Latest Updates
-
விமானத்தில் பயணிக்கும் போது போனை ஏன் அவசியம் 'Airplane Mode'-ல் வைக்க சொல்றாங்க தெரியுமா? -
வெங்காயம் சேர்க்காத பூண்டு தக்காளி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 18, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கப்போகுதாம் -
சிம்ம ராசியில் கேது-செவ்வாய் கூட்டணி.. டிசம்பர் 05 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
செவ்வாய்-கேது இணைப்பால் ஜனவரி மாதம் வரை தோல்விகளையும், அவமானங்களையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சுரைக்காய் இருந்தா.. இப்படி ஒருவாட்டி மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்... -
சப்பாத்தி, பூரிக்கு கேரட்டை வைச்சு இந்த பக்குவத்தில் குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
பனியால் உதடு வெடிப்பை சந்திக்குறீங்களா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
வீட்டில் டீ போடும்போது இந்த தவறுகளை தெரியமா கூட செஞ்சுராதீங்க - இல்லனா உங்க டீ வாயிலேயே வைக்கமுடியாது -
Karthigai Matha Rasi Palan 2026: கார்த்திகை மாதத்தின் ஆசீர்வதிக்கப்பட்ட 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன?
வழக்கமான சாம்பார் வைக்காம இந்த மங்களூர் ஸ்டைல் சாம்பாரை வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
Mangalore Style Sambar Recipe in Tamil: மதியம் சாதத்திற்கு என்ன குழம்பு வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அட்டகாசமான சுவையில் ஒரு வித்தியாசமான சாம்பார் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியெனில் மங்களூர் ஸ்டைல் சாம்பார் செய்யுங்கள். இந்த சாம்பார் நாம் வழக்கமாக செய்யும் சாம்பாரை விட சற்று வித்தியாசமான சுவையில் இருக்கும்.

இந்த சாம்பார் நாம் வழக்கமாக வைக்கும் சாம்பார் போல இருக்காது, இதற்கு ஒரு தனித்துவமான மசாலா அரைக்க வேண்டும். இந்த அரைச்சு விட்ட சாம்பார் சாதத்திற்கு மட்டுமின்றி, இட்லி, தோசைக்கும் அட்டகாசமாக இருக்கும். மேலும் இது பேச்சுலர்களும் செய்யும் வகையில் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். இந்த சாம்பார் மங்களூர் மட்டுமின்றி கர்நாடகா முழுவதும் மிகவும் பிரபலமானது. ஒரே மாதிரியான சாம்பார் சாப்பிட்டு போரடித்தவர்களுக்கு இந்த சாம்பார் புதிய சுவையைக் கொடுக்கும்.
உங்களுக்கு மங்களூர் ஸ்டைல் சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மங்களூர் ஸ்டைல் சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 வெள்ளரிக்காய்
- 1/4 கப் துவரம் பருப்பு
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 ஸ்பூன் உப்பு
- 1 டீஸ்பூன் வெல்லம்
மசாலா அரைக்கத் தேவையானவை:
- 1 கப் துருவிய தேங்காய்
- 3 வர மிளகாய்
- 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 2 ஸ்பூன் மல்லி விதைகள்
- 1/2 ஸ்பூன் சீரகம்
- கால் ஸ்பூன் வெந்தயம்
- ஒரு சிட்டிகை பெருங்காயம்
- 1 ஸ்பூன் எண்ணெய்
தாளிக்கத் தேவையானவை:
- 1 வர மிளகாய்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1/4 ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் எண்ணெய்
செய்முறை:
- சாம்பார் வெள்ளரிக்காயைக் கழுவி, அதன் மையப் பகுதியை நீக்கிவிட்டு, துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். விருப்பப்பட்டால் அதன் தோலை நீக்கிக் கொள்ளலாம்.
- ஒரு பிரஷர் குக்கரில் துவரம்பருப்பை எடுத்து நன்கு கழுவவும். அதனுடன் மஞ்சள் தூள், சில சொட்டு எண்ணெய் மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து, குக்கரில் 2 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
- அழுத்தம் வெளியேறியதும் இப்போது அதே குக்கரில் நறுக்கிய சாம்பார் வெள்ளரிக்காய், 1 டீஸ்பூன் உப்பு மற்றும் 1.5 கப் தண்ணீர் சேர்த்து, மேலும் 2 விசில் வரும் வரை வேகவைக்கவும். இப்போது பருப்பும் காய்கறிகளும் முழுமையாக வெந்திருக்கும்.
- ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, மிதமான தீயில் வர மிளகாய், உளுத்தம் பருப்பு, மல்லி விதைகள், சீரகம், வெந்தயம் மற்றும் பெருங்காயம் ஆகியவற்றை வறுத்துக்கொள்ளவும்.
- வறுத்த மசாலாப் பொருட்கள் மற்றும் தேங்காயை, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.
- பின் இந்த அரைத்த விழுதை, காய்கறிகளும் பருப்பும் வேக வைத்த குக்கரில் சேர்க்கவும். அதனுடன் 1 ஸ்பூன் உப்பு மற்றும் 1 ஸ்பூன் வெல்லத்தைச் சேர்க்கவும்.
- தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, குழம்பின் அடர்த்தியைச் சரிசெய்து கொள்ளவும். நன்கு கலந்து கொதிக்க விடவும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளிக்கவும். கடுகு பொரிந்ததும் வர மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து சாம்பாரில் கொட்டவும்.
- சுவையான மங்களூர் ஸ்டைல் வெள்ளரிக்காய் சாம்பார் ரெடி. இதே ரெசிபியை வேறு காய்கறிகளை வைத்தும் செய்யலாம்.



Click it and Unblock the Notifications
