Latest Updates
-
பனியால் உதடு வெடிப்பை சந்திக்குறீங்களா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
Karthigai Matha Rasi Palan 2026: கார்த்திகை மாதத்தின் ஆசீர்வதிக்கப்பட்ட 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
கடன் கொடுத்தப்பணம் திரும்ப கிடைக்கவே மாட்டேங்கிதா? இந்த வாஸ்து டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க -
எந்த கிழமையில் பிறந்தவர்கள் அதிக அதிர்ஷ்டசாலிகள்? யார் புத்திசாலி, யார் தைரியசாலி? -
சனி-ராகு-கேது அடுத்த 24 நாட்களுக்கு இந்த 4 ராசிக்காரர்களை சோதிப்பார்.. உஷாரா இருங்க.. -
100 ஆண்டுக்கு மேல் ஆயுட்காலம் கொண்ட மக்கள் வாழும்பூமியின் 5 'நீல மண்டலங்கள்' - அவங்க ரகசியம் என்ன தெரியுமா? -
முள்ளங்கி கோலா உருண்டை குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
1/4 கிலோ கத்திரிக்காய் இருந்தா இந்த ஆந்திரா கத்திரிக்காய் வறுவலை செஞ்சு பாருங்க - செம டேஸ்ட்டா இருக்கும் -
ஏசி ஜிம்மில் உடற்பயிற்சி செய்தால் கொழுப்பு கரையாதா? டாக்டர் சொல்லும் உண்மை! -
ஒவ்வொரு மனிதருக்கும் ஏன் தனித்துவமான கைரேகை உள்ளது? அது கருவில் எப்படி உருவாகிறது தெரியுமா?
வீட்டில் டீ போடும்போது இந்த தவறுகளை தெரியமா கூட செஞ்சுராதீங்க - இல்லனா உங்க டீ வாயிலேயே வைக்கமுடியாது
உலகம் முழுவதும் குறிப்பாக இந்தியாவில் பெரும்பாலான மக்களால் அதிகம் விரும்பி நுகரப்படும் பானம் என்றால் அது தேநீர்தான். பலருக்கும் காலை, மாலை, இரவு ஏன் நள்ளிரவு நேரம் கூட தேநீர் இல்லாமல் இருக்க முடியாது. இருப்பினும், ஒருநாளைக்கே பலமுறை குடித்தாலும், ஒரே மாதிரி சுவையான தேனீரை தயாரிப்பது என்பது கிட்டத்தட்ட முடியாத காரியமாகவே உள்ளது.

நீங்கள் விரும்பும் அந்த பர்பெக்ட்டான சுவையோ அல்லது அடர்த்தியோ உங்கள் தேநீரில் இல்லையென்றால், நீங்கள் சில பொதுவான தவறுகளைச் செய்கிறீர்கள் என்று அர்த்தம். இந்த தவறை அனைவருமே செய்கிறார்கள். இந்த பதிவில் தேநீர் தயாரிக்கும் போது செய்யப்படும் பொதுவான தவறுகள் மற்றும் அவற்றைச் சரிசெய்யும் வழிகள் ஆகியவற்றை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பாலில் சிக்கனம் காட்டக்கூடாது
உங்கள் தேநீர் நீர்த்தது போலவோ அல்லது சுவையற்தாகவோ இருந்தால், நீங்கள் தேநீர் தயாரிக்க பயன்படுத்தும் பாலைச் சோதிக்க வேண்டும். கொழுப்பு நீக்கப்பட்ட பால் அல்லது அதிக தண்ணீர் சேர்க்கப்பட்ட பால் சுவையான தேநீரை தர முடியாது. முழுமையான கொழுப்புச் சத்து கொண்ட பால் தேநீருக்கு ஒரு மென்மையான, கிரீம் போன்ற தன்மையைத் தருகிறது. இது தேநீரின் கசப்பைக் குறைத்து, மசாலாப் பொருட்களுடன் நன்கு இணைந்து, சிறப்பான மற்றும் தரமான தேநீரை உருவாக்குகிறது. தரமான தேநீரைத் தயாரிக்க பாலில் கஞ்சத்தனம் காட்டக்கூடாது.
தேநீரை அவசரமாக தயாரிக்கக்கூடாது
தேநீர் என்பது சாதாரண பானம் அல்ல, அதைத் தயாரிப்பதில் அவசரப்படக்கூடாது. பலர் அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து, அடுப்பின் தீயை அதிகப்படுத்தி, 2 நிமிடத்தில் தேநீரை தயாரித்து விடுகிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், தேயிலையிலிருந்து அதன் முழுமையான சுவை வெளிவர நேரம் தேவைப்படும். தண்ணீரும் தேயிலையும் கொதிக்கத் தொடங்கியதும், அடுப்பின் தீயைக் குறைத்து, குறைந்தது 5 நிமிடங்களுக்கு மெதுவாகக் கொதிக்க விட வேண்டும். அதன்பிறகுதான் வடிகட்டி சர்க்கரையை சேர்க்க வேண்டும்.
மசாலாப் பொருட்களை சரியாக பயன்படுத்த வேண்டும்
பெரும்பாலான மக்கள் மசாலா தேநீர் தயாரிக்க ஏற்கனவே பேக் செய்யப்பட்ட மசாலாப் பொடிகளைப் பயன்படுத்துகிறார்கள் அல்லது மசாலாப் பொருட்களை முற்றிலுமாகத் தவிர்த்துவிடுகிறார்கள், இது அவர்களின் தேநீரின் தனித்துவமான சுவையைக் கெடுத்துவிடுகிறது. ப்ரெஷாக பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்களான, உடைத்த ஏலக்காய், இலவங்கப்பட்டை, கிராம்பு மற்றும் இஞ்சி போன்றவை, சுவையை அதிகமாக்குகின்றன. இந்த மசாலாப் பொருட்களை நசுக்கும்போது வெளிப்படும் எண்ணெய்கள், அவை கொதிக்கும் ஒவ்வொரு நொடியும் சுவையை அதிகரிக்கின்றன.
நீரின் வெப்பநிலை
நீங்கள் தயாரிக்கும் தேநீரின் சுவையில் நீரின் வெப்பநிலை முக்கியப்பங்கு வகிக்கிறது. மிக அதிக வெப்பமான நீரைப் பயன்படுத்தினால், மென்மையான தேயிலை வகைகள் கசப்புத்தன்மையுடன் மாறக்கூடும். பால் டீ தயாரிக்கும்போது, நீர் கொதிநிலையை அடைந்தவுடன் அடுப்பை மிதமான தீயில் வைத்து அதற்குப்பின் டீத்தூளை சேர்க்க வேண்டும்.
அதிக டீத்தூளை பயன்படுத்துவது
டீத்தூளை அதிகமாகப் பயன்படுத்துவது தேநீரின் சுவை மற்றும் திடத்தை அதிகரிக்க எளிதான வழியாகத் தோன்றலாம், ஆனால் இது தேநீரில் அதிகப்படியான கசப்புச் சுவையை உண்டாக்கிவிடும். நீங்கள் எத்தனை கோப்பைகள் தேநீர் தயாரிக்கிறீர்கள் மற்றும் எவ்வளவு தண்ணீர் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்து, அதற்கு ஏற்ற சரியான அளவிலான தேயிலைத்தூளைச் சேர்க்கவும்.
சரியான முறையில் சேமிக்க வேண்டும்
டீத்தூளை எப்போதும் காற்று புகாத கொள்கலனில் வைத்திருக்க வேண்டும். ஒரு பையில் போட்டு, அதை ஒரு உலோகக் கொள்கலனுக்குள் வைப்பது இன்னும் சிறந்தது. டீத்தூளை வெப்பம் மற்றும் நேரடி சூரிய ஒளியில் இருந்து தள்ளி வைக்கவும். அதேசமயம் டீத்தூளை நேரடியாகக் கண்ணாடி ஜாடியிலோ அல்லது உலோகப் பெட்டியிலோ கொட்டி வைக்க வேண்டாம்



Click it and Unblock the Notifications

