Latest Updates
-
பனியால் உதடு வெடிப்பை சந்திக்குறீங்களா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
வீட்டில் டீ போடும்போது இந்த தவறுகளை தெரியமா கூட செஞ்சுராதீங்க - இல்லனா உங்க டீ வாயிலேயே வைக்கமுடியாது -
Karthigai Matha Rasi Palan 2026: கார்த்திகை மாதத்தின் ஆசீர்வதிக்கப்பட்ட 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
கடன் கொடுத்தப் பணம் திரும்ப கிடைக்கவே மாட்டேங்கிதா? இந்த வாஸ்து டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க -
எந்த கிழமையில் பிறந்தவர்கள் அதிக அதிர்ஷ்டசாலிகள்? யார் புத்திசாலி, யார் தைரியசாலி? -
சனி-ராகு-கேது அடுத்த 24 நாட்களுக்கு இந்த 4 ராசிக்காரர்களை சோதிப்பார்.. உஷாரா இருங்க.. -
100 ஆண்டுக்கு மேல் ஆயுட்காலம் கொண்ட மக்கள் வாழும்பூமியின் 5 'நீல மண்டலங்கள்' - அவங்க ரகசியம் என்ன தெரியுமா? -
முள்ளங்கி கோலா உருண்டை குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
1/4 கிலோ கத்திரிக்காய் இருந்தா இந்த ஆந்திரா கத்திரிக்காய் வறுவலை செஞ்சு பாருங்க - செம டேஸ்ட்டா இருக்கும் -
ஏசி ஜிம்மில் உடற்பயிற்சி செய்தால் கொழுப்பு கரையாதா? டாக்டர் சொல்லும் உண்மை!
சப்பாத்தி, பூரிக்கு கேரட்டை வைச்சு இந்த பக்குவத்தில் குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்
Carrot Kurma Recipe in Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி அல்லது பூரி செய்வீர்களா? அதற்கு என்ன சைடிஷ் செய்வதென்று யோசிக்கிறீர்களா? வழக்கமான உருளைக்கிழங்கு குருமா இல்லாமல் புதிதாக ஏதாவது சைடிஷ் செய்ய விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளவர்கள் காய்கறிகளை சாப்பிடமாட்டார்களா? அவர்களை காய்கறிகளை சாப்பிட வைக்க வேண்டுமா?

அப்படியென்றால் கேரட்டை வைத்து ஒரு அட்டகாசமான அசைவ குருமா சுவையில் ஒரு கிரேவியை செய்யுங்க. பட்டாணியுடன் சேர்த்து செய்யப்படும் இந்த கேரட் குருமா இதுவரை நீங்கள் சாப்பிடாத சுவையில் இருக்கும். இந்த குருமா சுவையானது மட்டுமின்றி மிகவும் ஆரோக்கியமானதும் கூட. எனவே உங்கள் குழந்தைகளுக்கு இந்த குருமாவை அடிக்கடி செஞ்சு கொடுங்க.
உங்களுக்கு சுவையான கேரட் குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரட் குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 2 ஸ்பூன் எண்ணெய்
- ½ ஸ்பூன் சீரகம்
- ½ ஸ்பூன் கடுகு
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது
- 1 பச்சை மிளகாய்
- தேவையான அளவு உப்பு
- 1 பெரிய வெங்காயம்
- 3 தக்காளி (பொடியாக நறுக்கியது)
- 2 கப் கேரட்
- அரை கப் பட்டாணி
- கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
- ஒன்றரை ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
- 1 ஸ்பூன் கரம் மசாலா
- 1 ஸ்பூன் மல்லித்தூள்
- ½ ஸ்பூன் சீரகத் தூள்
- 1 ஸ்பூன்கசூரி மேத்தி
- 1 கப் தண்ணீர்
- முக்கால் கப் தேங்காய்ப்பால்
செய்முறை:
- ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். அதில் கடுகு மற்றும் சீரகம் சேர்க்கவும்.
- கடுகு வெடிக்கத் தொடங்கியதும், கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தைச் சேர்க்கவும். வெங்காயம் பொன்னிறமாகும் வரை நன்றாக வதக்கவும்.
- பின்பு இஞ்சி-பூண்டு விழுது மற்றும் கீறிய பச்சை மிளகாயைச் சேர்த்து, விழுதின் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- பின்னர் அரைத்த தக்காளியைச் சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரை சமைக்கவும்.
- அதன்பிறகு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, மல்லித்தூள் மற்றும் உப்பு ஆகிய மசாலாப் பொடிகளைச் சேர்த்து, அவற்றின் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- மசாலா நன்கு கெட்டியானதும் நறுக்கிய கேரட் மற்றும் பட்டாணியைச் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
- கேரட் ஓரளவு மூழ்கும் அளவிற்குத் தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி, பாத்திரத்தை மூடி வைத்து, மிதமான தீயில் கேரட் மென்மையாகும் வரை வேகவைக்கவும்.
- பிறகு கசூரி மேத்தி மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து, மீண்டும் மூடி வைத்து, மிதமான தீயில் 2 நிமிடங்கள் வேகவைக்கவும்.
- குருமா நன்கு கெட்டியானதும் உப்பை சரிபார்த்து அணைக்கவும்.
- அவ்வளவுதான் சுவையான கேரட் குருமா ரெடி!



Click it and Unblock the Notifications
