Latest Updates
-
குளிர்காலத்தில் சருமத்தை ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்கும் 5 பழங்கள் - மறக்காம சாப்பிடுங்க -
இந்த 4 ராசி ஆண்கள் காரணமே இல்லாமல் மிகவும் கோபப்படுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃப்ரிஸி ஹேர் பிரச்சனையா? அப்ப முடியை மென்மையாக வைத்திருக்க டாக்டர் கூறும் டிப்ஸ் இதோ! -
பழங்கள் ப்ரெஷாக இருந்தாலும் அதற்குள் புழுக்கள் இருக்க காரணம் என்ன? அவை எப்படி பழத்திற்குள் செல்கிறது தெரியுமா? -
சிம்ம ராசியில் வக்ரமாகும் குருபகவான்: இந்த 4 ராசிக்கு பேன்க் பேலன்ஸ் டபுள் ஆகப்போகுது! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்தியாவில் சூரியன் முதலில் உதிக்கும் இடம் எது தெரியுமா? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
மதியம் 10 நிமிடத்தில் சமையலை முடிக்கணுமா? அப்ப இந்த கத்திரிக்காய் முருங்கைக்காய் மசாலா செய்யுங்க.. -
வேர்க்கடலை வைச்சு வெங்காயம், தக்காளி இல்லாம இப்படி கார குழம்பு வைச்சு பாருங்க - சுருக்குனு செமையா இருக்கும் -
ஒல்லியாக இருந்தாலும் கொழுப்புக் கல்லீரல் பாதிப்பு ஏற்படுமா? டாக்டர் என்ன சொல்றாருன்னு பாருங்க.. -
60 லட்சம் உடல்கள் புதைக்கப்பட்டுள்ள உடலின் மிகப்பெரிய சுடுகாடு எந்த நாட்டில் உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
வீட்டில் பணம் பெருக வேண்டுமா? அப்ப ஃபெங் சூயி சொல்லும் இந்த 5 அதிர்ஷ்ட பொருட்களை வாங்கி வையுங்க..
Feng Shui Tips In Tamil: இந்தியாவில் எப்படி வாஸ்து சாஸ்திரமோ, அதேப் போல் சீனாவில் பிரபலமானது தான் ஃபெங் சூயி. இவ்விரண்டுமே வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கவும், வாழ்க்கை செழிப்பாகவும் இருக்க பல வழிமுறைகளை பரிந்துரைக்கின்றன. குறிப்பாக, சீன பாரம்பரிய நம்பிக்கையான ஃபெங் சூயி, வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரித்து, அதிர்ஷ்டத்தையும் செல்வச் செழிப்பையும் ஈர்க்க உதவும் சில பொருட்களை வைத்திருக்கப் பரிந்துரைக்கிறது.

ஃபெங் சூயி முறையின்படி, வீட்டில் நாம் வைத்திருக்கும் சில குறிப்பிட்ட பொருட்கள் செல்வம், அதிர்ஷ்டம், ஆரோக்கியம் மற்றும் வளமான வாழ்க்கையின் அடையாளங்களாகக் கருதப்படுகின்றன. இவை வீட்டின் ஆற்றலைச் சமநிலைப்படுத்தி, நேர்மறையான சூழலை உருவாக்க உதவும் என்பது பாரம்பரிய நம்பிக்கை. அதிலும் குறிப்பாக, பணவரவு அதிகரிக்கவும், நிதி நிலைமை மேம்படவும் உதவும் என்று நம்பப்படும் சில அதிர்ஷ்டப் பொருட்கள் உள்ளன. இப்போது ஃபெங் சூயி படி, வீட்டில் செல்வத்தையும், செழிப்பையும் மேம்படுத்த வைக்க வேண்டிய அதிர்ஷ்ட பொருட்கள் எவையென்பதைக் காண்போம்.
1. சிரிக்கும் புத்தர்
வீட்டில் நேர்மறை ஆற்றல் ஓட்டம் அதிகரிக்கவும், செல்வத்தை மேம்படுத்தவும், கையில் பணக்கட்டை வைத்திருக்கும் சிரிக்கும் புத்தர் சிலையை வாங்கி வைக்க வேண்டும். இது நிதி ரீதியான நன்மைகளை வழங்கும். அதுவும் இந்த சிலையை வீட்டின் தென்கிழக்கு திசையில் வைக்க வேண்டும். இப்படி வைப்பதனால் அந்த திசையின் நேர்மறை ஆற்றலை அதிகரித்து, செல்வத்தையும் மகிழ்ச்சியையும் ஈர்க்கும்.
2. காற்று மணிகள் (Wind Chimes)
ஃபெங் சூயி சாஸ்திரத்தின் படி, வீட்டில் காற்று மணிகளை வாங்கி தொங்கவிடுவது நல்லது. ஏனெனில் இதை வீட்டில் தொங்கவிடும் போது, காற்றின் மூலம் எழுப்பப்படும் இனிமையான ஒலி வீட்டில் நேர்மறையான ஆற்றல் ஓட்டத்தை அதிகரிக்கும். இப்படி வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகம் நிறைந்திருந்தால், அந்த வீடு செல்வ செழிப்போடு இருக்கும். அதற்கு இந்த காற்று மணிகளை வீட்டின் பிரதான கதவு அல்லது ஜன்னலுக்கு அருகில் தொங்கவிட வேண்டும்.
3. ஆமை
ஃபெங் சூயி படி, ஆமைகள் வீட்டில் மகிழ்ச்சி, செல்வம், செழிப்பு, முன்னேற்றம் ஆகியவற்றை கொண்டு வரும் மங்களகரமான பொருளாக கருதப்படுகின்றன. அதுவும் உலோக ஆமையை வீட்டில் வாங்கி வைக்கும் போது, அது வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளை நீக்கும். மேலும் இந்த ஆமை வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், எதிரிகளை வெல்வதற்கும் உதவுகிறது. வீட்டில் செல்வம் அதிகரிக்க வேண்டுமானால், ஒரு உலோக ஆமையை நீர் நிரப்பப்பட்ட கண்ணாடி ஜாடியில் வைத்து, வீட்டின் வடக்கு திசையில் வையுங்கள்.
4. ஃபெங் சூயி நாணயம்
ஃபெங் சூயி சாஸ்திரத்தின் படி, சீன நாணயங்கள் நேர்மறை ஆற்றலையும், செழிப்பையும் குறிக்கின்றன. இப்படிப்பட்ட நாணயங்களை வீட்டின் நுழைவாயிலில் தொங்கவிடும் போது, அது வறுமையை நீக்கி, வீட்டிற்கு செல்வத்தை கொண்டு வருவதாக நம்பப்படுகிறது. ஒருவேளை தொழில் வாழ்க்கையில் கொடிகட்டி பறக்க விரும்பினால், ஃபெங் சூயி நாணயங்களை ஒரு முக்கோண வடிவில் கட்டி வையுங்கள். இல்லாவிட்டால் வேலை செய்யும் இடத்தில் உள்ள ட்ராயரில் 10 நாணயங்களைக் கொண்ட ஒரு கட்டை வைத்திருப்பதும் நல்ல பலனைத் தரும்.
5. மூங்கில் செடி
ஃபெங் சூயி படி, வீட்டில் மூங்கில் செடியை வைத்திருப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த செடியானது வீட்டிற்கு நேர்மறை ஆற்றலை கொண்டு வந்து, வீட்டில் மகிழ்ச்சி, செல்வம், செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வருவதாக நம்பப்படுகிறது. மேலும் இந்த மூங்கில் செடி நல்ல வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் கொண்டு வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
