மதுரை ஸ்பெஷல் தக்காளி பொங்கல் ரெசிபி - இந்த மாதிரி தக்காளி சாதம் செஞ்சு பாருங்க - பிரியாணி மாதிரியே இருக்கும்

Posted By:

Madurai Special Thakkali Pongal Recipe in Tamil: காலையில் உங்கள் பிள்ளைகளுக்கு லன்ச்பாக்ஸிற்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் பிள்ளைகளுக்கு தக்காளி சாதம் ரொம்ப பிடிக்குமா? எப்போதும் ஒரே மாதிரி தான் தக்காளி சாதத்தை செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை இந்த மதுரை ஸ்பெஷல் தக்காளி சாதத்தை செய்து கொடுங்கள்.

Madurai Special Thakkali Pongal Recipe How to Make at Home in Tamil

இந்த தக்காளி சாதம் நீங்கள் வழக்கமாக சாப்பிடும் தக்காளி சாதம் போல இருக்காது. கொங்கு பகுதிகளில் அரிசி பருப்பு சாதம் எப்படி பிரபலமானதோ அதேபோல மதுரை சுற்றுவட்டாரத்தில் இந்த தக்காளி பொங்கல் மிகவும் பிரபலமானது. இந்த தக்காளி சாதம் சாப்பிட்டால் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு பிரியாணி சாப்பிட்டது போலவே இருக்கும்.

உங்களுக்கு இந்த மதுரை ஸ்பெஷல் தக்காளி பொங்கலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி பொங்கல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- சீரக சம்பா அரிசி - ஒன்றரை கப்
- தண்ணீர் - 2 கப்
- நறுக்கிய தக்காளி - 4
- மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
- நறுக்கிய வெங்காயம் - 2
- பச்சை மிளகாய் - 4 (நீளவாக்கில் கீறியது)
- இஞ்சி - 1/2 அங்குலத் துண்டு (பொடியாக நறுக்கியது)
- பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கியது)
- புதினா இலைகள் - 4 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- நெய் - 1 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு

மசாலா பொருட்கள்:

- சோம்பு - 1 ஸ்பூன்
- ஏலக்காய் - 2
- பிரிஞ்சி இலை - 1
- கிராம்பு - 3
- அன்னாசிப்பூ - 1
- கல்பாசி - சிறிதளவு
- பட்டை - 1

செய்முறை:

- முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் புதினாவை நறுக்கி வைத்துக் கொள்ளவும். சீரக சம்பா அரிசியை நன்றாக கழுவி வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

- முதலில் ஒரு குக்கரில் எண்ணெய் மற்றும் நெய்யைச் சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் மசாலாப் பொருட்கள் ஒவ்வொன்றாகச் சேர்க்கவும். அவை நன்றாகச் சூடாகி, அவற்றின் வாசனை நன்றாக வெளிப்படும் வரை வதக்கவும்.

- பின்னர் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைச் சேர்த்து, நன்றாகக் கிளறி நன்றாக வதக்கவும்.

- வெங்காயம் பொன்னிறமானதும், இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து மேலும் சில நிமிடங்கள் வதக்கவும், அதன் பிறகு நறுக்கி வைத்துள்ள புதினா இலைகளைச் சேர்க்கவும்.

- பின்னர் நறுக்கிய தக்காளி மற்றும் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, தக்காளி ஓரளவு மென்மையாகும் வரை கிளறவும்.

- இப்போது தேவையான அளவு தண்ணீர் மற்றும் கழுவி ஊறவைத்த சீரக சம்பா அரிசியைச் சேர்க்கவும்.

- சீரக சம்பா அரிசி வேக அதிக நேரம் எடுக்காது. எனவே குக்கரை மூடி விசில் போட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும்.

- ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, நீராவி தானாக வெளியேறும் வரை காத்திருக்கவும்.

- பின்னர் குக்கரை திறந்து நன்றாக கிளறினால் மதுரை ஸ்பெஷல் தக்காளி பொங்கல் ரெடி!

[ of 5 - Users]
Story first published: Wednesday, November 18, 2026, 17:15 [IST]
Desktop Bottom Promotion