Latest Updates
-
40 வயதிலும் 20 வயது போல காட்சியளிக்க தவிர்க்க வேண்டிய 5 உணவுகள் - இந்த உணவுகளை அதிகமா சாப்பிடாதீங்க -
3000 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் தோன்றிய முதல் ஸ்வீட் எது தெரியுமா? உங்களுக்கு இந்த ஸ்வீட் பிடிக்குமா? -
மதுரை ஸ்பெஷல் தக்காளி பொங்கல் ரெசிபி - இந்த மாதிரி தக்காளி சாதம் செஞ்சு பாருங்க - பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் இந்த 3 ராசிகளை தோல்விகளும், நஷ்டங்களும் துரத்தப்போகுதாம் -
வழக்கமான சாம்பார் வைக்காம இந்த மங்களூர் ஸ்டைல் சாம்பாரை வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
விமானத்தில் பயணிக்கும் போது போனை ஏன் அவசியம் 'Airplane Mode'-ல் வைக்க சொல்றாங்க தெரியுமா? -
வெங்காயம் சேர்க்காத பூண்டு தக்காளி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 18, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கப்போகுதாம் -
சிம்ம ராசியில் கேது-செவ்வாய் கூட்டணி.. டிசம்பர் 05 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
செவ்வாய்-கேது இணைப்பால் ஜனவரி மாதம் வரை தோல்விகளையும், அவமானங்களையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
10 சின்ன வெங்காயம் இருந்தா இப்படி கேரளா ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க - சுருக்குனு செமையா இருக்கும்
Kerala Style Chinna Vengaya Kulambu Recipe in Tamil: தினமும் ஒரே மாதிரியான புளிக்குழம்பு, சாம்பார் செய்வது என்பது சாப்பிடுபவர்களுக்கு மட்டுமின்றி சமைப்பவர்களுக்கும் போரடிக்க தொடங்கியிருக்கும். அப்படியானால் புது விதமாக கேரளா ஸ்டைல் ரெசிபிக்களை முயற்சி செய்யுங்கள். உங்கள் வீட்டில் சின்ன வெங்காயமும், வர மிளகாயும் இருந்தா கேரளா ஸ்டைல் சின்ன வெங்காய குழம்பை முயற்சி செய்து பாருங்கள். இந்த குழம்பு செய்வது மிகவும் எளிதானதாகும், ஏனெனில் சின்ன வெங்காயம் என்பது அனைத்து சமையலறைகளிலும் இருக்கும் ஒரு அத்தியாவசிய பொருளாகும்.

சின்ன வெங்காயம், பூண்டு, வர மிளகாய் போன்றவை சேர்த்து செய்யப்படும் இந்த கேரளா ஸ்டைல் கார குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். இந்த குழம்பில் இனிப்பு, புளிப்பு, காரம் என அனைத்து சுவைகளும் இருக்கும். எனவே இந்த குழம்பு அனைவருக்கும் மிகவும் பிடித்ததாக இருக்கும்.
உங்களுக்கு இந்த கேரளா ஸ்டைல் சின்ன வெங்காய குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சின்ன வெங்காய குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மசாலா அரைக்க:
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 4 ஸ்பூன் மல்லி விதைகள்
- 4¼ கப் துவரம் பருப்பு
- 1 ஸ்பூன் மிளகு
- 1 ஸ்பூன் சீரகம்
- ¼ ஸ்பூன் வெந்தயம்
- 10 வர மிளகாய்
- சிறிது கறிவேப்பிலை
- ¼ ஸ்பூன் பெருங்காயத்தூள்
- ½ ஸ்பூன்மஞ்சள் தூள்
குழம்பு வைக்க:
- 2 ஸ்பூன் எண்ணெய்
- ¼ ஸ்பூன் வெந்தயம்
- 1 ஸ்பூன் கடுகு
- ½ ஸ்பூன் சீரகம்
- ஒரு சிட்டிகை பெருங்காயம்
- 10 சின்ன வெங்காயம்
- 10 பல் பூண்டு
- 1½ கப் தக்காளி விழுது
- ½ ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 ஸ்பூன் மிளகாய்த் தூள்
- 2 ஸ்பூன் அரைத்த மசாலாத் தூள்
- தேவையான அளவு உப்பு
- 1 ஸ்பூன் வெல்லம்
- ½ கப் புளிக்கரைசல்
- 1 கப் தண்ணீர்
- சிறிது கறிவேப்பிலை
- 2 ஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
செய்முறை:
- முதலில், ஒரு கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் கொத்தமல்லி விதைகள், துவரம் பருப்பு, மிளகு, 2 சீரகம் மற்றும் வெந்தயத்தைச் சேர்க்கவும்.
- மசாலாக்களின் வாசனை வரும் வரை மிதமான தீயில் வதக்கவும்.
- பின்னர் வர சிவப்பு மிளகாய் மற்றும் கறிவேப்பிலைகளை சேர்க்கவும்.
- மிளகாய் மொறுமொறுப்பாகும் வரை வதக்கவும். இதை முழுமையாக ஆறவைத்து, மிக்ஸி ஜாருக்கு மாற்றவும்.
- மேலும், ¼ டீஸ்பூன் பெருங்காயம் மற்றும் ½ டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும். மென்மையானப் பொடியாக அரைத்து தனியாக வைக்கவும்.
-- முதலில், ஒரு பெரிய வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். அதில் ¼ ஸ்பூன் வெந்தயம், 1 ஸ்பூன் கடுகு, சீரகம் மற்றும் ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்த்துத் தாளிக்கவும்.
- இப்போது, 10 சின்ன வெங்காயம் மற்றும் 10 பல் பூண்டு சேர்த்து, மிதமான தீயில் வதக்கவும்.
- அதன்பிறகு, 1½ கப் தக்காளி விழுதைச் சேர்த்து, அனைத்தும் நன்றாகக் கலக்கும்படி நன்கு கிளறவும்.
- பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், 2 ஸ்பூன் அரைத்த மசாலா தூள், 1 ஸ்பூன் உப்பு மற்றும் 1 ஸ்பூன் வெல்லம் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- ½ கப் புளிக்கரைசல், 1 கப் தண்ணீர் மற்றும் சிறிதளவு கறிவேப்பிலையைச் சேர்க்கவும்.
- மூடி வைத்து 10 நிமிடங்கள் அல்லது அனைத்தும் நன்கு வெந்து, எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்கவிடவும்.
- 2 ஸ்பூன் கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து, அவற்றை நன்றாகக் கலக்கி அடுப்பை அணைக்கவும்.
- அவ்வளவுதான் சுவையான கேரளா ஸ்டைல் சின்ன வெங்காயக் குழம்பு ரெடி. இதை சூடான சாதம், இட்லி அல்லது தோசையுடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications
