Latest Updates
-
வெங்காயம் சேர்க்காத பூண்டு தக்காளி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 18, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கப்போகுதாம் -
சிம்ம ராசியில் கேது-செவ்வாய் கூட்டணி.. டிசம்பர் 05 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
செவ்வாய்-கேது இணைப்பால் ஜனவரி மாதம் வரை தோல்விகளையும், அவமானங்களையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சுரைக்காய் இருந்தா.. இப்படி ஒருவாட்டி மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்... -
சப்பாத்தி, பூரிக்கு கேரட்டை வைச்சு இந்த பக்குவத்தில் குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
பனியால் உதடு வெடிப்பை சந்திக்குறீங்களா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
வீட்டில் டீ போடும்போது இந்த தவறுகளை தெரியமா கூட செஞ்சுராதீங்க - இல்லனா உங்க டீ வாயிலேயே வைக்கமுடியாது -
Karthigai Matha Rasi Palan 2026: கார்த்திகை மாதத்தின் ஆசீர்வதிக்கப்பட்ட 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
கடன் கொடுத்தப் பணம் திரும்ப கிடைக்கவே மாட்டேங்கிதா? இந்த வாஸ்து டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க
விமானத்தில் பயணிக்கும் போது போனை ஏன் அவசியம் 'Airplane Mode'-ல் வைக்க சொல்றாங்க தெரியுமா?
தற்போதைய வேகமான உலகில் விமானப் பயணம் என்பது நீண்ட தூரத்தை வேகமாக பயணிக்க உதவுகிறது. விமானத்திற்குள் பயணிகள் நுழைந்ததும், விமானம் புறப்படுவதற்கு முன்பாகப் பயணிகள் செய்ய வேண்டிய முதல் விஷயம், தங்கள் மின்னணு சாதனங்களை அணைத்து வைப்பது அல்லது அவற்றை 'ஏர் பிளேன் மோட்' (Airplane mode) எனப்படும் விமானப் பயண முறைக்கு மாற்றுவதுதான். ஆனால், இந்த 'Airplane mode' உண்மையில் என்ன செய்கிறது என்றும், ஏன் விமானப் பணியாளர்கள் பயணிகளின் டேப்லெட்டுகள், கைபேசிகள் மற்றும் மடிக்கணினிகள் போன்ற அனைத்து மின்னணு சாதனங்களையும் விமானப் பயணம் முழுவதும் இந்த முறையில் வைத்திருக்கச் சொல்கிறார்கள் என்றும் நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அதற்கான பதிலை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Airplane mode என்றால் என்ன?
உங்கள் தொலைபேசி, மடிக்கணினி அல்லது டேப்லெட்டில் உள்ள Network Settings மூலம் Airplane mode-யை இயக்கலாம். உங்கள் போனில் உள்ள விமானச் சின்னத்தைத் தொடுவதன் மூலம் Airplane mode-யைச் செயல்படுத்தலாம். சிறிது நேரத்தில், உங்கள் தொலைபேசியில் உள்ள சிக்னல்கள் மறைந்து அதற்குப் பதிலாக விமானச் சின்னம் தோன்றுவதைக் காணலாம்.
Airplane mode-யை ஆன் செய்யும்போது என்ன நடக்கும்?
நீங்கள் 'Airplane mode'-யை ஆன் செய்யும்போது, உங்கள் மின்னணு சாதனம் செல்லுலார் சிக்னல்களை அனுப்புவதை நிறுத்திவிடும். இதன் விளைவாக, உங்கள் செல்லுலார் நெட்வொர்க் மூலம் வரும் அழைப்புகளையோ அல்லது குறுஞ்செய்திகளையோ உங்களால் பெற முடியாது. இந்த Mode பொதுவாக உங்கள் வைஃபை (Wi-Fi) இணைப்பையும் ஆஃப் செய்துவிடும். இருப்பினும், உங்களுக்கு ஏதேனும் Wi-Fi நெட்வொர்க் கிடைக்குமானால், நீங்கள் மீண்டும் Wi-Fi-யை ஆன் செய்து, 'ஏர் பிளேன் மோடு'-இல் இருக்கும்போதும் உங்கள் சாதனத்தில் இணையத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
விமானப் பயணங்களின் போது ஏன் Airplane Mode-யை ஆன் செய்ய வேண்டும்?
உங்கள் மின்னணு சாதனங்களிலிருந்து வெளிப்படும் சிக்னல்கள், விமானத்தின் தகவல் தொடர்பு அமைப்புகளில் பெரும் இடையூறை ஏற்படுத்தக்கூடும். செல்லுலார் இணைப்பு கொண்ட மின்னணு சாதனங்கள், வலிமையான ரேடியோ அலைகளையும் மின்காந்த குறுக்கீடுகளையும் உருவாக்குகின்றன. இவை விமானத்தின் சிக்னல்களைப் பாதித்து, விமானி தரைக்கட்டுப்பாட்டு மையத்துடனோ அல்லது விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகளுடனோ தொடர்புகொள்வதில் சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் விமானத்தில் பயணம் செய்யும் நிலையில், இத்தனை சாதனங்களிலிருந்து வெளிப்படும் சிக்னல்களின் ஒட்டுமொத்த தாக்கம் மிகவும் தீவிரமானதாக இருக்கும். இதனால்தான், விமானப் பணியாளர்கள் பயணிகளைத் தங்கள் மின்னணு சாதனங்களை 'Airplane Mode'-க்கு மாற்றச் சொல்கிறார்கள்.
விமானப் பயணம் குறித்த FAA வழிகாட்டுதல்கள்
மின்னணு சாதனங்களின் செல்லுலார் சிக்னல்கள் தரையில் உள்ள செல் கோபுரங்களை மிஞ்சக்கூடும் என்றும், அதன் விளைவாக சேவை தடைபடும் என்றும் The Federal Aviation Administration (FAA) குறிப்பிட்டுள்ளது. இதே காரணத்திற்காக, விமானத்தில் இருக்கும்போது மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக FAA பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆனால், உங்கள் பயணத்தின் போது தொலைபேசியை Airplane mode-ல் வைத்திருக்கும்போதே, நீங்கள் WiFi-யைப் பயன்படுத்தலாம் அல்லது புளூடூத்தைப் பயன்படுத்தலாம்.



Click it and Unblock the Notifications

