Latest Updates
-
பழங்கள் ப்ரெஷாக இருந்தாலும் அதற்குள் புழுக்கள் இருக்க காரணம் என்ன? அவை எப்படி பழத்திற்குள் செல்கிறது தெரியுமா? -
சிம்ம ராசியில் வக்ரமாகும் குருபகவான்: இந்த 4 ராசிக்கு பேன்க் பேலன்ஸ் டபுள் ஆகப்போகுது! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்தியாவில் சூரியன் முதலில் உதிக்கும் இடம் எது தெரியுமா? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
மதியம் 10 நிமிடத்தில் சமையலை முடிக்கணுமா? அப்ப இந்த கத்திரிக்காய் முருங்கைக்காய் மசாலா செய்யுங்க.. -
வேர்க்கடலை வைச்சு வெங்காயம், தக்காளி இல்லாம இப்படி கார குழம்பு வைச்சு பாருங்க - சுருக்குனு செமையா இருக்கும் -
ஒல்லியாக இருந்தாலும் கொழுப்புக் கல்லீரல் பாதிப்பு ஏற்படுமா? டாக்டர் என்ன சொல்றாருன்னு பாருங்க.. -
60 லட்சம் உடல்கள் புதைக்கப்பட்டுள்ள உடலின் மிகப்பெரிய சுடுகாடு எந்த நாட்டில் உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
டிசம்பர் மாதத்தில் இந்த 5 ராசிக்கு மகத்தான வெற்றியும், பணமும் குவியப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
பன் தோசையும், பொட்டுக்கடலை சட்னியும் - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 20, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு லாபம் கொட்டும் நாளாக இருக்குப்போகுதாம்
ஃப்ரிஸி ஹேர் பிரச்சனையா? அப்ப முடியை மென்மையாக வைத்திருக்க டாக்டர் கூறும் டிப்ஸ் இதோ!
Frizzy Hair In Tamil: ட்ரை ஸ்கால்ப், ட்ரை ஹேர் பற்றி பலரும் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், ஃப்ரிஸி ஹேர் (Frizzy Hair) என்றால் என்ன தெரியுமா? எவ்வளவுதான் சீவி, தலைமுடியை சீர் செய்தாலும் முடி அடங்காமல் பறந்து கொண்டே இருப்பதாகும். குறிப்பாக, ஈரப்பதம் அதிகம் உள்ள காலநிலையில் வசிப்பவர்களுக்கு இந்தப் பிரச்சனை அதிகமாக இருக்கும். தலைமுடி வறண்டு, சிக்கலாகவும், பொலிவிழந்தும் காணப்படுவது பலருக்கும் பெரும் எரிச்சலை ஏற்படுத்தும்.
ஃப்ரிஸி ஹேர் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன? வீட்டில் நாம் செய்யும் எந்தெந்த தவறுகள் முடியை மேலும் வறட்சியாக்குகின்றன? இந்தப் பிரச்சனையை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பது குறித்து கன்சல்டன்ட் டெர்மட்டாலஜிஸ்ட் டாக்டர். ராதா சுப்பிரமணியன் சில முக்கியமான ஆலோசனைகளை தனது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஃப்ரிஸி ஹேர் என்றால் என்ன? ஏன் ஏற்படுகிறது?
முடி வறண்டு, சீரற்ற முறையில் வெளியே பறப்பது போலவும், கட்டுப்படுத்த முடியாத வகையிலும் காணப்படுவதைத் தான் ஃப்ரிஸி ஹேர் என்கிறோம். இதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று மரபணு. பெற்றோருக்கு வறண்ட அல்லது ஃப்ரிஸியான முடி இருந்தால், அவர்களின் குழந்தைகளுக்கும் இந்தப் பிரச்சனை ஏற்படலாம்.
அதேபோல், நாம் வாழும் சுற்றுச்சூழலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதிக ஈரப்பதம் கொண்ட காலநிலை, மிகவும் வறண்ட சூழல் போன்றவை முடியின் தன்மையைப் பாதிக்கலாம். அடிக்கடி ஹேர் கலரிங், ஹேர் டை மற்றும் கெமிக்கல் ட்ரீட்மென்ட்களை மேற்கொள்வதும் முடியின் இயற்கையான அமைப்பை மாற்றி வறட்சியை அதிகரிக்கலாம்.
ஃப்ரிஸி ஹேர் அதிகரிக்க பலரும் செய்யும் தவறுகள்
* மிகவும் சூடான நீரில் தலைமுடியைக் குளிப்பது
* ஷாம்புவை நீண்ட நேரம் தலையில் ஊற வைத்திருப்பது
* முடி வறண்டு இருந்தாலும் கண்டிஷனர் பயன்படுத்தாமல் தவிர்ப்பது
* ஹேர் ஸ்க்ரப் போன்ற கரகரப்பான பொருட்களைக் கொண்டு முடியைத் தேய்ப்பது
* குளித்த பிறகு நீண்ட நேரம் ஈரமான முடியுடனேயே இருப்பது
* ஈரமான முடியிலேயே ஹீட் ஸ்டைலிங் கருவிகளைப் பயன்படுத்துவது
இந்தப் பழக்கங்கள் முடியின் வெளிப்புறப் பாதுகாப்பு அடுக்கைப் பாதித்து, முடியை மேலும் வறண்டதாகவும் ஃப்ரிஸியாகவும் மாற்றக்கூடும்." என்று டாக்டர் கூறினார்.
ஃப்ரிஸி ஹேரை கட்டுப்படுத்த 5 முக்கிய வழிகள்!
ஃப்ரிஸி ஹேரை கட்டுப்படுத்துவதற்கு டாக்டர் ராதா சுப்பிரமணியன் கூறியவைகள் பின்வருமாறு:
1. தலைக்குக் குளிப்பதற்கு முன் எண்ணெய் தடவுங்கள்: முடி வறண்டு, ஃப்ரிஸியாக இருந்தால் தேங்காய் எண்ணெய், ஆர்கன் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் போன்றவற்றை முடியின் நீளத்தில் தடவலாம். தலைக்குக் குளிப்பதற்கு 30 முதல் 45 நிமிடங்களுக்கு முன்பு எண்ணெய் தடவி, பின்னர் ஷாம்பு பயன்படுத்தி அலசலாம். எண்ணெயை ஸ்கால்ப்பில் தடவ வேண்டிய அவசியமில்லை.
2. கண்டிஷனர் பயன்படுத்துங்கள்: ஒவ்வொரு முறை ஷாம்பு பயன்படுத்திய பிறகும் முடியின் நீளத்திற்கும் நுனிகளுக்கும் ஏற்ற கண்டிஷனரைப் பயன்படுத்துவது அவசியம். இது முடியின் ஈரப்பதத்தைப் பராமரித்து, வறட்சியையும் சிக்கலையும் குறைக்க உதவும்.
3. ஹேர் சீரம் பயன்படுத்துங்கள்: ஈரப்பதம் உள்ள முடியிலேயே ஆர்கன் ஆயில் அல்லது மொராக்கன் ஆயில் அடிப்படையிலான ஹேர் சீரத்தை முடியின் நடுப்பகுதி முதல் நுனி வரை தடவலாம். இது ஃப்ரிஸைக் கட்டுப்படுத்தவும் முடியை எளிதாகப் பராமரிக்கவும் உதவும்.
4. முடி வெடிப்பை அகற்றுங்கள்: முடியின் நுனிகள் இரண்டாகப் பிளந்திருந்தால், அவற்றை இழுத்துப் பிரிக்கக் கூடாது. முறையாக மாய்ஸ்சரைஸ் செய்வதுடன், பிளவுபட்ட நுனிகளை ட்ரிம் செய்வது நல்லது.
5. சாட்டின் அல்லது சில்க் துணிகளைப் பயன்படுத்துங்கள்: இரவில் தூங்கும் போது முடியை மிகவும் இறுக்கமாகக் கட்ட வேண்டாம். தளர்வான பின்னல் போட்டு சாட்டின் அல்லது சில்க் ஹேர் பேண்டுகளைப் பயன்படுத்தலாம். சாட்டின் அல்லது சில்க் தலையணை உறைகளும் முடிக்கும் தலையணைக்கும் இடையிலான உராய்வைக் குறைத்து, ஃப்ரிஸைக் கட்டுப்படுத்த உதவும்.
கெரட்டின் ட்ரீட்மென்ட் செய்தால் ஃப்ரிஸி ஹேர் நீங்குமா?
"முடியின் இயற்கையான அமைப்பு சுருட்டையாகவோ, அலை அலையாகவோ இருந்தால் அதை முழுமையாக மாற்ற முடியாது. ஸ்ட்ரெய்டனிங் மற்றும் கெரட்டின் போன்ற சிகிச்சைகள் தற்காலிகமாக முடியை மென்மையாகவும் நிர்வகிக்க எளிதாகவும் மாற்றலாம். ஆனால், இவற்றின் பலன் நிரந்தரமானது அல்ல. அடிக்கடி கெமிக்கல் ட்ரீட்மென்ட்களை மேற்கொள்வது முடியை மேலும் சேதப்படுத்தும் வாய்ப்பும் உள்ளது.
எனவே, ஃப்ரிஸி ஹேர் பிரச்சனையைச் சரிசெய்ய அதிகப்படியான சிகிச்சைகளை நாடுவதை விட, சரியான ஹேர் கேர் முறைகளைப் பின்பற்றுவது அவசியம். ஈரமான முடியுடன் நீண்ட நேரம் இருக்காமல், முடியை மென்மையாக உலர்த்தி, சரியான சீரம் மற்றும் பாதுகாப்பான ஹேர் ஸ்டைலிங் முறைகளைப் பின்பற்றினால் முடியின் ஃப்ரிஸைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கலாம்." என்று டாக்டர் கூறினார்.



Click it and Unblock the Notifications

