Latest Updates
-
300 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் கம்பெனி எது தெரியுமா? டாடாவோ, ரிலையன்ஸோ இல்லையாம் -
காளானும், உருளைக்கிழங்கும் இருந்தா இந்த மாதிரி தொக்கு செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
ஆன்டிபயாடிக் எதிர்ப்பைத் தடுக்க ஆய்வகப் பரிசோதனைகள் எப்படி உதவும்? விளக்கும் டாக்டர்! -
இந்தியாவின் மிகவும் வினோதமான ரயில் நிலையம் இதுதான் - இது எங்க இருக்குனு தெரிஞ்சா நம்பவே மாட்டிங்க -
நேருக்கு நேர் இருக்கும் ராகு-செவ்வாய்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட்டி அடிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
முடக்கத்தான் கீரை தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
நவம்பர் 19, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்படப்போகுதாம் -
சூரியன்-செவ்வாய் உருவாக்கும் அரிய யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிசயங்கள் நடக்கப்போகுதாம் -
10 சின்ன வெங்காயம் இருந்தா இப்படி கேரளா ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க - சுருக்குனு செமையா இருக்கும் -
40 வயதிலும் 20 வயது போல காட்சியளிக்க தவிர்க்க வேண்டிய 5 உணவுகள் - இந்த உணவுகளை அதிகமா சாப்பிடாதீங்க
1 பீர்க்கங்காயும், 4 முட்டையும் இருந்தா.. இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..
Peerkangai Egg Poriyal Recipe In Tamil: இதுவரை நீங்கள் பீர்க்கங்காயைக் கொண்டு கிரேவி, பிரட்டல், பொரியல் என்று செய்து சாப்பிட்டிருப்பீர்கள். அதுவும் பொரியலைத் தான் அடிக்கடி செய்வீர்களானால், அதை எப்போதும் ஒரே மாதிரி செய்யாமல், சற்று வித்தியாசமாக அத்துடன் முட்டை சேர்த்து பொரியல் செய்யுங்கள். இப்படி முட்டை சேர்த்து பீர்க்கங்காய் பொரியலை செய்யும் போது, சுவை பிடிமாதமாக இருக்கும். குறிப்பாக டயட்டில் இருப்பவர்கள் சாதத்தைக் குறைக்க நினைத்தால், இந்த பொரியலை சற்று அதிகமாக செய்து சாப்பிட்டால் போதும். அதுவும் இந்த பொரியலை சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடனும் சாப்பிடலாம்.

உங்களுக்கு இந்த பீர்க்கங்காய் முட்டை பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பீர்க்கங்காய் முட்டை பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3 (இடித்தது)
* பீர்க்கங்காய் - 1
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* முட்டை - 4
செய்முறை:
* முதலில் பீர்க்கங்காயின் தோலை நீக்கிவிட்டு, அதை சிறு துண்டுகளாக
நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் இடித்த பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பொடியாக
நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய பீர்க்கங்காயை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, மூடி வைத்து 3-4 நிமிடம்
பீர்க்கங்காயை வேக வைக்க வேண்டும்.
* பின்பு மூடியைத் திறந்து, காயை கிளறி விட்டு, அதன் மேல் 4 முட்டைகளை
உடைத்து ஊற்றி மூடி, மேலே சிறிது உப்பு தூவி மூடி வைத்து 2 நிமிடம்
வேக வைக்க வேண்டும்.
* பிறகு மூடியைத் திறந்து முட்டைகளை நன்கு உடைத்துவிட்டு கிளறி விட
வேண்டும்.
* பீர்க்கங்காயும், முட்டையும் நன்கு ஒன்று சேர்ந்ததும், அடுப்பை
அணைத்துவிட்டு இறக்கினால், சுவையான பீர்க்கங்காய் முட்டை பொரியல்
தயார்.



Click it and Unblock the Notifications
