டிசம்பர் மாதத்தில் இந்த 5 ராசிக்கு மகத்தான வெற்றியும், பணமும் குவியப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?

December 2026 Planet Transits: ஜோதிடத்தின் படி, 2026 ஆம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் மாதம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த மாதத்தில் ஒருவரது வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கியமான 4 கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. குறிப்பாக டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேதுவின் ராசி மாற்றங்கள் நிகழவுள்ளன.

December 2026 Planet Transits These 5 Zodiac Signs Will Be Lucky

அதன் பின் நீதிமான் சனி பகவான் மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் தனது பயணத்தை தொடங்கவுள்ளார். அதன் பின்னர் தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான் வக்ர நிலையில் சிம்ம ராசியில் பயணத்தை தொடங்கவிருக்கிறார். மேலும் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்குள் நுழையவுள்ளார். இப்படி 4 முக்கிய கிரகங்களின் நிலை மாற்றங்களின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் காணப்படும்.

குறிப்பாக சில ராசிக்காரர்கள் இந்த கிரக மாற்றங்களால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். குறிப்பாக நிதி நிலையில் உயர்வு, தொழிலில் நல்ல முன்னேற்றம், வணிகத்தில் எதிர்பாராத அளவில் லாபம் போன்றவற்றை காணவுள்ளனர். இப்போது 2026 டிசம்பர் மாத கிரக பெயர்ச்சிகளின் தேதிகளையும், இந்த கிரக பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தைப் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதையும் காண்போம்.

ராகு-கேது பெயர்ச்சி 2026

நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது சுமார் 18 மாதங்களுக்கு பின் டிசம்பர் 05 ஆம் தேதி ராசியை மாற்றவுள்ளனர். அப்போது ராகு கும்ப ராசியில் இருந்து மகர ராசிக்கும், கேது சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்கும் செல்லவுள்ளனர். இந்த கிரக பெயர்ச்சியால் வேலை, வணிகம், தனிப்பட்ட வாழ்க்கையில் மாற்றங்களைக் காணக்கூடும். முக்கியமாக சிலர் வேலையில் முன்னேற்ற வாய்ப்புக்களைப் பெறலாம். சிலருக்கு புதிய உறவுகள் கிடைக்கலாம் அல்லது உறவில் இருந்த பிரச்சனை விலகி சந்தோஷமும், பிணைப்பும் அதிகரிக்கலாம்.

சனி வக்ர நிவர்த்தி 2026

ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியதால் சனி பகவான் நீதிமான் என்று அழைக்கப்படுகிறார். இப்படிப்பட்ட சனி பகவான் தற்போது மீன ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். இந்நிலையில் டிசம்பர் 11 ஆம் தேதி சனி பகவான் மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் பயணத்தை தொடங்கவுள்ளார். இதனால் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். தொழில் ரீதியாக நல்ல வெற்றியும், லாபமும் கிடைக்கும்.

குரு வக்ர பெயர்ச்சி 2026

தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான் அக்டோபர் 31 ஆம் தேதி தான் சிம்ம ராசியில் நுழைந்தார். இந்நிலையில் டிசம்பர் 13 ஆம் தேதி குரு பகவான் சிம்ம ராசியில் வக்ர நிலையில் தனது பயணத்தை தொடங்கவுள்ளார். குரு பகவான் வக்ரமடைவதால், வாழ்வின் சில பகுதிகளில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம். மாணவர்கள் வெற்றி காண படிப்பில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டியிருக்கும். வேலை மற்றும் வணிகத்தில் உள்ளவர்கள் அவசர முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

சூரிய பெயர்ச்சி 2026

கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் மாதந்தோறும் ராசியை மாற்றுவார். அந்த வகையில் டிசம்பர் 16 ஆம் தேதி சூரியன் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்குள் நுழையவுள்ளார். குரு பகவானின் தனுசு ராசிக்குள் சூரியன் செல்வதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். முக்கியமாக இந்த சூரிய பெயர்ச்சியால் திறன்களை வெளிப்படுத்தி முன்னேற்றத்தைக் காண வாய்ப்புள்ளது. வேலை மற்றும் அரசு தொடர்பான விஷயங்களில் மாற்றங்கள் ஏற்படலாம். ஆனால் இக்காலத்தில் திருமணங்கள், கிரக பிரவேசம் போன்ற சுப காரியங்கள் எதுவும் நடைபெறாது.

டிசம்பர் 2026 அதிர்ஷ்ட ராசிகள்

டிசம்பர் மாத கிரகங்களின் பெயர்ச்சிகளால் 5 ராசிக்காரர்கள் நல்ல பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. அந்த ராசிக்காரர்களாவன ரிஷபம், மேஷம், சிம்மம், மிதுனம், மகரம். இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் இந்த மாதத்தில் தங்களின் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். பணப் பிரச்சனைகள் தீர்ந்து, நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. முக்கியமாக தடைபட்டு வந்த வேலைகள் வெற்றிகரமாக நடக்க வாய்ப்புள்ளது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Friday, November 20, 2026, 10:27 [IST]
Desktop Bottom Promotion