Latest Updates
-
3000 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் தோன்றிய முதல் ஸ்வீட் எது தெரியுமா? உங்களுக்கு இந்த ஸ்வீட் பிடிக்குமா? -
மதுரை ஸ்பெஷல் தக்காளி பொங்கல் ரெசிபி - இந்த மாதிரி தக்காளி சாதம் செஞ்சு பாருங்க - பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் இந்த 3 ராசிகளை தோல்விகளும், நஷ்டங்களும் துரத்தப்போகுதாம் -
வழக்கமான சாம்பார் வைக்காம இந்த மங்களூர் ஸ்டைல் சாம்பாரை வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
விமானத்தில் பயணிக்கும் போது போனை ஏன் அவசியம் 'Airplane Mode'-ல் வைக்க சொல்றாங்க தெரியுமா? -
வெங்காயம் சேர்க்காத பூண்டு தக்காளி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 18, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கப்போகுதாம் -
சிம்ம ராசியில் கேது-செவ்வாய் கூட்டணி.. டிசம்பர் 05 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
செவ்வாய்-கேது இணைப்பால் ஜனவரி மாதம் வரை தோல்விகளையும், அவமானங்களையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சுரைக்காய் இருந்தா.. இப்படி ஒருவாட்டி மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்...
40 வயதிலும் 20 வயது போல காட்சியளிக்க தவிர்க்க வேண்டிய 5 உணவுகள் - இந்த உணவுகளை அதிகமா சாப்பிடாதீங்க
Skin Care Tips: அழகான மற்றும் இளமையான சருமம் வேண்டுமென்பதுதான் அனைவரின் விருப்பமாகவும் இருக்கும். ஆனால் அதற்கான வழிகள் என்னவென்பதில்தான் பல்வேறு குழப்பங்களும், விவாதங்களும் உள்ளது. குறைபாடற்ற, அழகான சருமத்தைப் பெறுவதற்கு ஆரோக்கியமான மரபணுக்கள் மட்டுமே போதாது. ஆரோக்கியமான உணவுமுறை சருமத்தின் தரத்தை மேம்படுத்தும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. நமது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் நமது உணவுமுறை முக்கியப்பங்கு வகிக்கிறது. பொலிவான சருமத்திற்கு எப்படி சில பொருட்களை சாப்பிட வேண்டுமோ அதேபோல சில பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்கவும் வேண்டும். அவை எந்தெந்த உணவுகள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வறுத்த உணவுகள்
ஃப்ரீ ரேடிக்கல்கள் நமது உடலின் ஆற்றல் உற்பத்தி அமைப்பின் ஒரு இயற்கையான துணைபொருளாகும், ஆனால் அவை மாசு, மது, புகைபிடித்தல் மற்றும் பொரித்த உணவுகளாலும் உருவாகின்றன. இந்த நிலையற்ற மூலக்கூறுகள் அதிகமாக இருப்பது, ஆக்ஸிஜனேற்ற செயல்முறையின் மூலம் செல்களுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும். இது வயதாவதை விரைவுபடுத்தி, இளம் வயதிலேயே சுருக்கங்கள் ஏற்பட வழிவகுக்கும். இந்த சிக்கலைத் தவிர்க்க உணவுகளைப் பச்சையாகச் சாப்பிடுங்கள், அல்லது அதற்குப் பதிலாக லேசாக ஆவியில் வேகவைக்கவும். ஒருவேளை நீங்கள் வருது சாப்பிடுவதாக இருந்தால் தேங்காய் எண்ணெய் போன்ற வெப்பத்தைத் தாங்கக்கூடிய எண்ணெயைப் பயன்படுத்துங்கள்.
சர்க்கரை
நாம் உண்ணும் கார்போஹைட்ரேட்டுகளை நமது உடல், குளுக்கோஸ் எனப்படும் சர்க்கரையாக உடைக்கிறது, அது ஆற்றலாக மாற்றப்படுகிறது. ஆனால், நாம் அதிகப்படியான சர்க்கரையையும், அதிக கிளைசெமிக் குறியீடு கொண்ட கார்போஹைட்ரேட்டுகளையும் உண்ணும்போது, இந்தச் சர்க்கரைகள் நமது சருமத்தில் உள்ள கொலாஜன் மற்றும் எலாஸ்டின் புரதங்களுடன் பிணைந்து கொள்கின்றன. கிளைக்கேஷன் என்று அழைக்கப்படும் இந்த சேதப்படுத்தும் செயல்முறை, சருமத்தின் இந்த முக்கியமான கட்டமைப்புகளைக் கடினமாக்கி பலவீனப்படுத்துகிறது, இது தோல் தளர்ந்து தொய்வடைவதற்கு வழிவகுக்கிறது. கேக்குகள், இனிப்புகள் மற்றும் கார்பனேற்றப்பட்ட பானங்கள் போன்ற சர்க்கரை உணவுகளையும், வெள்ளை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளையும் தொடர்ந்து உண்பதைத் தவிர்க்கவும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
ஆரோக்கியமான சருமத்திற்கு அதிகப்படியான பதப்படுத்தப்பட்ட உணவுகளை, குறிப்பாக ஆரோக்கியமற்ற கொழுப்புகளைக் கொண்ட உணவுகளை உண்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை உடலில் வீக்கத்தை ஏற்படுத்தக்கூடும். பீட்சா, துரித உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகள் போன்றவை இதில் முக்கியமானவை. உடலில் மிகக் குறைந்த அளவிலான வீக்கம் ஏற்படும்போது அது வெளியில் தெரியாமல் இருக்கலாம். ஆனால், உடலில் வீக்கத்தின் அளவு அதிகரிக்கும் பட்சத்தில், அது உடல் எடை அதிகரிப்பு மற்றும் வயதான சருமம் போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கலாம்.
உப்பு அதிகமுள்ள உணவுகள்
துரித உணவுகளில் எப்போதும் உப்பு அதிகமாக இருக்கும். உப்பு அதிகமாக இருக்கும் உணவுகள் உடலில் நீர் தேக்கத்திற்கு வழிவகுக்கும். இத்தகைய உணவுகள் உங்களை வீக்கமாகவும் அசௌகரியமாகவும் உணர வைப்பது மட்டுமின்றி, உங்கள் சருமத்திற்கு வயதான தோற்றத்தை அளிக்கலாம்.
ஆல்கஹால்
அளவுக்கு அதிகமாக மது அருந்துவது, உடலில் நீரை மீண்டும் உறிஞ்சுவதற்குப் பயன்படும் ஆன்டி-டையூரிடிக் ஹார்மோன்களின் உற்பத்தியைக் குறைக்கிறது. எனவே, உங்கள் உடல் சிறுநீர் கழிப்பதன் மூலம் அதிக திரவங்களை இழக்கிறது, இது நீரிழப்புக்கு வழிவகுக்கும். வயதான சருமம் இயற்கையாகவே குறைவான அளவு நீரைத் தக்கவைத்து, அதன் நெகிழ்ச்சித்தன்மையை இழக்கிறது, அதனால் காலப்போக்கில் சுருக்கங்கள் மேலும் தெளிவாகத் தெரிகின்றன. மது உங்கள் சருமத்திற்கு உதவாதது மட்டுமின்றி, அது உங்கள் உடல் எடையையும் எதிர்மறையாகப் பாதிக்கும்.



Click it and Unblock the Notifications

