூளையில் உள்ள ஹைப்போதாலமஸ் (Hypothalamus) வியர்வைச் சுரப்பிகளைச் செயல்படுத்துகிறது.
இதனால் தோலில் வியர்வை உருவாகிறது. இந்த வியர்வை ஆவியாகும் போது உடலில் உள்ள வெப்பம் வெளியேறி உடல் குளிர்ச்சியடைகிறது. அதாவது, வியர்வையின் முக்கியமான வேலை உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவதுதான்; கொழுப்பைக் கரைப்பது அல்ல." என்று கூறியுள்ளார்.
வியர்வை வராமல் உடற்பயிற்சி செய்தாலும் கொழுப்பு குறையுமா?
"நிச்சயமாகக் குறையும்! உதாரணமாக, ஏசி இல்லாத வெப்பமான அறையில் உட்கார்ந்திருந்தால் கூட அதிகமாக வியர்க்கலாம். அப்போது உடல் எடை தற்காலிகமாகக் குறைந்திருக்கலாம். ஆனால், அது கொழுப்பு இழப்பு அல்ல; உடலில் இருந்து நீர் வெளியேறுவதால் ஏற்படும் எடை மாற்றம் மட்டுமே. தண்ணீர் குடித்தவுடன் அந்த எடை மீண்டும் அதிகரிக்கலாம்.
அதேபோல், ஏசி வசதியுள்ள ஜிம்மில் ட்ரெட்மில் பயிற்சி, சைக்கிளிங் அல்லது நடைப்பயிற்சி செய்தாலும் அதிகமாக வியர்க்காமல் இருக்கலாம். ஆனால், உடல் ஆற்றலைப் பயன்படுத்துவதால் கொழுப்பு எரிப்பு தொடர்ந்து நடைபெறலாம்." என்று கூறியுள்ளார்.
உடல் எடையைக் குறைக்க என்ன செய்ய வேண்டும்?
"உடல் எடையைக் குறைக்க அதிகமாக வியர்க்க வேண்டும் என்று நினைத்து ஏசியை அணைத்துவிட்டு உடற்பயிற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை. அதற்குப் பதிலாகத் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது, சத்தான உணவுகளைச் சாப்பிடுவது, தேவையான அளவு தண்ணீர் குடிப்பது மற்றும் கலோரி உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துவது முக்கியம்." என்று டாக்டர் அருண்குமார் கூறினார்.



Click it and Unblock the Notifications
