Latest Updates
-
செவ்வாய்-கேது இணைப்பால் ஜனவரி மாதம் வரை தோல்விகளையும், அவமானங்களையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சுரைக்காய் இருந்தா.. இப்படி ஒருவாட்டி மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்... -
சப்பாத்தி, பூரிக்கு கேரட்டை வைச்சு இந்த பக்குவத்தில் குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
பனியால் உதடு வெடிப்பை சந்திக்குறீங்களா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
வீட்டில் டீ போடும்போது இந்த தவறுகளை தெரியமா கூட செஞ்சுராதீங்க - இல்லனா உங்க டீ வாயிலேயே வைக்கமுடியாது -
Karthigai Matha Rasi Palan 2026: கார்த்திகை மாதத்தின் ஆசீர்வதிக்கப்பட்ட 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
கடன் கொடுத்தப் பணம் திரும்ப கிடைக்கவே மாட்டேங்கிதா? இந்த வாஸ்து டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க -
எந்த கிழமையில் பிறந்தவர்கள் அதிக அதிர்ஷ்டசாலிகள்? யார் புத்திசாலி, யார் தைரியசாலி? -
சனி-ராகு-கேது அடுத்த 24 நாட்களுக்கு இந்த 4 ராசிக்காரர்களை சோதிப்பார்.. உஷாரா இருங்க.. -
100 ஆண்டுக்கு மேல் ஆயுட்காலம் கொண்ட மக்கள் வாழும்பூமியின் 5 'நீல மண்டலங்கள்' - அவங்க ரகசியம் என்ன தெரியுமா?
சிம்ம ராசியில் கேது-செவ்வாய் கூட்டணி.. டிசம்பர் 05 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..
Mars Ketu In Leo 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல், தன்னம்பிக்கை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியான செவ்வாய் தற்போது சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் இந்த சிம்ம ராசிக்குள் நவம்பர் 12 ஆம் தேதி தான் நுழைந்தார். அப்படி சிம்ம ராசியில் நுழையும் போது, நிழல் கிரகமான கேதுவும் சிம்ம ராசியில் இருப்பதால், இவ்விரு கிரகங்களின் சேர்க்கை நிகழ்ந்துள்ளது.

ஜோதிடத்தின் படி, இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை மன அழுத்தம், முரண்பாடுகள், வேலையில் சிரமங்கள் போன்றவற்றை ஏற்படுத்தக்கூடும். அதுவும் இந்த கிரக சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதுவும் இந்த கேது செவ்வாய் சேர்க்கையானது டிசம்பர் 05 ஆம் தேதி வரை நீடித்திருக்கும். அதன் பின் கேது சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்குள் நுழைவார். இப்போது சிம்ம ராசியில் ஒன்றிணைந்துள்ள கேது செவ்வாயால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 4 ஆவது வீட்டில் கேது செவ்வாய் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு கோபமும், பொறுமையின்மையும் அதிகம் இருக்கலாம். பணியிடத்தில் உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளிடம் வாக்குவாதம் அல்லது சண்டையில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். முக்கியமான வேலையை முடிக்க முடியாமல் போகலாம். குடும்பத்திற்குள் தவறான புரிதல்களால் உறவுகளில் விரிசல் ஏற்படலாம். இக்காலத்தில் பேசும் போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். யாருக்கும் பணம் கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசியின் முதல் வீட்டில் கேது செவ்வாய் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்களின் நடத்தை, பேச்சு மற்றும் முடிவுகளில் சிறப்பு கவனத்தை செலுத்த வேண்டும். நம்பிக்கை மற்றும் கோபத்திற்கு இடையே சமநிலையை பராமரிக்க வேண்டும். சிறு விஷயங்களால் உறவுகளில் மன அழுத்தம் அதிகரிக்கும். வேலை மற்றும் வணிகத்தில் பெரிய முடிவுகளை அவசரப்பட்டு எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். முதலீடுகளை செய்யும் முன் அனைத்தையும் கவனித்து பின் முடிவெடுக்க வேண்டும். தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கிய விஷயத்தை புறக்கணிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டில் கேது செவ்வாய் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மனதில் குழப்பங்கள் அதிகரிக்கும். யாரையும் கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்க வேண்டும். புதிய ஒப்பந்தங்கள் அல்லது ஆவணங்களில் கையெழுத்திடும் முன் கவனமாக படித்து பார்க்க வேண்டும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தினர் அல்லது வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. முக்கியமாக இக்காலத்தில் சிறு விஷயங்களை பெரிய விஷயமாக மாற்றுவதைத் தவிர்க்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
