சனி-ராகு-கேது அடுத்த 24 நாட்களுக்கு இந்த 4 ராசிக்காரர்களை சோதிப்பார்.. உஷாரா இருங்க..

Saturn Rahu Ketu Negative Effects: ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் ராசி மாற்றங்கள் மட்டுமின்றி, அவற்றின் நிலைகளும் மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் கிரகங்கள் நேர்கதியில் பயணிப்பதை விட, வக்ரகதியில் பயணிக்கும் போது, அதன் தாக்கம் இன்னும் அதிகமாக தெரியும். அந்த வகையில் தற்போது 3 கிரகங்கள் வக்ர நிலையில் உள்ளன. அதில் நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது எப்போதுமே வக்ர நிலையில் பயணிப்பார்கள். அதே வேளையில் நீதிமான் சனி பகவானும் மீன ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார்.

Saturn Rahu Ketu Will Bring More Problems To These Zodiac Signs

இப்படி மூன்று கிரகங்கள் ஒரே வேளையில் வக்ர நிலையில் அடுத்த 24 நாட்கள் பயணிக்கவுள்ளனர். இதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் கடினமாகவும், சவாலாகவும் இருக்கலாம். முக்கியமாக வேலை மற்றும் வியாபாரரத்தில் வழக்கத்தை விட கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். இப்போது சனி-ராகு-கேது ஆகிய 3 கிரகங்கள் வக்ரமாக இருப்பதால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

ரிஷபம்

சனி-ராகு-கேது ஆகிய 3 கிரகங்கள் வக்ரமாக இருப்பதால் ரிஷப ராசிக்காரர்கள் தொழில் விஷங்களில் ஏற்ற இறக்கங்களை சந்திக்கலாம். எதிலும் அவசரப்பட்டு முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய அளவில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். வியாபாரிகள் எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் கவனமாக எடுக்க வேண்டும். பணியிடத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதைத் தவிர்க்க பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆனால் டிசம்பர் 11 ஆம் தேதிக்கு பின் நிலைமை சற்று மாறலாம்.

மிதுனம்

சனி-ராகு-கேது ஆகிய 3 கிரகங்கள் வக்ரமாக இருப்பதால் மிதுன ராசிக்காரர்கள் தொழில் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பெரிய பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது. முக்கியமாக இக்காலத்தில் யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். தொழிலில் விரும்பிய முன்னேற்றத்தைக் காண நிறைய முயற்சியை மேற்கொள்ள வேண்டியிருக்கும். குடும்பத்தினருடன் தவறான புரிதல்கள் ஏற்படலாம்.

கன்னி

சனி-ராகு-கேது ஆகிய 3 கிரகங்கள் வக்ரமாக இருப்பதால் கன்னி ராசிக்காரர்கள் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். புத்திசாலித்தனமாக பணத்தை செலவழிக்க வேண்டும். எந்த ஒரு முதலீடுகளை செய்வதாக இருந்தாலும், அனுபவம் வாய்ந்தவர்களிடம் கலந்தாலோசிக்காமல் எந்த ஒரு முடிவையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். காதல் வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். முக்கியமாக இக்காலத்தில் நெருக்கமான ஒருவரால் ஏமாற்றப்படலாம். எனவே யாரையும் கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்க வேண்டும்.

துலாம்

சனி-ராகு-கேது ஆகிய 3 கிரகங்கள் வக்ரமாக இருப்பதால் துலாம் ராசிக்காரர்களுக்கு அடுத்த 24 நாட்கள் சவாலானதாக இருக்கும். இக்காலத்தில் வேலை தொடர்பாக எந்த ஒரு முடிவுகளையும் அவசரப்பட்டு எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். முதலீடுகளை தவிர்க்க வேண்டும். நீண்ட தூர பயணங்களால் நிறைய செலவுகளை சந்திக்க நேரிடும். முக்கியமாக இக்காலத்தில் ஒவ்வொரு செயலையும் பொறுமையாகவும், அமைதியாகவும் செய்து முடிக்க வேண்டும். அவசரம் பெரிய இழப்பையே ஏற்படுத்தும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Tuesday, November 17, 2026, 15:34 [IST]
Desktop Bottom Promotion