Latest Updates
-
மதுரை ஸ்பெஷல் தக்காளி பொங்கல் ரெசிபி - இந்த மாதிரி தக்காளி சாதம் செஞ்சு பாருங்க - பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் இந்த 3 ராசிகளை தோல்விகளும், நஷ்டங்களும் துரத்தப்போகுதாம் -
வழக்கமான சாம்பார் வைக்காம இந்த மங்களூர் ஸ்டைல் சாம்பாரை வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
விமானத்தில் பயணிக்கும் போது போனை ஏன் அவசியம் 'Airplane Mode'-ல் வைக்க சொல்றாங்க தெரியுமா? -
வெங்காயம் சேர்க்காத பூண்டு தக்காளி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 18, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கப்போகுதாம் -
சிம்ம ராசியில் கேது-செவ்வாய் கூட்டணி.. டிசம்பர் 05 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
செவ்வாய்-கேது இணைப்பால் ஜனவரி மாதம் வரை தோல்விகளையும், அவமானங்களையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சுரைக்காய் இருந்தா.. இப்படி ஒருவாட்டி மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்... -
சப்பாத்தி, பூரிக்கு கேரட்டை வைச்சு இந்த பக்குவத்தில் குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்
3000 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் தோன்றிய முதல் ஸ்வீட் எது தெரியுமா? உங்களுக்கு இந்த ஸ்வீட் பிடிக்குமா?
இந்தியா பல தனித்துவமான உணவுகள் மற்றும் இனிப்புகளின் பிறப்பிடமாக உள்ளது. இந்தியர்களுக்கு இனிப்புகள் மீது எப்போதும் அலாதிப்பிரியம் உண்டு. இந்தியாவில் இனிப்புகள் தயாரிப்பது மற்றும் விற்பது என்பது மிகப்பெரிய சந்தையாகும். இனிப்புகள் வெறும் சிற்றுண்டிகளாக மட்டுமல்லாமல், அன்றாட வாழ்க்கை, பண்டிகைகள் மற்றும் சமயச் சடங்குகளின் ஒரு அங்கமாகவும் இருக்கின்றன.

தானியங்கள், நெய் மற்றும் சர்க்கரை, வெல்லம் போன்ற அடிப்படைப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இவை, கடந்த கால இந்தியர்களின் உணவுப் பழக்கவழக்கங்களில் முக்கியப்பங்கு வகித்தன. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இனிப்புகள் நம் உணவில் ஒரு அங்கமாக உள்ளன. வரலாற்றை உற்று நோக்கினால், ஒரு குறிப்பிட்ட இனிப்பு வகை மற்றவற்றிலிருந்து தனித்து நிற்பதைக் காணலாம்.
இந்தியாவின் பழமையான இனிப்பு வகை
மால்புவா இந்தியாவின் மிகவும் பழமையான இனிப்பு வகை என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். இதன் தோற்றம் 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய வேத காலத்தைச் சேர்ந்தது. ரிக்வேதத்தில் இது 'அபூபா' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த கால மால்புவா, பார்லி மாவைக் கொண்டு தயாரிக்கப்பட்டு, நெய்யில் பொரிக்கப்பட்டு, தேன் சேர்த்து இனிப்பாக்கப்பட்டது. இதில் சர்க்கரைப் பாகோ, கோவா அல்லது உலர் பழங்கள் போன்றவை இருக்கவில்லை, இது ஒரு சத்து நிறைந்த, திருப்திகரமான இனிப்பு உணவாக மட்டுமே இருந்தது.
மால்புவாவின் சிறப்பம்சம் என்னவென்றால், அது இன்றும் பெரும்பாலான மக்களால் விரும்பி உண்ணப்படுகிறது. பல பண்டைய உணவுகள் காலப்போக்கில் வழக்கொழிந்து போனாலும், மால்புவா தொடர்ந்து பரிணாம வளர்ச்சி அடைந்து, இன்றும் முக்கிய இனிப்பாக உள்ளது.
மால்புவாவின் தொன்மையான தோற்றம்
பண்டைய இந்தியாவில், உணவும், ஆன்மீகமும் ஆழமாகப் பிணைந்திருந்தன. மதச் சடங்குகளின் போது 'அபூபா' ஒரு பிரசாதமாகத் தயாரிக்கப்பட்டது. அக்காலத்தில் பார்லி ஒரு முதன்மையான தானியமாகவும், தேன் முக்கிய இனிபாகவும் இருந்தன. இது இந்த உணவை புனிதமானதாகவும், அதே சமயம் நடைமுறைக்கு ஏற்றதாகவும் மாற்றியது. அபூபா பற்றிய குறிப்புகள் வேத இலக்கியங்களில் மட்டுமல்லாமல், பௌத்த மற்றும் சமண நூல்களிலும் காணப்படுகின்றன. காலப்போக்கில், இந்த உணவு சடங்குகளைத் தாண்டி, அன்றாட உணவு கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக மாறியது. ஒடிசாவில், 'அமலு' என்று அழைக்கப்படும் மால்புவா, பூரியில் உள்ள ஜெகன்னாதர் கோயிலில் இன்றும் தினமும் படைக்கப்படுகிறது.
மால்புவாவின் பரிணாம மாற்றம்
இந்தியாவில் விவசாயமும் வணிகமும் முன்னேற்றமடைந்தபோது, மால்புவா பல்வேறு பரிணாம வளர்ச்சியடைந்தது. பார்லிக்கு பதிலாக கோதுமையும், சில பகுதிகளில் அரிசி மாவும் பயன்படுத்தப்பட்டன. தேனுக்குப் பதிலாக கரும்புச் சாறும், பிற்காலத்தில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையும் சேர்க்கப்பட்டன. சுவையை மேம்படுத்த பால், கோயா மற்றும் ஏலக்காய் போன்ற நறுமணப் பொருட்கள் சேர்க்கப்பட்டன. அதன்பின் மால்புவா அரச சமையலறைகளை அடைந்தது. அங்கு அது இன்னும் செழுமையான, ஆடம்பரமான இனிப்பாக மாறியது. இருப்பினும், அதன் அடிப்படை வடிவம் மாறவே இல்லை.
இந்தியா முழுவதும் உள்ள மால்புவா வகைகள்
மால்புவா ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலைத்திருப்பதற்கு அதன் நெகிழ்வுத்தன்மையே காரணமாகும். ஏறக்குறைய ஒவ்வொரு பிராந்தியத்திலும் இதற்கென ஒரு தனித்துவமான வடிவம் உள்ளது. வங்காளத்தில், 'புவா' என்ற பெயரில் அழைக்கப்படும் இது தயாரிக்கும்போது அதில் சோம்பு அல்லது தேங்காய் சேர்த்து சுவையூட்டப்படுகிறது. பீகாரில், மாவுக்கலவையில் வாழைப்பழம் சேர்ப்பதன் மூலம் அது மென்மையாகிறது. ராஜஸ்தான் மற்றும் வட இந்தியாவில், மால்புவாவை கெட்டியான 'ரப்ரி'யுடன் சேர்த்து பரிமாறுகிறார்கள். இது பண்டிகை காலங்களில் மிகவும் விருப்பமான உணவாக மாறுகிறது.
சர்க்கரை கொண்ட இனிப்புகளை விட இது பழமையானது
பிரபலமான இந்திய இனிப்புகளைப் போலன்றி, சர்க்கரை பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே மால்புவா இருந்துள்ளது. ஜிலேபி, குலாப் ஜாமுன் மற்றும் பர்பி போன்ற இனிப்புகள், சர்க்கரை உற்பத்தி மேம்பட்ட பின்னரே உருவாயின. ஆனால் மால்புவா தேன் அல்லது வெல்லம் கொண்டு அதற்கு முன்னரே உருவாக்கப்பட்டது. மூலப்பொருட்களில் இத்தகைய பெரும் மாற்றம் ஏற்பட்ட பிறகும், மால்புவா தொடர்ந்து நிலைத்திருப்பது, இந்திய சமையல் வரலாற்றில் அதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.



Click it and Unblock the Notifications

