Latest Updates
-
முடக்கத்தான் கீரை தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
நவம்பர் 19, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்படப்போகுதாம் -
சூரியன்-செவ்வாய் உருவாக்கும் அரிய யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிசயங்கள் நடக்கப்போகுதாம் -
10 சின்ன வெங்காயம் இருந்தா இப்படி கேரளா ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க - சுருக்குனு செமையா இருக்கும் -
40 வயதிலும் 20 வயது போல காட்சியளிக்க தவிர்க்க வேண்டிய 5 உணவுகள் - இந்த உணவுகளை அதிகமா சாப்பிடாதீங்க -
3000 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் தோன்றிய முதல் ஸ்வீட் எது தெரியுமா? உங்களுக்கு இந்த ஸ்வீட் பிடிக்குமா? -
மதுரை ஸ்பெஷல் தக்காளி பொங்கல் ரெசிபி - இந்த மாதிரி தக்காளி சாதம் செஞ்சு பாருங்க - பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் இந்த 3 ராசிகளை தோல்விகளும், நஷ்டங்களும் துரத்தப்போகுதாம் -
வழக்கமான சாம்பார் வைக்காம இந்த மங்களூர் ஸ்டைல் சாம்பாரை வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
விமானத்தில் பயணிக்கும் போது போனை ஏன் அவசியம் 'Airplane Mode'-ல் வைக்க சொல்றாங்க தெரியுமா?
நேருக்கு நேர் இருக்கும் ராகு-செவ்வாய்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட்டி அடிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா?
Mars Rahu Samsaptak Yog 2026: ஜோதிடத்தின் படி கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், தன்னம்பிக்கை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். எனவே செவ்வாயின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் வாழ்வின் இந்த விஷயங்களில் தெரியும். அந்த வகையில் இந்த செவ்வாய் நவம்பர் 12 ஆம் தேதி சிம்ம ராசிக்குள் நுழைந்தார்.

அப்படி நுழையும் போது அந்த ராசியில் ஏற்கனவே கேது இருப்பதால், கேது-செவ்வாய் சேர்க்கை உருவாகியுள்ளது. மறுபுறம் ராகு கும்ப ராசியில் இருப்பதால், செவ்வாய் மற்றும் ராகுவால் சமசப்தம யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறவுள்ளனர்.
ஜோதிடத்தில் எதிரெதிரில் இரண்டு கிரகங்கள் இருக்கும் போது சமசப்தம யோகம் உருவாகும். அந்த வகையில் செவ்வாய் சிம்ம ராசியிலும், ராகு கும்ப ராசியிலும் என இரண்டு கிரகங்களும் ஒன்றுக்கொன்று 7 ஆம் வீட்டில் இருப்பதால், இந்த சமசப்தம யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகமானது டிசம்பர் 05 ஆம் தேதி வரை நீடித்திருக்கும். அதன் பின் ராகு மகர ராசிக்குள் நுழைவார். இப்போது செவ்வாய் ராகுவால் உருவாகியுள்ள சமசப்தம யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
செவ்வாய் ராகுவால் உருவாகியுள்ள சமசப்தம யோகம் மிதுன ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் சிறப்பாக இருக்கும். முக்கியமாக தைரியம், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். இருந்தாலும், ஆரோக்கியத்தில் சற்று சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். குடும்ப உறுப்பினர்களுடன உறவு மேம்படும். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதோடு ஒவ்வொரு முயற்சிகளிலும் நல்ல வெற்றியைப் பெறக்கூடும். எனவே சோம்பலை விட்டுவிட்டு கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.
விருச்சிகம்
செவ்வாய் ராகுவால் உருவாகியுள்ள சமசப்தம யோகமானது விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏராளமான நன்மைகளைத் தரும். தொழில் ரீதியாக ஏற்ற இறக்கங்களை காணக்கூடும். இருந்தாலும் முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்பும் கிடைக்கும். அதை திறம்பட பயன்படுத்திக் கொண்டால் நல்ல உயரத்தை அடையலாம். பணியிடத்தில் அலுவலக அரசியலில் இருந்து விலகி இருப்பது நல்லது. பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். இருப்பினும் சொத்து தொடர்பாக எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் அவசரப்பட்டு எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். எதையும் நன்கு யோசித்து முடிவெடுத்தால் நல்ல வெற்றியைப் பெறுவதற்கனா வாய்ப்புள்ளது.
மீனம்
செவ்வாய் ராகுவால் உருவாகியுள்ள சமசப்தம யோகத்தால் மீன ராசிக்காரர்களுக்கு டிசவம்பர் 05 வரை பொற்காலமாக இருக்கும். வேலையில் போட்டி அதிகரித்தாலும், கடினமாக உழைத்தால் நல்ல வெற்றியைப் பெறலாம். விடாமுயற்சியுடன் செய்யும் ஒவ்வொரு வேரலயிலும் நல்ல வெற்றியைப் பெறக்கூடும். நிதி ரீதியாக இக்காலம் சிறப்பாக இருக்கும். இருந்தாலும், எந்த ஒரு பண பரிவர்த்தனைகளையும் அவசரப்பட்டு செய்வதைத் தவிர்க்க வேண்டும். இக்காலத்தில் நீண்ட தூர பயணத்தை மேற்கொள்வதற்கான வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



