Latest Updates
-
சுரைக்காய் இருந்தா.. இப்படி ஒருவாட்டி மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்... -
சப்பாத்தி, பூரிக்கு கேரட்டை வைச்சு இந்த பக்குவத்தில் குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
பனியால் உதடு வெடிப்பை சந்திக்குறீங்களா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
வீட்டில் டீ போடும்போது இந்த தவறுகளை தெரியமா கூட செஞ்சுராதீங்க - இல்லனா உங்க டீ வாயிலேயே வைக்கமுடியாது -
Karthigai Matha Rasi Palan 2026: கார்த்திகை மாதத்தின் ஆசீர்வதிக்கப்பட்ட 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
கடன் கொடுத்தப் பணம் திரும்ப கிடைக்கவே மாட்டேங்கிதா? இந்த வாஸ்து டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க -
எந்த கிழமையில் பிறந்தவர்கள் அதிக அதிர்ஷ்டசாலிகள்? யார் புத்திசாலி, யார் தைரியசாலி? -
சனி-ராகு-கேது அடுத்த 24 நாட்களுக்கு இந்த 4 ராசிக்காரர்களை சோதிப்பார்.. உஷாரா இருங்க.. -
100 ஆண்டுக்கு மேல் ஆயுட்காலம் கொண்ட மக்கள் வாழும்பூமியின் 5 'நீல மண்டலங்கள்' - அவங்க ரகசியம் என்ன தெரியுமா? -
முள்ளங்கி கோலா உருண்டை குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
செவ்வாய்-கேது இணைப்பால் ஜனவரி மாதம் வரை தோல்விகளையும், அவமானங்களையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களும் தொடர்ந்து நகரும் போது அவை மற்ற கிரகங்களுடன் இணைகின்றன. இந்த கிரக சேர்க்கை சில சமயங்களில் நேர்மறையான பலன்களையும், சில சமயங்கள் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். தற்போது செவ்வாயும், நிழல் கிரகமான கேதுவும் சிம்ம ராசியில் இணையப்போகிறார்கள். இந்த இரண்டு கிரகங்களும் இணைவது எதிர்மறை பலன்களை அளிக்கப்போகிறது.

செவ்வாயும் கேதுவும் ஜனவரி 10, 2027 வரை சிம்ம ராசியில் இணைத்திருப்பார்கள். ஜோதிட கணிப்புகளின்படி, சிம்ம ராசியில் செவ்வாய் மற்றும் கேது இணைந்திருப்பது, சில ராசிக்காரர்களுக்கு மன அழுத்தம், பணியிடத்தில் கருத்து வேறுபாடுகள் மற்றும் முடிவெடுப்பதில் சவால்களை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக, இந்த கிரக அமைப்பின் போது 3 ராசிக்காரர்கள் பல இன்னல்களை அனுபவிக்கப்போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
செவ்வாய் மேஷ ராசியின் அதிபதியாக இருப்பதையோ செவ்வாய்-கேது சேர்க்கை அவர்களுக்கு தீவிரமான விளைவுகளை அளிக்கப்போகிறது. இந்தக் காலகட்டத்தில், நீங்கள் அதிக எரிச்சலடைவதையோ அல்லது மற்றவர்களின் தூண்டுதலின் பேரில் எதிர்வினையாற்றுவதையோ தவிர்க்க வேண்டும்.வேலையில் உள்ளவர்கள் இருப்பவர்கள் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும் மற்றும் பணியிடதத்தில் ஏற்படும் பிரச்சினைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். செய்து கொண்டிருக்கும் வேலைகள் தாமதமடையக்கூடும், அதே நேரத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
தனிப்பட்ட வாழ்க்கையிலும் இது சோதனையாக காலகட்டமாக இருக்கும். பார்ப்பதற்கு சின்னதாகத் தோன்றும் விஷயங்களில் ஏற்படும் தவறான புரிதல்கள் குடும்ப உறவுகளையும் பாதிக்கக்கூடும், எனவே பேசுவதற்கு முன் கவனமாக சிந்தியுங்கள். நிதிப் பரிவர்த்தனைகளிலும் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மற்றும் அபாயங்களைக் கருத்தில் கொள்ளாமல் மற்றவர்களுக்கு பணம் கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசியில் செவ்வாய்-கேது இணைவதால் இது அவர்களுக்கு நேரடியான எதிர்மறை பலன்களை அளிக்கப்போகிறது. இந்த நேரத்தில் அவர்கள் தங்கள் நடத்தையிலும் முடிவுகளிலும் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த காலகட்டத்தில், தன்னம்பிக்கைக்கும் உணர்ச்சிவசப்படும் தன்மைக்கும் இடையே ஒரு சமநிலையைக் கடைபிடிக்க வேண்டும். அற்ப காரணங்களுக்காக அதிகமாக எதிர்வினையாற்றுவது, தனிப்பட்ட உறவுகளில் பதற்றத்தை உருவாக்கக்கூடும்.
தொழில் அல்லது வணிகம் என எதுவாக இருந்தாலும், அவசரப்பட்டு முக்கிய முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும். முதலீட்டு வாய்ப்புகளை நன்கு ஆராய்ந்து, தேவையற்ற செலவுகளைக் கட்டுக்குள் வைத்திருங்கள். மேலும், வாகனங்களை இயக்கும்போது கவனமாக இருக்கவும், உடல் ஆரோக்கியத்தைப் புறக்கணிக்காமல் பார்த்துக்கொள்ளவும். ஏனெனில் அலட்சியத்தால் மருத்துவமனைக்கு செலவு செய்யும் சூழல் ஏற்படலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு செவ்வாய்-கேது சேர்க்கை சாதகமான பலன்களை அளிக்கப்போவதில்லை. சில விஷயங்களில் குழப்பத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தக்கூடும். வியாபாரத்தில் இருப்பவர்கள் மற்றவர்கள் மீது கண்மூடித்தனமான நம்பிக்கை வைப்பதைத் தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு ஒப்பந்தத்தையும் முக்கியமான ஆவணத்தையும் கையொப்பமிடுவதற்கு முன்பு கவனமாகப் படிக்கவும்.
அலுவலக வேலையில் இருப்பவர்கள் தங்கள் பொறுப்புகளில் கவனம் செலுத்தி, கவனச்சிதறல்களைத் தவிர்க்க வேண்டும். இந்தக் காலகட்டத்தில் வாழ்க்கைத் துணை அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகளும் ஏற்படலாம். சிறிய கருத்து வேறுபாடுகள் பெரிய தகராறுகளாக மாற அனுமதிக்காதீர்கள். இல்லையெனில், அது உங்கள் நிம்மதியை அழித்துவிடும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

