Latest Updates
-
சூரியன் தனுசு ராசிக்குள் செல்வதால் கோடிகளில் புரளப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
புடலங்காயும், தயிரும் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
Hair Care: ஈரமான தலைமுடியுடன் தூக்குவதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
லன்ச்பாக்ஸிற்கு ஒருடைம் மசாலா தேங்காய் சாதம் செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
உங்க ராசியை சொல்லுங்க.. உங்களோட ரகசிய குணத்தை சொல்றோம்.. -
வாழைப்பழம் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாதா? பால் குடித்தால் சளி பிடிக்குமா? நம்பிக்கைகளும்.. உண்மையும்.. -
இந்த 4 ராசி சிங்கப் பெண்களை யாராலும் கண்ட்ரோல் பண்ண முடியாதாம் - மகாராணியாக வாழ பிறந்தவர்களாம் இவங்க -
கேஸ் அடுப்பு ஆரஞ்சு நிறத்தில் எரிவதற்கு காரணம் என்ன தெரியுமா? அப்படி எரிஞ்சா என்ன பண்ணனும் தெரியுமா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சியால் டிசம்பரில் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
இந்தியாவில் உருவான முதல் கம்பெனி எது தெரியுமா? இன்று அந்த கம்பெனியின் மதிப்பு 60,000 கோடியாம்
நாளை உருவாகும் விஷ யோகம்: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. அவசரப்படக்கூடாது..
Saturn Moon Conjunction Vish Yog 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் மனதின் காரணியாக கருதப்படுபவர் சந்திரன். இந்த சந்திரன் கடக ராசியின் அதிபதியாவார் மற்றும் இவர் 2 1/2 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். அந்த வகையில் சந்திரன் நவம்பர் 20 ஆம் தேதி மீன ராசிக்குள் நுழைகிறார். அப்படி மீன ராசியில் நுழையும் போது, அந்த ராசியில் ஏற்கனவே நீதிமான் சனி பகவான் பயணித்து வருகிறார். இதனால் மீன ராசியில் சனி மற்றும் சந்திரனின் சேர்க்கை நிகழவுள்ளது.

இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் அசுப யோகம் உருவாகவுள்ளது. அது தான் விஷ யோகம். இந்த விஷ யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த யோக காலத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதுவும் நிதி மற்றும் தொழிலில் விஷயங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இப்போது மீன ராசியில் உருவாகும் விஷ யோகத்தால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 12 ஆவது வீட்டில் சனி மற்றும் சந்திரனின் சேர்க்கையால் விஷ யோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தேவையற்ற செலவுகள் அதிகரித்து, நிதி நிலைமை மோசமடையலாம். எனவே செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். பண விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சிலருக்கு தூக்கம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். மன அமைதிக்கு தியானத்தையும், யோகா பயிற்சியையும் மேற்கொள்வது நல்லது.
உணவு விஷயங்களில் கவனக்குறைவாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக ஹோட்டல்களில் வாங்கி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். பயணங்களின் போது உடைமைகளை பத்திரமாக வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. விஷ யோகத்தின் மோசமான விளைவுகளைத் தவிர்க்க சிவ மந்திரங்களை உச்சரிப்பது நல்லது.
சிம்மம்
சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டில் சனி மற்றும் சந்திரனின் சேர்க்கையால் விஷ யோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். பண பரிவர்த்தனைகளை செய்யும் முன் கவனமாக சிந்திக்க வேண்டும். முடிந்தால் நம்பகமான ஒருவரிடம் ஆலோசனை செய்து கொள்வது நல்லது.
ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை வயிறு தொடர்பான பிரச்சனைகளால் சிரமப்படும் வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க ஹோட்டல் உணவுகளை தவிர்த்திடுங்கள். மாணவர்களால் படிப்பில் கவனம் செலுத்துவது கடினமாக இருக்கலாம். விஷ யோகத்தின் மோசமான விளைவுகளைத் தவிர்க்க அனுமன் சாலிசாவை பாராயணம் செய்வது நல்லது.
மீனம்
மீன ராசியின் முதல் வீட்டில் சனி மற்றும் சந்திரனின் சேர்க்கையால் விஷ யோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை குறையும். வேலைகளில் தடைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. மன அழுத்தம், சோகம் மற்றும் தேவையற்ற கவலை ஆகியவை உங்கள் அன்றாட வழக்கத்தைப் பாதிக்கக்கூடும்.
எந்தவொரு நிதி தொடர்பான நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு முன் கவனமாக சிந்தியுங்கள். அவசர முடிவுகள் இழப்புகளுக்கு வழிவகுக்கும். இந்த நேரத்தில் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். முக்கிய முடிவுகளை இக்காலத்தில் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். விஷ யோகத்தின் மோசமான விளைவை தவிர்க்க கருப்பு எள் தானம் செய்வது நல்லது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
