Latest Updates
-
இந்தியாவில் சூரியன் முதலில் உதிக்கும் இடம் எது தெரியுமா? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
மதியம் 10 நிமிடத்தில் சமையலை முடிக்கணுமா? அப்ப இந்த கத்திரிக்காய் முருங்கைக்காய் மசாலா செய்யுங்க.. -
வேர்க்கடலை வைச்சு வெங்காயம், தக்காளி இல்லாம இப்படி கார குழம்பு வைச்சு பாருங்க - சுருக்குனு செமையா இருக்கும் -
ஒல்லியாக இருந்தாலும் கொழுப்புக் கல்லீரல் பாதிப்பு ஏற்படுமா? டாக்டர் என்ன சொல்றாருன்னு பாருங்க.. -
60 லட்சம் உடல்கள் புதைக்கப்பட்டுள்ள உடலின் மிகப்பெரிய சுடுகாடு எந்த நாட்டில் உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
டிசம்பர் மாதத்தில் இந்த 5 ராசிக்கு மகத்தான வெற்றியும், பணமும் குவியப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
பன் தோசையும், பொட்டுக்கடலை சட்னியும் - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 20, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு லாபம் கொட்டும் நாளாக இருக்குப்போகுதாம் -
நாளை உருவாகும் விஷ யோகம்: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. அவசரப்படக்கூடாது.. -
சூரியன் தனுசு ராசிக்குள் செல்வதால் கோடிகளில் புரளப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா?
சிம்ம ராசியில் வக்ரமாகும் குருபகவான்: இந்த 4 ராசிக்கு பேன்க் பேலன்ஸ் டபுள் ஆகப்போகுது! உங்க ராசி இதுல இருக்கா?
Jupiter Retrograde In Leo On 13 December 2026: ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இவர் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார். ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றும் குரு பகவான் தற்போது சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் அதிசாரமாக குரு பகவான் சிம்ம ராசிக்குள் அக்டோபர் 31 ஆம் தேதி நுழைந்துள்ளார். இந்நிலையில் இந்த குரு பகவான் டிசம்பர் மாதத்தில் சிம்ம ராசியில் வக்ரமாகவுள்ளார்.

இந்த வக்ர நிலையில் குரு பகவான் சுமார் 122 நாட்கள் இருக்கப் போகிறார். அதன் பின் 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வக்ர நிவர்த்தி அடைவார். இப்படி குரு பகவான் சிம்ம ராசியில் வக்ரமாவதால் அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக 4 ராசிக்காரர்களுக்கு குரு வக்ரமாவதால் வாழ்வில் பல அதிசயங்கள் நடக்கப் போகிறது. அதுவும் இந்த ராசிக்காரர்களின் வங்கி இருப்பு இரட்டிப்பாகும். இப்போது சிம்ம ராசியில் குரு பகவான் வக்ரமாவதால் எந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 4 ஆவது வீட்டில் குரு பகவான் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். முக்கியமாக நிதி நிலை மேம்படும். மாணவர்கள் நல்ல செய்திகளைப் பெறுவார்கள். பல புதிய வழிகளின் மூலம் பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு எதிர்பாராத அளவில் நல்ல லாபம் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 11 ஆவது வீட்டில் குரு பகவான் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நிதி ரீதியாக நல்ல லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைப்பதோடு, நிதி ஆதாயங்களும் கிடைக்கும். கடின உழைப்புக்கான பலனை இக்காலத்தில் பெறுவீர்கள். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டப்படும்.
மகரம்
மகர ராசியின் 8 ஆவது வீட்டில் குரு பகவான் வக்ரமாகவுள்ளார். எனவே இந்த ராசிக்காரர்கள் டிசம்பர் 13 முதல் நிதி ரீதியாக பல நல்ல செய்திகளைப் பெறுவார்கள். பல வழிகுளில் இருந்து பணம் தேடி வரும். நீண்ட காலமாக சிக்கிய பணமும் கைக்கு வந்து சேரும் வாய்ப்புள்ளது. சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வீட்டு சூழல் மகிழ்ச்சியாகவும், நேர்மறை ஆற்றல் நிறைந்தும் இருக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 7 ஆவது வீட்டில் குரு பகவான் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வங்கி இருப்பு அதிகரிக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம். ஒவ்வொரு விஷயத்திலும் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
