Latest Updates
-
கடன் கொடுத்தப்பணம் திரும்ப கிடைக்கவே மாட்டேங்கிதா? இந்த வாஸ்து டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க -
எந்த கிழமையில் பிறந்தவர்கள் அதிக அதிர்ஷ்டசாலிகள்? யார் புத்திசாலி, யார் தைரியசாலி? -
சனி-ராகு-கேது அடுத்த 24 நாட்களுக்கு இந்த 4 ராசிக்காரர்களை சோதிப்பார்.. உஷாரா இருங்க.. -
100 ஆண்டுக்கு மேல் ஆயுட்காலம் கொண்ட மக்கள் வாழும்பூமியின் 5 'நீல மண்டலங்கள்' - அவங்க ரகசியம் என்ன தெரியுமா? -
முள்ளங்கி கோலா உருண்டை குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
1/4 கிலோ கத்திரிக்காய் இருந்தா இந்த ஆந்திரா கத்திரிக்காய் வறுவலை செஞ்சு பாருங்க - செம டேஸ்ட்டா இருக்கும் -
ஏசி ஜிம்மில் உடற்பயிற்சி செய்தால் கொழுப்பு கரையாதா? டாக்டர் சொல்லும் உண்மை! -
ஒவ்வொரு மனிதருக்கும் ஏன் தனித்துவமான கைரேகை உள்ளது? அது கருவில் எப்படி உருவாகிறது தெரியுமா? -
Karthigai Matha Rasi Palan 2026: கார்த்திகை மாதம் யாருக்கு சூப்பராவும், யாருக்கு மோசமாவும் இருக்கும் தெரியுமா? -
உடுப்பி தேங்காய் சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. வேற லெவல்-ல இருக்கும்..
Karthigai Matha Rasi Palan 2026: கார்த்திகை மாதத்தின் ஆசீர்வதிக்கப்பட்ட 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன?
Karthigai Matha Rasi Palan 2026: ஒவ்வொரு மாதமும் பிறக்கும்போது அது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். ஏனெனில் ஒவ்வொரு மாதமும் பல கிரக மாற்றங்கள் நிகழ்கிறது. தமிழ் மாதங்களில் மிகவும் முக்கியமான மற்றும் மங்களகரமான மாதங்களில் ஒன்றான கார்த்திகை மாதம் பிறந்துவிட்டது. ஆன்மீகரீதியாகவும், ஜோதிடரீதியாகவும் இந்த மாதம் மிகவும் முக்கியமானதாகக் கருதபடுகிறது.

ஏனெனில் இந்த மாதத்தில்தான் பக்தர்கள் ஐயப்பன் மற்றும் முருகனுக்கு மாலை போட்டு கோவிலுக்கு செல்வார்கள், மேலும் இந்த மாதம் தமிழ்க் கடவுள் முருகனை வழிபட சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. மேலும் இந்த மாதத்தில் பல முக்கியமான கிரக மாற்றங்கள் நிகழவுள்ளதால் இது ஜோதிடரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த மாதத்தில் நிகழும் குருபகவான், சூரியன் மற்றும் சுக்கிரன் போன்ற கிரகங்களின் கிரக மாற்றங்கள் இந்த மாதம் மிகவும் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும், சில ராசிக்காரர்கள் கார்த்திகை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு கார்த்திகை மாதம் ஒரு சிறப்பான மாதமாக இருக்கப்போகிறது. நீங்கள் ஒரு புதிய வீடு அல்லது சொத்து வாங்குவது பற்றி யோசித்துக்கொண்டிருந்தால், இது அதற்கு சிறந்த நேரமாகும். உங்கள் வீட்டிற்கு மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டுவர விலையுயர்ந்த பொருட்களுக்கும் நீங்கள் செலவிடலாம். வேலை தேடுபவர்களுக்கு சில நேர்மறையான செய்திகள் தேடிவரும். உங்கள் சமூக அந்தஸ்து மேம்படும், மேலும் உங்களின் முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
ராசி அதிபதியான சுக்கிரனின் ஆசியால் இந்தக் காலகட்டம் நிதி முதலீடுகளுக்கு, குறிப்பாக நீண்ட கால இலக்குகளுக்கு சாதகமானது, இந்த காலகட்டத்தில் செய்யப்படும் முதலீயீடுகள் லாபத்தைத் தரக்கூடும். உங்கள் ஆரோக்கியம் நிலையானதாக இருக்கும், மேலும் நீங்கள் மிகவும் உற்சாகமாக உணருவீர்கள். சரியான அணுகுமுறையுடன், இந்த நேரத்தை நீங்கள் சிறப்பாகப் பயன்படுத்தி உங்கள் இலக்குகளை அடையலாம்.
சிம்மம்
கார்த்திகை மாதம் சிம்ம ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பல அதிசயங்கள் நிகழும் மாதமாக இருக்கப்போகிறது. ராசி அதிபதியான சூரியனின் ஆசியால் கடந்தகால முதலீடுகளிலிருந்து வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது, செலவுகள் கட்டுப்பாட்டில் இருக்கும். பணியிடத்தில் நற்பெயரைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் துணையுடன் உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ பயணம் செய்யலாம், இது பெரும் வெற்றியைத் தரும். அவர்களின் தடைபட்ட பணிகள் இப்போது வெற்றிகரமாக முடிவடையும்.
திருமணமாகாதவர்கள் இப்போது அவர்களுக்கு பொருத்தமான துணையைக் கண்டறிய முடியும். கடின உழைப்பிற்கான பலன்கள் தேடிவரும். நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட வாகனத்தை வாங்க வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க முடியும், அவர்களின் தேர்வு முடிவுகள் அவர்களுக்கு சாதகமாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் கார்த்திகை மாதத்தில் பல நன்மைகளை அனுபவிக்கப்போகிறார்கள். இந்த மாதத்தில் அவர்கள் வாழ்க்கையின் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடையலாம், மேலும் அவர்களின் வேலையில் பதவி உயர்வுகளைப் பெறலாம். இந்த காலகட்டத்தில் அவர்களின் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும், மேலும் வேலை அல்லது வணிகத்தில் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புகளைப் பெறலாம். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள உங்கள் பணிகள் இப்போது முடிக்கப்படலாம், இதனால் பொருளாதாரநிலை மேம்படும்.
இந்த காலகட்டத்தில் அவர்களின் முடிவெடுக்கும் திறன் மற்றும் சிந்திக்கும் திறன் சிறப்பாக இருக்கும், இது அவர்கள் வேலையில் பெரிய முன்னேற்றத்தை உதவும். பணியிடத்தில் உங்கள் பொறுப்புகள் அதிகரிக்கும், ஆனால் நீங்கள் அவற்றை முழு நேர்மையுடனும் திறமையுடனும் நிறைவேற்ற முடியும். இந்த காலத்தில் சில மூதாதையர் சொத்துக்களைப் பெற வாய்ப்புள்ளது, இது அவர்களின் நிதி நிலைமையை வலுப்படுத்தும்.
கும்பம்
கார்த்திகை மாதம் கும்ப ராசிக்காரர்களுக்கு சிறப்பான மாதமாக இருக்கப்போகிறது. கார்த்திகை மாதம் முழுவதும் குரு பகவானின் அருளால் அவர்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் நிறைந்திருக்கும். புதிய வாகனங்கள் மற்றும் சொத்து போன்ற சொத்துக்களை வாங்குவதற்கும், அவர்களின் நிதிநிலையை மேம்படுத்துவதற்கும் இந்த மாதம் ஏற்றது. மேலும், குழந்தைகள் தொடர்பான நேர்மறையான செய்திகளைப் பெறுவார்கள், இது அவர்களின் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தரும்.
காதல் உறவுகளில் இருப்பவர்களுக்கு, இந்த மாதம் வெற்றியையும், மகிழ்ச்சியான சூழலையும் தரும். நிதிரீதியாக, எதிர்பாராத ஆதாயங்கள் அவர்களை தேடி வரக்கூடும், இது அவர்களின் சேமிப்பை அதிகரிக்கும் மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை அதிகரிக்கும். மொத்தத்தில் இது அவர்களுக்கு வசந்த காலமாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

